Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அழகே வா, அருகே வா… : பாடல் – வீடியோ

பிரம்மச்சரியத்தை தீவிரமாக கடைபிடித்துவரும் ஒரு நல்ல பேரா சிரியரை காதலிக்கும் பெண், பாடுவதாக அமைந்துள்ள இந்த பாடல் உண்மையி லேயே அற்புதமான பாடல்தான்

காரணம்

ஆண்டவன் கட்டளை என்ற திரைப் படத்தில் இடம்பெற்றுள்ள‌ இப்பாடலில் வரும் ரத்தின வரிகள் அனைத்துமே! ஆபாஸத்தை இலை மறைகாயாக சொ ல்லி தனது காதலை வெளிப்படுத்துவ தாக இக்காட்சி அமைந்திருக்கும். ஆனா ல் இதன் சிறப்பு என்னவென்றால், மே லோட்டமாக இதனை கேட்கும்போது ஆபாசமின்றி இருப்பது போல் தெரியும் சற்று உன்னிப்பாக கேட்டால், ஒரு பெண்ணின் அங்கத்தை, இறைவன் குடி யிருக்கும் கோவிலின் உச்சியில் இருக் கும் கோபு ரக் கலசத்துடன் ஒப்பிடுவது,

அதோடு இல்லா மல், இல்ல‍ற சுகம் என்பது, ஒரு மொழி அறியாத பறவைகளுக்கும் உண்டு, என்றும் நமது முன்னோர்கள் எல்லாம் பிரம்மச்சரியத்தை கடைபிடித்திருந் தால் நாம் எப்படி பிறந்திருப் போம். என்ற கேள்வி களோடு இந்த பாடலை கவிஞர் அமைத்து ள்ளது மிகுந்த பாராட் டுக்குரியதே!


இப்பாடலின் சிறப்பு

இப்பாடல் காட்சியில் நடித்திருக்கும் நடிகை தேவிகா, கட லும் பாறைகளும் சந்திக்கும் இடத்தில் உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல் சூரியனையும் மயக்கும் குளிர் நிலவாக ஆடிப்பாடியிருப்பார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களும் பிரம்மச்சர்யத்தை தொடர்வதா அல்லது மலரி டம் நாடி இல்லறத்தை தொடங்குவதா என்று மதில்மேல் பூனையாக சிறப்பாக நடித்து இருப்பார். அப்பாடலை கேளுங்கள் காட்சியை காணுங்கள் இதன் சிறப்பை ரசியுங்கள்.

– தகவல் விதை2விருட்சம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: