Wednesday, September 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கோவையில் பொதுமக்கள் முன் சாலையில் நடந்த கொடூரக் கொலை – வீடியோ

கோவையில் பட்டபகலில் 29 வயதான சந்தோ ஷ்குமார் என்ற வலிபர் சாலையில் கொடுர மான முறையில் அடித்து கொலை செய்யப் பட்டார். இந்த கொலை சம்பவம் மேட்டுப் பாளையம் ஏ.ஆர்.சி. சிக்னலில் இருந்த சிசி டிவி கமெராவில் பதிவானது.


மதுக்கடையில் நடந்த பிரச்சனை காரணமாக சந்தோஷ்குமாரை சாலையில் மோட்டர் வாகனத்தில் இடித்து பின் நான்கு பேர் அடித்து கிழே தள்ளினார்கள். கிழே விழுந்த சந்தோஷ்குமாரை குடிபோதையில் அந்த நான்கு பேரும் வெறித்தனமாக அடித்து தாக்கினர்கள். படுகாய மடைந்த சந்தோஷ்குமாரை கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போய்ச் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்து விட்டார்.

சிக்னலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவின் மூலம் இந்த கொடூரச் சம்பவம் செய்தவர்களான கிருஷ்ணன், ராமச்சந்திரன், முருகன், கணேசன் ஆகிய நான்கு போரையும் அடையாளம் கண்டு பொலிசார் கைது செய்தனர்.

இந்தக் கொடூரச் சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த சந்தோஷ் குமா ரின் மனைவி சரோஜா மற்றும் உறவினர்கள், நண்பர்கள் பிண த்தை வாங்க மறுத்து மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடு பட்டனர். தகவல் அறிந்த பொலிசார் மருத்துவமனைக்கு வந்து அவர்களை கலைந்துபோகச் செய்தனர். உடனே அவர்கள் குற்ற வாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், சரோஜாவுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

சந்தோஷ்குமார் குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், ரூ. 5 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண் டும் என்றும் அவர்கள் கோஷமிட்டனர். பொலிஸ் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோகச் செய்தனர்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Comment

  • sureshKumarNataraj

    என்னக் கொடுமை இது? ஒரு மனிதனை மூன்று பேர் கொடூரமாக தாக்குவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு செல்லும் பொதுமக்களை நினைக்கும் போது அந்த கொடூரமாக தாக்கியவர்களை வேடிக்கை பார்த்தவர்களைத்தான் தண்டிக்க வேண்டும் அப்போதுதான் வேறு எந்த இடத்தில் இது போன்றதொரு சம்பவம் நடைபெறாமல் இருக்க வாய்ப்புண்டு

Leave a Reply