Saturday, August 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உடலுக்கேற்ற உணவா?, உணவுக்கேற்ற உடலா?

உடலுக்கேற்ற உணவே சிறந்தது

நம் உடல் நம் தாயின் வயிற்றில் கருவாக உருப்பெரும் முதல் மரணம் வரை இயங்கிக் கொண்டே உள்ளது. உடல் இயக்கத்திற்குத் தேவையான சத்துக்கள் உணவின் மூலமே கிடைக்கின்றன. தாயின் வயிற்றில் கருவாக, உயிர்பெற்று, கரு வளர்ச்சிக்குக் காரணமான உண வு, கருப்பையில் குழந்தையோடு வளரும் ‘நஞ்சு’ (உண்மை யில் அது நஞ்சல்ல, உணவுச் சேமிப்பு கிடங்கு) மூலம் தாய் உட் கொள்ளும் உணவு குழந்தைக்கும் செல்கிறது. நஞ்சிலி ருந்து வெளி ப்படும் தொப்புள் கொடி மூலம் குழந்தைக்கு உணவு செல்கிறது. கரு உருவாகும் பொழுது ஏற்படும் உணவுத் தேவை மரணம் வரை நிகழும் ஒரு தேவை யன்றோ!

நம் மூளையின் ஒரு பகுதியான கீழ்முகுளம் நம் உணவுத் தேவை யை கட்டுப்படுத்தும் உணர்வு களைத் தோற்றுவிக்கும் உறுப்பா கும். உடலிற்கு சத்துத்தேவை ஏற்படும்பொழுது இப் பகுதி அதை உணர்ந்து வயிற்றிற்குச் செல்லு ம் நரம்புகளை தூண்டி விடுகின் றன. உடனே நமக்கு பசி உணர்வு ஏற்படுகிறது. நாமும் உணவை நாடு கிறோம். எல்லா உயிரிகளு க்கும் பொதுவான ஒரு நிகழ் வாக உள்ளதே இந்த நிலை தான். பொதுவாக ‘பசி’ என்ற நி லை இல்லாவிடில் நாம் உண் ண வேண்டும் என்றே நினைக்க மாட்டோம்’. ‘பசித்தபின் புசி’ என்ற பழமொழியும் நாமறி வோம். பொதுவாக ‘பசி உண ர்வு’ என்பது மகிழ்ச்சியான உண ர்வல்ல.

கீழ்முகுளத்தால் உடல் சோர்வு உணரப்படும் பொழுது, மேல் வயிற் றிற்குச் செல்லும் நரம்புகள் தூண்டப்படுகின்றன. இந்த நரம் புகள் தூண்டுதல், மனச் சோர்வு, உடல் சோர்வு ஆகி யவற்றை அதிகரிப்பதுடன், எரிச்சல், கோ பம், ஆத்திரம் போன்றவற்றை யும் ஏற்படுத்தும். சில நேரங்க ளில் தலை வலி, குமட்டல் போன்றவையும் ஏற்படும். வயி று புரட்டல், மேல் வயிற்று வலி போன்றவையும் கூட சிலருக்கு உண் டாகும். இந்த நரம்புத் தூண்டுதலால் வயிறு சுருங்கி விரியும். இதனால் வயிற்றுப் பகுதி மட்டுமல்லாது, வயி ற்று குடல் இணைப்புப் பகுதியும் சுருங்கி விரி யும். இதை ‘பசி சுருங்கல்’ என்று அழைப்பர். இது நிகழும் போழுது பசி உணர்வு மேலும் அதிக ப்படும்.

சற்று நேரத்தில் தானாகவே இந்த சுருங்கல்கள் அடங்கிவிடும். கான்சர் போன்ற நோய்களில் இந்த சுருங்கல்கள் முழுமையாக நிகழாது. இத னால் பசி உண்டாகாது. சிலவகை நோய்களில் ‘பசி யின்மை’ ஏற்படுவது மட்டுமன்றி உணவின் மீது வெறுப்பும் கூட உண்டாகும். இவ்வகை நோயாளிகள் உணவு எடுத்துக்கொள்ள மிகவும் தொல்லைப்படுவர். ஆக பசியுணர்வு நம் உடலின் ஓர் அவசியத் தேவையெனில் மிகை யாகாது.

உண்ணும் விருப்பம்: பசி உணர்வு ஒரு தொல்லை யான உணர் வெனில் உண்ணும் விருப்பம் ஒரு மகிழ்ச்சியான உணர் வாகும். பசி உணர்வு வயிற்றில் ஏற்படும் என் றால் உண்ணும் விருப்ப உணர்வு வாயிலும், அன் னத்திலும் தூண்டப்படும் ஓர் உணர்வாகும். சில நேரங்களில் இந்த விரு ப்ப உணர்வு பசியை தூ ண்டும் ஓர் உணர் வாகவும் இருக்கும். “அந்த உணவை நினைத் தாலே நாக்கில் எச்சில் ஊறுகிறது” என்பது நாம் அடிக்கடி நினை க்கும், கேட்கும் ஒரு வாக்கிய மாகும். சில நேரங்களில் உண வு சமைக்கும் பொழுது உண்டா கும் மணம் கூட உணவு விருப்ப உணர்வை தூண்டக் கூடியதாக இருக்கும். குறிப்பிட்ட நேரத்தி ல் உணர்வு உட்கொள்பவர்களு க்கு, குறிப்பிட்ட அந்த நேரத்தி ல் உணவு விருப்ப உணர்வை யும், பசி உணர்வையும் தானாக வாயும், வயிறும் உண்டாக்கி விடுவதை யும் நாமறிவோம்.

உணவுப் பழக்கங்கள்:

உணவுப் பழக்கங்களை பொருத் தள வில், இது ஒருவருக்கு ஒருவர் மாறுப டும். சிலர் சைவ உணவுப் பிரியர்கள். சிலர் அசைவ உணவுப் பிரியர்கள். அதி லும் கூட சிலருக்குக் கீரை பிடிக்கும், சிலருக்கு காய்கள் பிடிக்கும். சிலருக்கு ஆட்டி றைச்சி பிடிக்கும், சிலருக்குக் கோழி இறைச்சி பிடிக்கும். தனிப்பட்ட உணவு விருப்பங்களுக்கு ஏற்ப, வயிறும் அவ்வகை உணவுகளுக்குப் பழகிவிடும். சமீபத்தில் தொலைக் காட்சிகளில் ஒரு காட்சி பார்த்திருப்பீர்க ள். சென்னை பொது மரு த்து வமனையில் ஒரு நோயா ளியின் வயிற்றிலி ருந்து ஏராளமான ஆணிகள், கத் தரி, இரும்புச் சாமான்க ளை எடுத்ததாக மருத்து வர்கள் கூறியி ருந்தார்கள். உணவுப் பழக்கம் என்பது நாம் எந்த உணவுகளை வயி ற்றிற்குக் கொடுத்துப் பழகுகிறோமோ, அதைப் பொருத்தே வயிற்றின் தாங்கும், செரிக்கும் சக்தியும் உண் டாகும்.

“ஒருவேளை உணவை ஒழியென்றால் ஒழியாய்,
இருவேளை உணவை ஏளென்றால் ஏளாய்,
இடும்பை கூர் என் வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது”

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: