காலியின் களுவெல்ல பிரதேசத்தில் கடல் நீர் கறுப்பு நிறமாக மாற் றமடைந்துள்ளதாக தெரிவிக்க ப்படுகிறது. கடல் நீரின் நிறமாற் றத்திற்கு காரணம், ஜப்பான் அணுக்கழிவுகள் கடலில் கொட் டப்பட்ட தன் தாக்கமாக இருக்க லாம் என்ற அச்சம் தெரிவிக்கப் படுகிறது.
கறுப்பு நிறமான கடல் நீருடன் எண்ணெய்த் தன்மையான ஒரு வகைப் படிவும் நீரில் அடித்து வர ப்பட்டு கரையொதுங்கும் காரணத்தால் களுவெல்ல பிரதேசக் கடற்கரையோரம் மாசடைந்து காணப் படுகின்றது.
சமுத்திரவியல் மாசு கட்டு ப்பாட்டுத் திணைக்கள அதி காரிகள் கருத்து தெரிவிக் கையில், கடல் நீரின் கறு மைக்கும் அதனோடு சோ்ந்து கரையொதுங்கும் கழிவு களுக்கும் எண்ணெய் அல்ல து ஏதாவது இரசாயனம் காரணமாக இருக்கலாம் எ ன்று கூறியுள்ளனர்.
காலி, களுவெல்லை பிரதே சத்தின் கடற்பரப்பில் சுமார் ஒரு ஏக்கர் வரையான பரப்பளவில் நீரானது கறுப்பு நிறமாக மாற்ற மடைந்து மாசடைந்து காணப்படுகிறது.