Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சூரியனை சுற்றி வரும் நெப்டியூன் கோள் – வீடியோ

சூரியனை சுற்றி வரும் நெப்டியூன் கோள் இந்த ஆண்டு இறுதியில் தனது முதல் சுற்றை நிறைவு செய் கிறது. சூரிய குடும்பத்தின் 8-வது கோளாக நெப்டியூன் உள்ளது. இந்த கோள் 1846-ம் ஆண்டில் விஞ்ஞானி களால் கண்டு பிடிக்கப்பட்டது.

நீல நிறத்தை கொண்ட இந்த கோள், சூரியனின் நீல் வட்டப் பாதை யில் அதிக தொலைவில் அமைந்துள்ள து. பூமி உள்ளிட்ட மாற்ற கோள்க ளைப் போலவே, நெப்டியூன் கோளு ம் சூரியனை சுற்றி வருகிறது. இந்த கோள் கண்டு பிடிக்கப்பட்டது முதல் இதன் சுழற்சியை விஞ்ஞானிகள் கண் காணித்து கணக்கிட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு கோளும், தொடக்க புள்ளியில் இருந்து சூரியனை சுற்றி அதே புள்ளியை வந்தடைய குறிப்பிட்ட காலங்களை எடுத்துக் கொ ள்ளும். பூமியானது சூரியனை சுற்றிவர 365 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. ஆனால் நெப்டியூன் கண்டு பிடிக்கப்பட்டதில் இருந்து, இன்னும் முதல் சுற்றையே பூர்த்தி செய்யவில்லை.


வருகிற டிசம்பருக்குள் தனது முதல் சுற்றை நெப்டியூன் பூர்த்தி செய்யும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அப்படி நிறைவு செய்யும் பட்சத்தில் சூரியனை ஒருமுறை சுற்றிவர இந்த கோ ளுக்கு 1,168 ஆண்டுகள் பிடித்துள்ளது உறுதிப்படுத்தப்படும்.

இந்த கோள் 1846-ல் ஜூலை 13-ம் தேதி, இந்திய நேரப்படி அதிகா லை 3 மணிக்கு கண்டு பிடிக்கப்பட்டது. எனவே, இதன் கண்டு பிடிப் பு தினம், நாளை உலகம் முழுவதும் கொண்டாட ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளன.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: