Wednesday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தெய்வ திருமகள்(ன்) – திரைப்பட விமர்சனம்

கண்களைவிட்டு அகல மறுக்கும் இயற்கை காட்சிகள், மனதை வரு டும் இசை, எந்த இடத்திலும் இய ல்பு மீறாத நடிகர்கள், இறுதிக் காட்சி முடிந்த பிறகும் இருக்கை யோடு கட்டிப் போடும் திரைக் கதை, மனதின் நெகிழ்ச்சியை கண் களில் வழிய வைக்கும் உயிர்ப் பான இயக்கம்…

-நாம் பார்ப்பது தமிழ் சினிமா தானா என்று ஒருமுறை கிள்ளிப் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது, தெய்வத் திருமகள் படம் முடிந்ததும். ஹாட்ஸ் ஆஃப் விஜய்… . படத்துக்குப் படம் அதிகரி க்கும் சினிமா மீதான உங்கள் காதலை, ரசிகர்களுக்கு நல்ல விஷய ங்களை மட்டுமே தர வேண்டும் என்ற உங்கள் வைராக்கியத்தை பாராட்டா மல் இருக்க முடியவில்லை.

‘ஐ யாம் சாம் என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல்தான் இந்த தெய்வத்திருமகள் என்றாலு ம், தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படம். வக்கிர அழுக்கும் மசாலா தூசும் நிறைந்த கோடம்பாக்கத்தில் பொலிவுறத் துடைத் தெடுத்து வந்த ரவிவர்மா ஓவியம் மா திரி அத்தனை நேர்த்தி இந்தப் படத்தில்.

மனவளர்ச்சி குன்றிய கிருஷ்ணா (விக் ரம்)வுக்கும், அவரது காதல் மனைவி க்கும் பெண் குழந்தை பிறக்கிறது. ஆனால் அந்தக் குழந்தை பிறக்கும் போதே தாய் இறந்துவிட, மகளை வள ர்க்கும் பொறுப்பு மனதளவில் குழந்தையாகவே உள்ள விக்ர முக்கு. நிலா எனப் பெயரிட்டு வளர்க்கிறார்.

மகள் பள்ளி செல்லும் போது வரு கிறது பிரச்சினை. ஒருநாள் திடீ ரென்று அந்த செல்ல மகளை கிரு ஷ்ணாவின் பணக்கார மாமனார் தூக்கிக் கொண்டு போய்விடுகி றார். மனவளர்ச்சி குன்றியவனு டன் குழந்தையை விட முடியாது என நியாயம் பேசுகிறார்.

வழக்கறிஞர் அனுராதா துணையு டன் நீதிமன்றம் போகிறான் கிருஷ்ணா. மகளைப் பார்க்க முடியா மல் தவி்க்கிறான். இந்த பாசப் போராட்டத்திலும் சட்ட யுத்தத் திலும் யார் ஜெயிக்கிறார்கள் என்ப தை நெகிழ வைக்கும் விதமாய் சொல்லியிருக்கிறார் விஜய்.

தமிழில் இதற்கு முன் இதே மாதிரி பெற்றால்தான் பிள் ளையா, சின்னக் கண்ணம்மா என மிகச்சில படங்கள் இப்படி வந்திருந்தாலும், இந்தப் படம் அவற்றிலிருந்து ரொம்பவே வித்தியாசப்படுகிறது. கார ணம், கதையின் நாயகன்.

மனப் பிறழ்வு (autism) நோயால் பாதிக்கப்பட்ட தந்தையாக விக் ரம். இவரது நடிப்பை வர்ணிப்பது, ‘இனிப்பு இனிப்பாக இருக்கிறது’ என்பதைப் போன்றதுதான். தனது அடுத்த பரிமாணத்தை கொஞ்ச மும் அலட்டிக் கொள்ளாமல் தந்தி ருக்கிறார் மனிதர். இந்தக் காட்சி, அந்தக் காட்சி என பாகுபடுத்திப் பார்க்க முடியாத அளவுக்கு அசத் தியிருக்கிறார். நடிப்பு ராட்சஸன்!!

இவருக்கு அடுத்து நடிப்பில் இதயத்தைத் திருடுவது குழந்தை சாரா. அழகும் விவேகமும் நிறைந்த இந்தக் குழந்தை உண்மையி லேயே தெய்வத் திருமகள் தான் போங்கள்!

அனுஷ்காவுக்கு அருமையான வாய்ப்பு இது. அவரும் சிறப் பாக பயன் படுத்திக் கொண் டுள்ளார்.

குறிப்பிடத்தக்க இன்னொரு வர் நம்ம சந்தானம். ஒரு வச னம் கூட எல்லைமீறாத அள வுக்கு அவரை சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர் விஜய்.

குழந்தையின் சித்தியாக வருகிறா ர் அமலா பால். அழகாக வந்து போ கிறார். எம்எஸ் பாஸ்கர், நந்தகு மாராக வரும் கிஷோர், சச்சின் கெ டேகர், குறிப்பாக நாசர் என அனை வருமே உணர்ந்து நடித்து ள்ளனர்.

நீதிமன்றக் காட்சிகள் வெகு யதார் த்தமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. க டைசி காட்சியில் நாசரின் முடிவா ன பதிலுக்காக பக்பக் இதயத் தோ டு நீதிபதியே காத்திருக்க, அதைப்பற்றியெல்லாம் கவலைப்படா மல், அப்பாவும் மகளும் சைகையால் அன்பைப் பரிமாறிக் கொள் ளும் காட்சியில் அழாத கண்களில் கண்ணீர் வற்றிவிட்ட தென்று அர்த்தம்!

ஜீவி பிரகாஷின் இசை உண்மையிலேயே பிரமாதம். இப்போது தான் அவர் காட்சி களை உணர்ந்து இசை தருகிறார். தந்தை பாடும் தாலாட்டில் இசையும் முத்துகு மாரின் வரிகளும் அற்புதம். அந்த கதை சொல்லும் பாடலை படமாக்கிய விதம், விஜய்க்குள் இருக் கும் சூப்பர் ஆக்ஷன் பட ஆர்வத்தைக் காட்டுகிறது.

விஜய்யின் இன்னொரு வலது கரமாக நீரவ்ஷா. ஏசி இல்லாத தியேட்டரில் கூட ஊட்டியின் குளிரை வரவழைத்து விடு கிறார் நீரவ்.

டத்தின் மைனஸ் என்று பார் த்தால்…. காட்சிகள் மெதுவாக நகர் வது, முதல் பாதியில் வரும் நீளமான சில காட்சிகள். ஆனால் முதல் சில நிமிடங்களிலேயே படம் பார்க்கும் ரசிகனை கதை க்குள் ஈர்த்துவிடுகிறார் விஜய். அதன்பிறகு அந்த ரசிகன் எழுந் திருப்பது ‘எ பிலிம் பை விஜய்’ என்ற எழுத்துக்கள் ஒளிரும் போ துதான்.

அந்தக் காட்சியில் அத்தனை பேரும் பேதமின்றி கைதட்டியது, விஜய் யின் உழைப்புக்கு கிடைத்த அங்கீ காரம்.

நடிப்பு – விக்ரம், அனுஷ்கா, அமலா பால், சந்தானம், நாசர், பேபி சாரா

பாடல்கள் – நா முத்துக்குமார்
இசை – ஜீவி பிரகாஷ்குமார்
ஒளிப்பதிவு – நீரவ்ஷா
எடிட்டிங் – ஆண்டனி

தயாரிப்பு – எம் சிந்தாமணி & ரோனி ஸ்க்ரூவாலா
எழுத்து – இயக்கம் – விஜய்

மக்கள் தொடர்பு – ஜான்சன்

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply