Friday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஊடுபயிராக வேலிமசால்

தென்னை மரங்களுக்கு இடை யே ஊடுபயிராக கால்நடை தீவ ன மான “வேலிமசால்” பயிரிட லாம். கால்நடை தீவனமாக புல் வகை யை சேர்ந்த வேலிமசால் பயன்படுகிறது. இதற்கு டிவி டிவி, கூவா ப்புல், வேலிபுல் என பல பெயர் உள்ளது. விதை விதைத்த நான் காவது நாளில் செடி துளிர்த்துவிடும். தென்னைக்கு காட்டும் தண்ணீரே காட் டினால் போதுமானது. விரைந்து வளரக்கூடிய இந்த புல் செடியை வெட்டி கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்கலாம். கால்நடைகளுக்கான தீவனம் குறைந்து வரும் இவ்வேளையில் இதுபோன்ற செடிகள் நல்ல லாபத்தை விவசாயிகளுக்கு ஈட்டித் தருகிறது. ஐந்தாண்டு வரை இந்த செடியிலிருந்து இலைகளை அறு க்கலாம். செடியில் பச்சையம் சத்து அதிகளவு உள்ளதால் கால் நடைக ளுக்கு மட்டுமல்ல, தென்னை மரத் துக்கு உரமாகவும் பயன்படுத்தலாம். செடியின் ஒரு கிலோ விதை 650 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன் மூலமும் நல்ல வருவாய் கிடைக்கும். தென்னை, பாக்கு, வாழைகளுக்கு இடையே இதை ஊடுபயிராக பயிரிடலாம்.

இரும்புக்கலப்பை கொண்டு இரு முறையும், நாட்டுக்கலப்பை கொண்டு மூன்று அல்லது நா ன்கு முறையும் உழவேண்டும். பார் பிடித்தல் 6 மீ நீளம் மற்றும் 1 மீ இடைவெளியில் பார் பிடி த்து பார் களுக்கிடையில் வாய் க்கால்களை அமைக்க வேண் டும். மண் பரி சோதனையின் படி உரமிட வேண்டும். மண் பரி சோதனை செய்யாவிடில் (எக் டருக்கு) அடியுரமாக 10:60:30 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து இடவும்.

விதை அளவு – தீவனத்திற்கு எக்டருக்கு 10 கிலோ.

அமில நேர்த்தி: விதைகளை அடர் கந்தக அமிலத்தில் மூன் று நிமிடம் ஊறவைத்து விதைகளை நன்கு கழுவிய பின் குளிர்நீரில் இரவு முழு வதும் ஊறவைக்க வேண்டும். அல்லது விதைகளை வெந் நீரில் நான்கு நிமிடம் ஊற வைத்து பின் குளிர்நீரில் இரவு முழுவதும் ஊறவைக்க வேண் டும். மேலும் எளிய முறையாக பாத்திரத்தில் நீரை 1000 செ.கி.க்கு கொதிக்கவைத்து பின் 4 நிமிடம் ஆறவைத்து (800 செ.கி) விதை களை 3-4 நிமிடம் ஊறவைக்க வேண்டும். அடுத்து சூடான நீரை வடித்துவிட்டு குளிர்ந்த நீரில் இரவு முழுவதும் ஊறவைக்க வேண் டும். விதைகளை 72 மணி நேரம் குளிர்ந்த நீரில் ஊறவைத்தும் வைக்கலாம். விதைநேர்த்தி செய்தபின் ரைசோபியம் உயிர் உரத்தை அரிசிக் கஞ்சியில் கலந்து காயவைத்தபின் விதைக்க வேண்டும்.

நீர் மேலாண்மை: பாசன பகுதிகளில் வளர்க்கப்படும் பயிர்களுக்கு நீர் மேலா ண்மை செய்திட வேண்டும். வளர்ச்சி யடைந்துவிட்டால் சில மாதங்களின் வறண்ட சூழ்நிலையையும்கூட தாக்குப் பிடித்து விடும். இருந்த போதிலும் விரைவான இளஞ்செடிகளின் வளர்ச் சிக்கு நிலத்தில் 5 முதல் 6 மாதங்கள் வரை ஈரம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

அறுவடை: நட்டபின் 6 மாதத்திற்கு பிறகு அறுவடை செய்யலாம். தண்டின் விட்டம் 3 செ.மீ. அடைந்தவுடன் (அல்லது) ஒருமுறை விதை உற்பத்திக்கு விட்டவு டன் முதல் அறுவடை செய்ய லாம். அதற்கு பிறகு 40-80 நாட்களில் வளர்ச்சி மற்றும் பருவத்திற்கேற்ப அறுவடை செய்யலாம். வறட்சி அதிகமு ள்ள பகுதிகளில் மரத்தை இர ண்டு முதல் மூன்று வருடத்தி ற்கு அறுவடை செய்யாமல் விட்டுவிட வேண்டும். மரத்தை தரைமட்டத்திலிருந்து 90-100 செ.மீ. உயரம் விட்டு அறுவடை செய்ய வேண்டும். பூட்டு மற்றும் எரிபொருளாக பயன்படுத்த மரத்தை 2.5 அல்லது 5 வருடத்திற்கு வெட்டாமல் பக்கக்கிளைகளை அகற்றிவிட வேண்டும்.

தொடர்புக்கு: ஆர்.ஜி.ரீஹானா, அக்ரி கிளினிக், 268/77, பழைய ஹவுசிங் யூனிட், தாராபுரம்-638 657.
ஆர்.ஜி.ரீஹானா, தாராபுரம், 89037 57427.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: