Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சமச்சீர் கல்வி தொடர வேண்டும் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

தமிழகத்தில் சமச்சீர் கல்வி தொடர்பாக சென்னை ஐகோர்ட் பர பரப்பு தீர்ப்பை வெளியிட்டுள்ளது. நடப்பாண்டில் அனைத்து வகுப்பு களிலும் சமச்சீர் கல்வியை தொட ர வேண்டும் என்றும் வரும் 22 ம் தேதிக்குள் சமச்சீர் கல்வி தொடர் பான புத்தங்கள் வழங்கிட வேண் டும் என்றும் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

ஆட்சி மாற்றம்- கல்வி முறையில் மாற்றம்: கடந்த தி.மு.க., ஆட்சி காலத்தில் தமிழகத்தில் மெட்ரிக்., அல்லாத எல்லோருக்கும் சம மான கல்வி வழங்கும் நோக்கத்தில் சமச்சீர் கல்வி என்ற புதிய திட்டத்தை துவங்கியது. இதன்படி கடந்த கல்வி ஆண் டில் 1ம் வகுப்பு, மற்றும் 6ம் வகுப்பில் இருந்து கொண்டு வரப்பட்டு திட்டம் துவக்கப் பட்டது. இந்த ஆண்டு ஏனைய வகுப்புகளுக்கு இந்த திட்டம் கொண்டு வரப்படவிருந்தது. இந்நிலை யில் அ.தி. மு.க, ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் சமச்சீர் கல்வியை ரத்து செய் வதாக தமிழக அரசு அறிவித்தது. எந்த பாடத்தை கற்பிப்பது, புத்தகம் அச்சிடு தல் உள் ளிட்ட காரணத்தினால் கடந்த ஜூன் 1 ம் தேதி திறக்கப்பட வேண்டிய பள்ளிகள் 15 ம் தேதி வரை தள்ளிப் போனது. பள்ளிகள் திறந்தாலும் பாடங்கள் எதுவும் நடத்தப் படாமல் உள் ளது.

சுப்ரீம் கோர்ட் வரை சென்ற வழக்குகள்: சமச்சீர் கல்வி ரத்து செய்யக்கூடாது என சென்னை ஐகோர்ட்டில் பொ து நலமனு தாக் கல் செ ய்யப்பட்டது. இதில் தமிழக அரசு சமச்சீர் கல்வியை ரத்து செய்தது சரியல்ல என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இதனால் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. ஜூன் மாதம் 14 ம் தேதி அப்பீல் மனுவை விசாரித்த நீதிபதிகள் ; தலைமைசெயலர் தலைமையில் ஒரு புதிய நிபுணர் குழுவை நியமித்து அறிக்கை தாக்கல் செய்ய பணித்தது. இத்து டன் இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் விசாரித்து விரைவில் தீர்ப்பளிக்க வேண்டும் என்று உத் தரவிட்டனர்.

கல்வியாளர்களை கொண்ட , தலைமை செயலர் தேபேதிரநாத் சாரங்கி தலைமையிலான குழு இந்த வழக்கில் கடந்த கால சமச்சீர் கல்வி தொடர்பான விஷய ங்கள் குறித்து ஆய்வுசெய்து அறிக்கை யை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாக்கல் செய்தது. இதில் இந்தக்கல்வி தரமான தாக இல்லை என்றும் மொழிப் பெயர்ப்பில் தவறுகள் உள்ளதா கவும், புத்தகம் திருத்தம் உள் பட முற்றிலும் மாற்றி அமை க்க வேண்டி யிருப்பதால் சமச் சீர் கல்வியை நடை முறைப் படுத்த முடியாது என்றும் கூறப் பட்டது.

சட்ட திருத்தமும் ரத்து: இந்த வழக்கில் இன்று சென்னை மதியம் (12. 45 மணியளவில் ஐகோர்ட் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். தலை மை நீதிபதி இக்பால் தலைமை யிலான பெஞ்ச் கொண்ட நீதி பதிகள் அளித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது: நடப்பாண் டில் 1 முதல் 10 வரை அனைத்து வகுப்புகளிலும் சமச்சீர் கல்வி யை தொடர வேண்டும் என்றும் வரும் 22 ம் தேதிக்குள் சமச்சீர் கல்வி தொட ர்பான புத்தங்கள் வழங்கிட வேண்டும் என்றும், பழைய பாடத் திட்டத்திற்கு தடை விதித்தது. மேலும் இன்னும் 3 மாதத்திற்குள் ஒரு குழுவை அமைத்து சமச்சீர் கல்வி குறைபாடு களை தீர்த்துக் கொள்ளலாம். தமி ழக அரசு கொண்டு வந்த சட்ட திரு த்தமும் ரத்து செய்யப் படுகிறது. இவ்வாறு ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. புதிய பாடப் பபுத்தகம் வழங்குவதற்கான கால அவகாசம் போதாது என்று அரசு வக்கீல் சார்பில் தெரிவிக்கப்பட் டது .இது ‌தொடர்பாக தனி மனு வை தாக்கல் செய்யுங்கள் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக அரசு வழக்குரைஞர் கூறியுள்ளார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: