Monday, January 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்களை கவிழ்க்கும் `ரேவ்’ பார்ட்டி

இளைஞர்களிடையே இப்போது அதிகமாக உச்சரிக்கப்படும் சொல், `ரேவ் பார்ட்டி’! `ரேவ்’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு துள்ளல், ஆரவாரம் என் று பொருள். இந்த பார்ட்டிகளும் துள் ளலும், ஆரவாரமுமாகத்தான் நடக்கி ன்றன.

அதிர வைக்கும் இசை, லேசாக மிளி ரும் லேசர் விளக்கு, உயர்தர மது மற் றும் சட்ட விரோத போதைப் பொருட் களுடன் ஆரவார காட்சிகள் அரங்கேறும் கச்சேரிதான் `ரேவ் பார்ட்டி’.

`ரிசார்ட்’டில் ஒரே நேரத்தில் 300 பேருக்கு மேற்பட்ட வாலிப ர்களும், இளம் பெண்களுமாக கூடி விடுகிறார்கள். அங்கே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்தான். அதி ரும் இசை ஆடத் தெரியாதவர்க ளையும் துள்ள வைக்கும். அருகில் நிற்பவர்களோ, `கமான்… கேரி ஆன் … டோன்ட் ஷை’ என்று ஊக்கப் படுத்தி ஆட வைக்கிறார்கள். அரை குறை வெளிச்சம் வெட்கத்தை விட்டு ஆடச் சொல்கிறது. நண்பர் களும் உடன் இருப்பதால் ஆடிப் பழகாதவர்களாக இருந்தாலும் தானாகவே ஆட்டம் வந்துவிடு கிறது.

ஆண்களும், பெண்களும் பேதமில்லா மல் இப்படி ஆடிப்பாடி கும் மாளமடிப்பது இளவட்டங்களுக்கு ரொ ம்பவே பிடித்திருக்கிறது. அதுமட்டு மின்றி அவர்கள் ரேவ் பார்ட்டியில் மயங்கிக் கிடப்பதற்கு வேறு சில கார ணங்களும் இல்லாமல் இல்லை. ஆமாம், இங்கு கிடைக்கும் வசதிக ளோ ஏராளம், தாராளம்!

ரிசாட்டுகளின் வசதி, கட்டணம் போன்றவற்றிற்கு ஏற்ப வசதிகள் கூடும், குறையும். இருந்தாலும் எல்லா விடுதிகளிலும் இளசுக ளை இழுத்து மயக்கும் போதைப் பொருட்கள் தாராளமாக புழங் கும்.

ரேவ் பார்ட்டி நடக்கும் இடங்க ளில் வெளியே இருந்து கொண்டு செல்லப்படும் போதைப் பொருட்களை பயன்படுத்த அனுமதி கிடை யாது. `என்ன நடந்தாலும் தெரியாது’ என்பதுபோல் மூளை யை மழுங்கடிக்கும் வீரியமிக்க போ தைப் பொருட்கள் அங்கு பயன்படு த்தப்படுகின்றன. அதற்காக தண் ணீர் போல் பணம் செல விடப்ப டுகிறது. 3 ஆயிரம் முதல் 4 ஆயி ரம் வரை நுழைவுக் கட்ட ணம் வசூலிக்கிறார்கள். அதோடு முடிவ தில்லை உள்ளே எதை எதை எல் லாம் `அனுபவிக்கிறார்களோ’ அத ற்கு தக்கபடி கூடுதல் கட்டணமும் உண்டு. ஆசிட் ஊசிகளும் இங்கு பயன்படுத்துவது உண்டாம்.

எவ்வளவு போதைப்பொருட்கள் புழங்கினாலும் போலீஸ் கெடு பிடி கள் இருக்காது. ஏனெனில் பார்ட்டி கள் அரங்கேறும் இடம் நகர்ப் புறத்தில் இருந்து ஒதுக்குப்புறமாக இருக்கும். பார்ட்டி நடைபெறும் நேரம் மிக ரகசியமாக வைக்கப் படுவதால் மிக நெருங்கிய வட் டாரத்தினருக்கு மட்டுமே பார்ட்டி யைப் பற்றி தெரியும். ரேவ் பார் ட்டியில் ஆடப்படும் நடனம் பிர பலமானது. சில பிரபலங்களும் சேர்ந்து ஆடுவார்கள். சினிமா பிரபலங்களை அழைத்து வந்து ஆடவைக்கும் ரிசாட்டுகளும் இருக்கின்றன.

வசதிபடைத்தவர்கள், பிரப லங்களின் பிள்ளைகள் தங் கள் பிறந்தநாள், திருமண நாள் விசேஷங்களின்போது பார்ட்டியில் கலந்து கொள் ளும் அனைவருக்கும் ரேவ் பார்ட்டியில் `இலவச அனு மதி’ பெற்றுத் தருவதும் உண்டு.

இவ்வளவு கூத்தும், கும்மாளமும் நடந்தாலும், விரும்புபவர்கள் எல்லாம் இந்த பார்ட்டியில் கலந்து கொள்ள முடியாது. ஏனெனில் பார்ட்டிகள் அவ்வளவு ரகசிய மாக நடைபெறும். மறைமுக குழுவினர் பார்ட்டிகளுக்கு ஆட் களை திரட்டும் வேலையை கவனிக்கிறார்கள். அதற்கு கணி சமாக சம்பளம் பெறுகிறார்கள்.

முதலில் இந்த நிகழ்ச்சிகள் ரக சிய குறியீடுகள் மூலம் விளம்ப ரப் படுத்தப்பட்டன. 30 முதல் 40 பேர் மட்டுமே கலந்து கொண் டார்கள். பார்ட்டி எங்கு நடக்கிறது, எந்த நேரத்தில் நடக்கும் என்பது மிக ரகசியமாக இருக்கும். நிகழ்ச்சி தொடங்கும் சில மணி நேரங் களுக்கு முன்புதான் தகவல் கள் வரும். இப்போது இணை யங்கள், செல்போன்கள் மூல ம் குறியீட்டுச் சொற்களால் ஆள் பிடிக்கி றார்கள். அதை புரிந்து கொண்டு, தேடிப்போய் 300 பேர் 400 பேர் கூடி கும்மாளமிடுகிறார்கள்.

முன்பெல்லாம் மும்பை, டெ ல்லி போன்ற பெரு நகரங்களில்தான் இந்த பார்ட்டிகள் நடை பெற் றன. தற்போது சென்னையிலும் தலை தூக்கிவிட்டதாகச் சொல் கிறார்கள்.

இந்த பார்ட்டிகளுக்கு நண்பர் களுடன் செல்பவர்களைவிட கேர்ள் பிரண்ட் உடன் செல் பவர்கள் அதிகம். பார்ட்டிக ளுக்கு அழைத்துச் செல்ல இளம் பெண்களை ஆண்கள் எப்படி தயார்படுத்துகிறார்கள் என்பது தனிக் கதை.

இளமைக்கே உரித்தான வாட் டசாட்டமான தோற்றத்துடன் காரில் வரும் ஆண்களைப் பார்த் ததும் அவர் நல்ல பணியில் இருப்பதாக பெண்கள் நம்பிவிடு கிறார்கள்.

இவர்களின் நட்பு முதலில் மிக ஒழுக் கமாக இருக்கும். கோவில்கள், ஓட்டல் களுக்கு மட்டுமே சென்று வருவார்கள். இந்த ஒழுக்கமான நடத்தைகள் ஒரு வர் மீது ஒருவருக்கு நம்பிக்கையை அதிகரித்து விடுகிறது. உடனே `வாழ் க்கை இவரோடுதான்’ என்ற முடிவுக்கு பெண்கள் வந்துவிடுகிறார்கள்.

எப்படியோ நம்பிக்கையைப் பெற்றுவிட்ட பிறகு அவர்களுக்குள் நெருக்கம் அதிகமாகிவிடுகிறது. அவர்களின் அடுத்தகட்ட பயணம் தியேட்டர் அல்லது பீச். அங்கு அரங்கேறும் காதல் காட்சிகள் இவர் களுக்கு கிளுகிளுப்பைத் தரும். `நாளை நாமும் இப்படி சந்தோஷ மாகத்தான் இருக்கப் போகிறோம்` என்ற நம்பிக்கை ப் பேச்சுடன் தொடுதல்கள் ஆர ம்பமாகின்றன. முதலில் முத்த ங்கள் அளவுடன் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.

இந்த நம்பிக்கையின் அடுத்த கட்டம் பீர் அருந்துவது. உடலுக்கு நல்லதுதான் என்ற நம்பிக்கையுடன் மதுப்பழக்கத்துக்கும் தயாரா கிறார்கள். பின்பு ரேவ் பார்ட் டிக்கு இழுக்கப்படுகிறார்கள். அங்கு ஆண்பெண் பேதமில்லா மல் ஆடுவது அவர்களுக்கிடை யே கூச்சத்தை அறவே போக் கிவிடுகிறது.

அரைகுறை வெளிச்சத்தில் இ டையை தொட்டுக் கொண் டும், தோளில் கைபோட்டுக் கொ ண்டும் ஆடுவதால் உணர்ச்சி தூண்டப்படு கிறார்கள். கூடவே போதைப்பொருட்கள், மது அருந்தி யிருப்பதால் தன்னிலை மறந்துவிடுகிறார்கள். இந்த இன்பச் சீண் டல்கள் தாராளமான உறவுக்கு வழி வகுத்துவிடுகிறது. சீக்கிரமே உறவு ம் அரங் கேறுகிறது.

உறவுக்குப் பிறகு புதுசுகம் தேடி வே று பெண்களைத் தேடத் தொடங்கி விடுகிறார்கள் ஆண்கள். ஆனால் பெண்களின் நிலைமையோ கவலை க் குரியதாக மாறிவிடுகிறது. அவர்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல பாதிப்புகளை சந்திக்கிறார்கள். சிந்திக்கும் ஆற் றல் செயல் திறன் குறைந்து ஆரோக்கியத்தை இழக்கிறார்கள். பல பெண்கள் திருமணம் செய்து கொள்ள தயக்கம் காட்டுகிறார்கள். தொடர்ந்து இதுபோன்ற பார்ட்டிகளுக்கு அடிமையாகிவிடவும் செய் கிறார்கள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: