Saturday, August 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வாங்க நடக்கலாம் !!!

நடைப்பயிற்சி ஓர் அற்புதமான பயிற்சியாகும். இது இரத்த அழுத் தத்தை குறைப்பதோடு, இரத்தத்தில் உள்ள தீய கொழுப்புச் சத்தின் (Low -density lipoprotein – LDL) அளவைக் குறைத்து, நரம்புகளு க்குப் புத்துணர்வு தந்து, எலும்புகளையும் உறுதியாக்கு கிறது. எடையை குறைக்க விரும்பு பவர்களுக்கும், உடலுக்கு வலுவான கட்டமைப்பு அளித்து ஆரோக்கியமா னதாக இருக்க  விரும்புபவர்களுக்கும் நடைப் பயிற்சி ஓர் எளிய உடற்பயிற்சியாக உள்ளது.

வேகமாக நடத்தல் எனும் பயிற்சியை மேற்கொள்பவர்களுக்கு மாரடைப்பு மற்றும் இதர  இதயநோ ய்களின் தாக்குதல்கள் இப் பயிற் சியை மேற்கொள்ளாதவர்களோடு  ஒப்பிடுகையில் பாதிக் கும் மேலாக குறைவாக உள்ளது என்று சமீபத் திய  ஆராய்ச்சி களில் கண்டறியப்ப ட்டுள்ளது.

நீங்கள் வேலைக்கு செல்லும் பய ணத்தில் அதிகமாக நடக்க முனை யுங்கள், இரயிலுக்கோ பேருந்துக் கோ நடந்து செல்லுங்கள், உங்கள் வாக னங்களை அலுவலகத்திலிரு ந்து சற்று தொலைவில்  நிறுத்தி வைத்து நடந்து செல்லுங்கள். கடைகளுக்கு நடந்து செல்லுங்கள்.  நீங்க ளும் உங்கள் குடும்பத்தினரும் தூய்மை யான காற்று வீசும் பகுதிகளில்  நீண்ட நடை பயணம் சென்று மகிழுங்கள்.

1. நெஞ்சை நிமிர்த்தி முன்னோக்கிப் பார் த்தவராக (தரையை பார்க்காமல்) இரு பது அடி முன்னோக்கியவாறு நடங்கள்.

2. நெஞ்சை உயர்த்தியவாறு தோள்களை ச் சாதாரணமாகவும் கைகளைத் தளர்வா கவும் வைத்திருங்கள்.

3. கைகளை முன்னும் பின்னும் ஒரே சீரா க ஆட்டியவாறு (பக்க வாட்டில் ஆட்டா மல்), அதேவேளை நெஞ்சுப் பகுதியை விட உயர் த்திவிடாமல் நட ந்து செல்லுங்கள். அதற்கேற்றவாறு உங்கள் கால்களும் பின் தொ டரும்..

4. உங்கள் அடி வயிற்றை கெட்டியாகவு ம் உறுதியாகவும் வைத்த நிலையில் முதுகை சமமாக நிமிர்த்தியவாறு உட லைச் சற்றே முன்புறம் சாய்த்தவாறு நடங்கள்.

5. ஒரு நேர்கோட்டில் நடப்பதை போல் பாவனை செய்யுங்கள். அடி களை சற்று அதிகமாக எட்டி வைத்து நடப்பதைக் கட் டுப்படுத்துங் கள். வேக மாக செல்ல வேண்டுமானால், காலடிகளை அருகருகே வைத்து விரை வாக நடங்கள்.

6. நடக்க காலை உயர்த்தும் போது உங்கள் முன்னங்கால் விரல்க ளால் உடலை உந்தித் தள்ளியவாறும், காலை பூமியில் வைக்கும் போது குதிகாலை பூமியில் முதலில் பதிய வைத்தவாறும் இதே சுழற்சியாக முன்னங் கால் விரல்களையும் இயற்கையான ஸ்ப் ரிங் போன்ற நரம்பு களின் உதவியால் உடலை முன்னோக்கி செலுத்து ங்கள்.

7. இயல்பாக சுவாசியுங்கள். நடக்கும் போது ஆழமாக ஒரே சீரான வேகத்தில் சுவாசித்து உயிர்வளி (Oxygen) அதிகமான அளவில் உட்செலுத்திக்கொள்ளுங்கள். நடக்கும் போது வேகமாகவும் அதே நேரத்தில் மூச்சிறைக்கும் அளவிற்கு இல் லாமலும் பார்த்துக் கொள்ளுங்கள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: