Tuesday, August 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆமணக்கு – நவீன தொழில்நுட்பம்

மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம் சேலம் மாவட் டம் ஏத்தாப்பூரில் அமைந்துள்ளது. இந்த ஆராய்ச்சி நிலையத்தி லிருந்து ஒய்.ஆர். சி.எச்.1 என்ற வீரிய ஒட்டு ஆமண க்கு 2009ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. குறைவான வயது உடையதால் மானாவாரி க்கும், பாசனநீர் பற்றாக்குறை உள்ள பகுதி களுக்கும் மிகவும் ஏற்றது.

150-180 நாட்கள் வயதுஉடையது. அதிக கிளைப்பு, நடுத்தர உயரம், அதிக விளைச்சல். மானாவாரியில் எக்டருக்கு 1860 கிலோவும் இறவை யில் 3500 கிலோவும் கொடுக்க வல் லது. காய் குலைகளில் பெண் பூக்களின் அளவு 95 சதவீதத்திற்கு மேல் இருக் கும். செடிகள் சாயாத, காய்கள் வெடிக் காத தன்மையைக் கொண்ட, அதிக உர மேற்கும் திறனும் கொண்டவை.

குறுகிய கால இடைவெளியில் அதிக குலைகள் (40-50) ஒரு செடி க்கு வைக்கும் பண்புடையது. செடியின் உயரமும் கிளைகளின் நீள மும் குறைவாக உள்ளதால் ஊடுபயிர் சாகுபடிக்கு ஏற்றது. குறை வான வயதுடைய காரணத்தினால் தமிழகத் தில் ஆடிப் பட்டத்தில் சாகுபடி செய் யும்போது காய் அழுகல் நோய் தாக்கு தல் குறைவாக உள்ளது. குறைவான பச்சை தத்துப்பூச்சி மற்றும் வெள்ளை ஈ தாக்குதல், காய்ப்புழுவுக்கு மிதமான எதிர்ப்புத்திறன் உடையது. நல்ல வடி கால் வசதியுடன் கூடிய கார, அமிலத் தன்மையற்ற வண்டல், செம்மண் நில ங்கள் மிகவும் உகந்தவை. வெப்ப நிலை 20 டிகிரி முதல் 32 டிகிரி செல்சி யஸ் வரை நல்ல பலனைத் தரக் கூடியது. வெப்பநிலை அதிகமானால் ஆண்பூக்கள் அதிகம் தோன்றி விளைச் சல் குறையும். மழைஅளவு 750மி.மீ. அளவு ஆண்டுக்கு இருக்க வேண்டும். நீர் தேங்கி நிற்கும் நிலத்தில் பயிர் செய்வதை தவிர்க்க வேண்டும்.

மானாவாரியில் ஜூன் – ஜூலை (ஆடிப்பட்டம்) இறவை – ஜூன் – ஜூலை (ஆடிப்பட்டம்), நவம்பர் – டிசம்பர் (கார்த்திகைப்பட்டம்) ஆகிய பட்டத்தில் 90 து 60 செ.மீ. இடைவெளியில் இறவையில் 120 து 90 செ.மீ. இடைவெளியிலும் பயிரிடலாம். ஒரு கிலோ விதை க்கு கார்பண்டாசிம் 2 கிராம் கலந்து 24 மணி நேரம் கழித்து விதை க்க வேண்டும். டிரைகோடெர்மா விரிடி உயிர்ப்பூசணம் ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் வீதம் கலந்து விதையை நேர்த்தி செய்ய வேண் டும். விதையினை 10 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து விதை த்தால் முளைப்புத்திறன் அதிகரிக் கும். குத்துக்கு ஒரு விதை விதை க்க வேண்டும்.

இறவையில் எக்டருக்கு 12.5 டன் தொழு உரமும், 60:30:30 கிலோ தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து இடவேண்டும். அதாவது 30:30:30 கிலோ உரங்களை அடியுரமாகவும், மீதமுள்ள 30 கிலோ தழை உரத்தை 2 தவணைகளாகப் பிரித்து 30வது நாளும், 60வது நாளும் இடவேண்டும். மானாவாரியில் 45:15:15 கிலோ தேவைப் படும். 30:15:15 கிலோவை அடியுரமாகவும், மீதமுள்ள 15 கிலோ தழைச்சத்தை மேலுரமாக மழை கிடைக்கும் போது 40-60 நாட்க ளுக்குள் இடவேண்டும். நீர் நிர்வாகம்: விதைத் தவு டன் ஒரு முறை யும், உயிர்த் தண்ணீ ருக்கு பின் மண்ணின் தன்மைக்கு ஏற்ப 10-15 நாட்கள் இடைவெ ளியிலும் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். நீர் நிலத்தில் நீண்டகாலத்திற்கு தேங்காமல் பார்த்துக்கொள்வது அவ சியம்.

இரண்டு விதை முளைத்த இடத்தில் 10-15வது நாளில் ஒரு செடி யை அகற்ற வேண்டும். முளைக்காத இடத்தில் மீண்டும் விதைத்து பயிர் எண்ணிக்கையை பராமரி க்க வேண்டும். விதைத்த 3 நாட் களுக்குள் புளூகுளோரலின் ஏக்க ருக்கு 800 மிலி அல்லது பெண்டி மெதிலின் 1300 மிலி தெளித்து களைகளைக் கட்டுப்படுத்தலாம். விதைத்த 20, 40வது நாளில் கைக்களை எடுக்க வேண்டும். ஆம ணக்கில் இலைப்புழுக்கள் (காவடிப்புழு, புரோடீனியா, கம்ப ளிப் புழுக்கள்), சாறு உறிஞ்சும் பூச்சிகள் (தத்துப்பூச்சி, சிவப்பு சிலந்தி பூச்சி), காய்ப்புழுக்கள் அதிக சேதத்தை ஏற்படுத்துகின்றன. தகுந்த பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண் டும். (தகவல்: சா.ரா.வெங்கடாசலம், வீ.பழனிச்சாமி, கு.செல்வ ராணி, பயிர் பெருக்கம் மற்றும் மரபியல் வேளாண் விரிவாக்கம், மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம், ஏத்தாப்பூர், சேலம். 94432 10883.
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: