Sunday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முதலிரவு அறைக்குள் மணப்பெண் தற்கொலை

தூத்துக்குடி கோல்டன் நகரைச் சேர்ந்தவர் சுந்தரவேல். இவரது மகள் வள்ளியம்மாள். இவருக்கும் தூத்துக்குடி சத்தியா நகரைச் சேர்ந்த உப்பள தொழிலாளி ராம் குமார் என்பவருக்கும் கட ந்த 3 மாதங்களுக்கு முன் பு திருமணம் நிச்சயிக்க ப்பட்டது.

இவர்களது திருமணம் சத் யா நகரிலுள்ள மாப்பிள் ளை வீட்டில் நேற்று நடந்தது. முதலிரவுக்கான ஏற்பாடுகள் கோல் டன் நகரில் உள்ள பெண் வீட்டில் செய்யப்பட்டிருந்தன. இரவு 10 மணிக்கு முதலிரவு அறைக்குள் புதுப்பெண் வள்ளியம்மாள் சென் றார்.

அப்போது தனது கணவரிடம் தலைவலிப்பதாக கூறினார். அதற்கு அவர் வேண்டுமானால் உன் தாயுடன் சென்று படுத்துக்கொள் என கூறினார். வள்ளியம்மாளும் தனது தாயுடன் சென்று படுத்துக் கொண்டார்.

நள்ளிரவு 12 மணி அளவில் வள்ளியம்மாளை முதலிரவு அறை க்குள் சென்று கணவருடன் படுத்துக் கொள்ளுமாறு தாய் கூறி னார். உடனே அவரும் முதலிரவு அறைக்குள் சென்று தரையில் படுத்துக் கொண்டார்.

இந்நிலையில் 12/04/2001 அதி காலை சுமார் 4 மணி அளவில் வள்ளியம்மாள் முனங்கியபடி இருந்தார். உடனே கணவர் எழுந்து பார்த்த போது வாயில் நுரை தள்ளியபடி வள்ளியம்மாள் கிடந்தார்.

அவரது அருகில் விஷ பாட்டில் கிடந்தது. உடனே அவரை தூத்து க்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனி ன்றி இறந்தார். இது குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழ க்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply