Friday, March 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இன்று சென்னை திரும்புகிறார் ரஜினி.. வரவேற்க, ரசிகர்கள் பிரமாண்ட ஏற்பாடு!!

ன்று (புதன்கிழமை) சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை திரும் புகிறார். இதையொட்டி அவரு க்கு பிரமாண்ட வரவேற்பு அளி க்க ரசிகர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். இரு மாதங்களு க்கு முன் ராணா என்ற புதிய படத்துக்கு பூஜை போட்டார் ரஜி னி. இந்தப் படத்துக்கு பட்ஜெட் 120 கோடி ரூபாய்.

ரஜினியின் மகள் சௌந்தர்யா வும் ஈராஸ் இன்டர்நேஷனலும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார் ரஜினி. தீபிகா படுகோன் ஜோடி. கேஎஸ் ரவிக்குமார் இயக்குகிறார். இந்தப் படத்தின் துவக்க விழா வன்றுதான் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போ னது.

மூச்சுத் திணறல், செரிமானக் கோ ளாறு என்று ஆரம்பித்தது பிரச்சி னை. படப்பிடிப்புத் தளத்திலிரு ந்து உடனே வெளியேறிய ரஜினி, உட னடியாக சென்னை இசபெல்லா மரு த்துமனையில் சேர்ந்தார். அன்று மாலையே அவர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார்.

ஆனால் மீண்டும் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட, மீண்டும் அதே மருத்துவமனையில் சேர்க் கப்பட்டார். ஒரு வார சிகிச்சை க்குப் பின் காளிகாம்பாள் கோயி லுக்குப் போய் சிறப்பு பூஜையும் பெசன்ட் நகர் தேவாலயத்தில் சிற ப்பு வழிபாடும் முடித்து வீட்டுக்கு வந்தார். ஆனால் மே 13ம் தேதி அவரது உடல்நிலை மோசமடை ந்தது. உடனடியாக அவர் சென்னை ராமச்சந்திரா மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. முழு உடல் பரி சோதனை நடத்தி, பிரச்சினைகளைக் கண்டறிந்தனர். அவருக்கு சிறு நீரகக் கோளாறும், நுரை யீரலில் நீர்க்கோர்ப்பும் இருப் பது தெரிய வந்தது. நுரை யீரலில் இருந்த நீரை வெளி யேற்றினர். ஆனாலும் சீராக வில்லை. எனவே உடனடி யாக அவருக்கு டயாலிஸிஸ் செய்யப்பட்டது. சென்னை யில் மட்டும் தொடர்ந்து 5 முறை டயாலி ஸிஸ் செய்ய ப்பட்ட பிறகு, அவர் ஓரளவு இயல்பு நிலைக்கு திரு ம்பினார்.

ஆனாலும், அவரது சிறுநீரகங்கள் இயங்கவில்லை. எனவே சிங்கப் பூரில் உள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவ மனைக்கு கொண்டு செல் லப்பட்டார். உடன் சென்னையிலிருந்து சிறுநீரக ஸ்பெ ஷலிஸ் டுகளும் சென்றனர். மே 28ம் தேதி அவர் சிங்கப்பூர் மருத்துவ மனையில் சே ர்க்கப்பட்டார். அங்கும் அவருக்கு மூன்று முறை டயாலிஸிஸ் செய்தனர்.

அதன் பிறகு இந்த பிரச்சினையின் மூல காரணத்தைக் கண்டு பிடித்துவிட்டனர் சிங்கப்பூர் மருத்துவர்கள். அதன் பிறகு, அந்த பிரச்சினைக்கு மட்டும் சிகிச்சை அளிக்க, படிப்படியாக அவரது உடல்நிலை சீரடையத் தொடங்கியது. ரசிகர்கள் கண் ணீர் பிரார்த்தனை இதற்கிடையே ரஜினி யின் உடல்நிலை சீரடைய வேண்டி, உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பிரார்த் தனையில் தீவிரமாக ஈடுபட்டனர்.

கோயில்களில் அன்னதானம், மண் சோறு சாப்பிடுதல், தீமிதித்தல், சர்வ மத பிரார்த்தனைகள், உலகளாவிய கூட்டுப் பிரார்த்தனைகள், பாதயாத் திரை என அவரவருக்குத் தெரிந்த வழி களில் பிரார்த்தனை நடத்தினர். இது வரை கிட்டத்த 2 லட்சத்துக்கும் அதிக மான முறை பிரார்த்தனைகள் ரஜினி க்காக நடத்தப்பட்டன.

நலமடைந்தார்…

இன்னொரு பக்கம் சிங்கப்பூர் மருத்துவ மனையில் ரஜினி பூரண நலமடைந் தார், கடந்த ஜூன் 14ம் தேதியே அவர் டிஸ்சார்ஜ் ஆகி விட்டார். ஆனாலும் தொடர்ந்து அவரது உடல்நிலையைக் கண் காணிக்க, சிங்கப்பூர் மருத்துவமனைக்கு அருகாமை யில் உள்ள குடியிருப்பில் வாடகை வீட் டில் ஒரு மாத காலம் தங்கி மருத்துவ ஆலோசனை பெற்றார். பூரண ஓய்வெ டுத்து வந்தார்.

சில தினங்களுக்கு முன் அவரை சோதித்த மருத்துவர்கள், இனி அவர் சென்னை திரு ம்பலாம். படங்களில் முன்புபோல நடிக்க லாம் என கிரீன் சிக்னல் கொடுத்தனர். இந்தத் தகவல் அவரது ரசிகர்களை துள்ள வைத்தது. எப்போது அவர் சென்னை திரு ம்புவார் என காத்திருந்தனர் ரசிகர்கள். அவர் திரும்பும் தேதியை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என லதா ரஜினியி டம் நேரில் தெரிவித்தனர். அவரும் அதற்கு தனது ஒப்புதலைத் தெரிவித்தார். இப்போது ரஜினி சென்னை திரு ம்பும் தேதி ஜூலை 13 என உறுதியாக தெரிவிக் கப்பட்டுள்ளது.

பிரமாண்ட வரவேற்பு

இந்த செய்திக்காகவே காத்திருந்த அவரது ரசிகர்கள், சென்னையி ல் அவருக்கு பிரமாண்ட வரவேற்பளிக்க தயா ராகி வருகின்றனர். சென்னை மன்ற நிர்வாகி கள் என் ராமதாஸ், சைதை ஜி. ரவி போன்ற வர்கள் கட் அவுட்கள், பேனர்களை தயார் செய்து வருகி ன்றனர். மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து அவரது வீடு அமைந்துள்ள போயஸ் கார்டன் வரை வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ன்று (புதன்கிழமை) இரவு விமானத்தில் அவர் சென்னை திரும்பு கிறார். அவர் சென்னை திரும்பியதும் ராணா படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து ரஜினியிடமிருந்து விரி வான அறிக்கை வரக்கூடும் என்று தெரிகிறது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: