Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மாதவிடாய் வராமல் தாமதமாவதற்கு பல காரணங்கள்

பீரியட்ஸ் எனப்படும் மாதவிடாய் தாமதாவது பலருக்கும் ஒரு பிரச்சினையாகவே இருக்கி றது. மாதா மாதம் சரியாக பீரியட்ஸ் வராமல் தவிக் கும் பெண்கள் பலர். ஆனால் அத ற்கான சரியான காரணத்தை அறியாமல் கவ லைப்படுவதால் பலன் ஏதும் இல்லை என் கிறார்கள் மருத்துவர்கள்.

பீரியட்ஸ் வராமல் தாமதா வதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் முக்கிய மானது ஸ்டிரஸ் எனப்படும் மன அழுத்தம் மற்றும் பதட்டம். இதுதான் நமது உடலில் பல உபாதைகள் ஏற்பட முக்கியக் கார ணியாக இருக்கிறது. தாமதமான பீரிய ட்ஸ் பிரச் சினைக்கும் இது முக்கியக் காரணமாக இருக்கிறதாம்.

மன அழுத்தம் அதிகரிக்கும் போது, பெண்களின் உடலில், ஜிஎன் ஆர்எச் எனப்படும் ஹார்மோனின் அளவு குறைகிறது. இந்த ஹார் மோன்தான், கர்ப்பம் தரிப்பதையும், பீரியட்ஸ் வருவதையும் வழி நடத் தும் முக்கிய ஹார்மோனாகும். என வே இந்த ஹார்மோன் குறையும் போது பீரியட்ஸ் வருவது மட்டு மல்ல, கர்ப்பம் தரிப்பதும் கூட தாம தமாகும் என்பது முக்கியம். இது போன்ற ஹார்மோன் குறைபாடு இருக்கிறதா என்பதை அறிய டாக் டர்களை அணுகி பரிசோதித்துக் கொள்வது நல்லது.

சில பெண்களுக்கு பீரியட்ஸ் வரவிருக்கும் நாளுக்கு முன்பாக திடீ ரென காய்ச்சல், சளி, இருமல் ஆகிய பிரச்சினை ஏற்படலாம். அப் படி வந்தால் பீரியட்ஸ் தாமதமாகும். அதே சமயம், இந்த சிறிய உடல் நலக் குறை பாடுகள் குறுகிய காலமே இருக்கும்.அது சரியான வுடன் பீரியட்ஸ் முறையாக நடைபெறக் கூடும். ஒருவேளை அப் படி யும் தாமதமானால் டாக்டர்களை கல ந்து ஆலோசிப்பது நல் லது.

பணி நேரங்களில் ஏற்படும் திடீர் மாற் றங்களும் பீரியட்ஸை டிலே செய்யும் வல்லமை படைத்தவை. குறிப்பாக தொ டர்ந்து பகல் நேரத்தில் பணியாற்றி வரும் பெண்களுக்கு திடீரென இரவுப் பணி போடும்போதும் அவர் களது உடலில் மாற்றங்கள் ஏற்படும். இது பீரியட்ஸை தாமதப் படுத்தும். அதேபோல் வீட்டில் திரு மணம் போன்ற விழாக்கள் திடீ ரென குறுக்கிடும்போது ஓய்வில் லாமல் பணியாற்ற நேரிடும். அப் போது உடலின் ரிதம் மாறி அத னால் பீரியட்ஸ் தாமதமா கலாம். உங்களது உடல் வழக்க மான நிலைக்கும், இயல்புக்கும் திரும்பு ம் போது பீரியட்ஸும் சகஜ நிலையை அடையும்.

குழந்தைப் பிறப்பைத் தடுக்க பயன் படுத்தும் மாத்திரைகள், மாத விடாயைப் பாதிக்கக் கூடிய வகை யிலான மருந்து, மாத்திரை களாலும் கூட பீரியட்ஸ் தாமதமாகும். இதற்கு டாக்டரிடம் அறிவுரை பெறுவது நல் லது.

அதிக எடை கொண்டவர்களுக்கும், அதே போல மிகவும் குறைந்த எடை கொண்டவர் களுக்கும் கூட பீரியட்ஸ், தாமதம் தவிர்க்க முடியாதது. சீரான, தொடர்ந்த உடற் பயிற்சி யும், சத்தான சாப்பாடும் இவர்களுக்கு அவசியம். உடலில் அதைக எடை கூடாமலும், கொழுப்புச் சத்து சேர்ந்து விடாமலும் கவனமாக இருக்க வேண் டியது மிக மிக அவசியம்.

அதேசமயம் நமது உடலில் தேவைக்கேற்ற கொழுப்புச் சத் து இல்லாவிட்டாலும் கூட சிக் கல்தானாம். தேவையான கொ ழுப்புச் சத்து இல்லாமல் போ னால் சுத்தமாக பீரியட்ஸ் வரா மல் நின்று விடுமாம். இதற்குப் பெயர் அமீனோரியா என்று பெயர். எனவே ஆரோக்கியமான உடலும், எடையும் இருப்பதை உறுதி செய்வது பெண்களுக்கு நல்லது.

மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நிற்கும் பருவத் தை நெருங்கி வரும் பெண்களுக்கு பீரியட்ஸ் முறையாக இருக்காது. சில சமயம் லேசானதாக இருக்கும். சில சமயம் உதிரப் போக்கு அதிகமாக இருக்கும். சிலருக்கு தாமதமாகும். சிலருக்கு நீண்ட நாட்கள் கூட தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். இதற்காகப் பயந்து விடத் தேவையில்லை. டாக்டர்களின் அறிவுரைப்படி நடந்து கொள்ளவும்.

ஹார்மோன் சமச்சீரின்மை யும் பீரியட்ஸ் குறைபாட்டு க்கு ஒரு காரணம். பிசிஓடி எனப்படும் பாலிசிஸ்டிக் ஓவ ரி சின்ட்ரோம் உள்ள பெண் களுக்கு பீரியட்ஸ் முறையாக வராது. தாமதமாக  வரும், அதிக உதிரப்போக்கு சில சமயங்களில் இருக்கும். அதற்கான சிகிச் சைகளை எடுத்துக் கொண்டால் இதை ஓரளவு சரி செய்யலாம்.

வயதுக்கு வரும் டீன் ஏஜ் பெண் களில் பலருக்கும் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு பீரியட்ஸ் முறை யாக இருக்காது. இதற்காக அவர் கள் பயந்து விடத் தேவையில்லை. காரணம், அவர்களது உடலில் ஹார் மோன்கள் முறையாக வளர்ச்சி அடை ந்திருக்காது. காலப் போக்கில் ஹார்மோன் வளர்ச்சி சரியான வுடன், பீரியட்ஸும் சரி யாகி விடும்.

கடைசியாக, அதேசமயம், முக்கிய மானது, பீரியட்ஸ் தாமதத்திற்கு மேற்கண்ட காரணங்கள்தான் உள் ளன என்று அர்த்தம் இல்லை. கர்பம் தரித்தாலும் கூட பீரியட்ஸ் வராமல் போகலாம். எனவே அந்த டெஸ்ட்டையும் செய்து பார்த்து விடுவது நல்லது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply