Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தாம்பத்யத்தில் உள்ள‌ முக்கிய அம்சங்கள்

தாம்பத்யம் என்பது இல்லற பந்தத்தில் உடல் பசியை தீர்ப்பதற்கு மட்டுமல்ல. ஒருவருக்கொருவர் அன்பை பகிர்ந்து கொள்ள உதவும் ஆயுதம். உடல் தேவையை பூர்த்தி செய்வது மட்டுமே நோக்கமாக இரு ந்தால் அது முழுமையான காதலா காது.

உறவின் போது உணர்ச்சிப் பூர்வ மான, அன்பான பந்தம் கணவ னுக்கும் மனைவிக்கும் இருந்தால் தான் மணவாழ்க்கை முழுமை பெறும். உறவுக்கு முந்தைய விளை யாட்டுக்களான தொடுதல், முத்தமிடுதல் உள்ளிட்டவை தாம்பத் யத்தில் முக்கிய அம்சமாகும். ஸ்பரிசம் மூலமே உணர்வு தூண்டப் படுகிறது.

மனித உடல் நரம்புகளால் மூடப்பட்டது. உடலின் சில பகுதிகளில் நரம்புகள் அதிக மாக இருக்கும். இவற்றை தொட்டால், தடவினால் மகிழ்ச்சி பல மடங்கு அதிக மாகும். எண்ணற்ற பெண்கள் உறவுக்கு முந்தைய முன்தொடுதலை விரும்பு வதாக ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கண்டறி யப்பட்டுள்ளது.

முன் விளையாட்டுக்குத் தேவையானவை:

நேருக்கு நேர் பேசிக் கொள்ளுதல் அவசியம். ஏனென்றால் முன் தொடுதல் சிலருக்கு பிடிக்கலாம். சிலருக்கு பிடிக்காமல் போக லாம். மனம் விட்டு பேசிக்கொண்டால் பிரச்சனைகள் தீரும்.

அக்கறை உள்ள அன்பு, கவனிப்பு. “நான் இருக்கிறேன் உனக்கு பாது காப்பாக” என்று சொல்லாமல் சொல்லும் பரிவான தடவல்களால், ஒரு ஆண், ஒரு பெண்ணின் மனதை நெருடி, உணர்ச்சிகளை ஊக்குவிக்க முடியும். இதனால் மனரீதியாகவும் பெண்கள் பாது காப்பாக உணர்வதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டு ள்ளது.

தொடுதல் – ஒரு முக்கிய காரணி

முன் தொடுதலால் சருமம் மூலம், இன்பமான உணர்ச்சிகள், உட லெங்கும் பரவும். அணைத்தல், தழுவுதல் போன்ற குறிப்பான பாலியல் தொடுதலைப் போலவே, பாலியல் குறிக்கோளாக இல்லா மல், பரிவுடன் செய்யப்படும் ஆதரவான தழுவுதல், தொடுதல் இவையும் பெண் களுக்கு பிடித்தமான செயல்களாகும்.

மிருதுவான ஸ்பரிசம், மிருதுவான, மென்மையாக தொடுதல் இவைகளே சில சமயங்களில் உணர்ச்சியை தூண்ட போதுமானவை. பின் முதுகை தட வுதல், மசாஜ் செய்தல் இவை சிலருக்கு ஆசை உணர்வை அதிகரிக்கும்.

கழுத்தை நீவுதல், விரல்களை லேசாக கடித்தல் போன்ற பலவித செயல்கள் இருக்கின்றன. இவற்றை ஆண்கள் தங் களின் மனைவிக்கு ஏற்றவாறு கையாளலாம் என்றும் ஆய்வா ளர்கள் தெரிவித் துள்ளனர்.

முத்தம் உணர்த்தும் அன்பு

முத்தமிடுவதுதான் உறவின் திறவுகோல். இது அனைவரும் பிடித்தமானதும் கூட. முத்தமிடுதல் மூலம் பெண்ணின் ஆசையை ஆதிகரிக்கச் செய் யலாம். முன் தொடுதல் விளையாட்டினால் பெண் கள் மட்டுமல்ல, ஆண்களும் மகிழ்ச்சியடைவது கண்டறியப் பட்டுள்ளது.

ஆண்களும் முன் தொடுதலை ஆரம்பிக்கும் முன், பெண்ணை சகஜ நிலைக்கு கொண்டு வர வேண்டும். எப் பொழுதும் ஒரே மாதிரியாக இல்லாமல் கற்ப னையை புகுத்தி மாற்றங்களை கையாண்டால் தாம்பத்யத்தில் இனிமை கூடும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: