Friday, August 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்கள் பிரசவத்திற்குபின் மேற்கொள்ள வேண்டிய உடற்பயிற்சிகள்

டாக்டர் கண்ணகி உத்ரராஜ் அவர்கள்ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை

கர்பமாக இருக்கும் பெண்களுக்கு பிரசவம் ஆகும் வரை தன் உடல் நிலையையும் வயிற்றில் வளரும் குழந்தையையும், கவன மாக பார்த்துக் கொள்வது முதல் கடமை என்றா ல், குழந்தை பிறந்த பிறகோ அதற்கு தாய் ப்பால் கொடுப்பதற்கும், குழந்தையைக் கவனித்துக் கொள்வதற்கும் தன்னுடைய பச்சை உடம்பு வலுப்பெறுவ தற்கும், தன் னை முன்னைவிட நன்றாக கவனித்துக் கொள்வது ரொம்ப ரொம்ப முக்கியம். இதற்கு சத்தான உணவுகள் மட்டும் போ தாது. மருத்துவருடைய ஆலோசனையின் படி உடற்பயிற்சிகளையும் செய்ய வே ண்டும்.

உங்களுடையது நார்மல் டெலிவரி என்றால்…!

டெலிவரியான ஒரு வாரத்தி லேயே உடம்பு நார்மலான நிலைக்கு வந்துவிடும் என்றா லும் பிரசவத்திற்குப் பின்பு மொத்த உடல் நிலையும் ஓய் ந்துதான் இருக்கும் என்பதால், முதலில் உணவில் தான் நீங் கள் கவனம் கொடுக்க வேண் டும்.

தாய்ப்பால் அதிகம் சுரக்க நிறையப் பால் குடிக்க வேண்டும்.

ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

பிரசவத்தின்பொழுது இழந்த சக்தியைத் திரும்பப் பெற புரோ ட்டீன், கார்போஹைட்ரேட், விட்டமின்கள் கலந்த உணவு களைச் சாப்பி டுங்கள்.

குழந்தை வயிற்றில் இருக்கும் பொழுது சாப்பிட்ட இரும்புச் சத்து, கால்சியம் மாத்திரை களை தாய்ப்பால் நிறுத்தியபின் 6 மாதங்கள் வரை சாப்பிட வே ண்டும்.

தாய்ப்பால் கட்டா யம் ஒரு வருடமா வது தர வேண்டும். இது குழந்தைக்கு மட்டுமல்ல, உங்க ள் உடல் நலனுக்கும், சீக்கிரம் கருத் தரிக்காமல் இருக்கவும் உதவும்!

வெஜிட்டேரியன் என்றால் பழ ங்கள், கீரைகள், காய்கறிகள், பருப்பு வகைகள் சாப்பிடலாம்.

நான்-வெஜிடேரியன் என்றால் மீன், முட்டை, ஈரல் சாப்பிடலாம்.

உங்களுடையது சிசேரியன் எனில்…

அதிகமான வெயிட் தூக் கக் கூடாது. அதற்காக ஒ ரேடியாக ஓய்வு எடுத்தா லும் உடம்பு பெருத்து விடும். ஸோ, நிறைய நட க்க வேண் டும்.

உடனடியாகக் கருத்தரி ப்பதைத் தவிர்க்க வேண் டும். மூன்று வருட ங்கள் வரை அடுத்த குழந்தையைத் தள்ளிப் போடலாம்.

ஏனென்றால் அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்தால் உடம்பில் ஸ்டோர் ஆகி இருக்கும் புரோட் டீன் சத்து எல்லாம் கரைந்து விடும். இதுதான் பெண்களுக்கு அனீமியா வருவதற்குக்காரணம். தவிர உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியும் குறைந்துவிடும்.

தாய்ப்பால் கொடுத்துக் கொண்டு இருக்கும்போது கர்பம் தரிக்காது என்றாலும்கூட விதிவிலக்குக ளும் உண்டு. ஆதலால் உறவில் கவ னம் தேவை.

பிரசவத்துக்கு அப்புறம் பிறப்பு உறுப்பில் துர்நாற்றம் அடித்தா லும், விட்டு விட்டுத் தீட்டு வந் தாலும், அதிகமாக வலித்தாலும் உடனே மருத்துவரை அணுகுங் கள்.

ஒரு தாய் நல்ல ஆரோக்கிய த்துடன் இருந்தால்தான் அவள் குடும்பமும் ஆரோக்யமாக இரு க்க முடியும். அதிலும் குறிப்பாக பிரசவ மான பெண்கள் உடலின் உள் ஆரோக்கியத்தை மட்டும் பார்க்காமல், வெளி ஆரோக் யத்தையும் அதாவது எக்ஸர் சைஸ் மூலம் உடலையும் ஷேப்பாக சிக்கென்று வைத் துக் கொள்ளுங்கள். உங்கள் தாம்பத்யமும் தடுமாறாமல் செல் லும்!

என்னென்ன உடற்பயிற்சிகள் செய்ய வேண் டும்?

நார்மல் டெலிவரி எனில், சில வாரங்களிலேயே வயிற்றுத் தசை கள், இடுப்புத் தசைகள் சுருங்கப் பயிற்சிகள் செய்ய வேண்டும். இப்பொழுது அந்தப் பயிற்சிக ளைச் செய்தால்தான் 50, 60 வயது களில்கூட பிறப்புறுப் பின் “தசைகள்” வலுவாக இரு க்கும்.

உடற்பயிற்சிகள் செய்தால் தான் ஹெர்னியா, கர்ப்பப்பை சரிதல் போன்ற பிரச்னைக ளைத் தடுக்க முடியும்.

சிசேரியன் டெலிவரி எனில், சிசேரியனுக்கு 2 மாதத்துக்கு அப்புறம் தான் உடல் நார்மலுக்கு வரும். அதற்குப் பின் பயிற்சிகள் செய்ய லாம்.

எந்த பிரசவமாக இருந்தாலும், மருத்துவரின் ஆலோசனைப்படி தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது முக்கியம்!

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: