தொடர்ந்து இரண்டு சிம் போன்களையும் வெளியிட்டு வரும் நோக்கியா நிறுவனம், இன்னும் சில வாரங்களில் தன் மொபைல் போனைக் கொண்டு வர இருக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.5,000க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிற து. கருப்பு மற்றும் கோல் டன் வெள்ளை என இரண்டு வண்ணங்களில் உருவா க்கப்பட்டுள்ள இந்த போனி ல் திரை 2.6 அங்குல அகலம் கொண்டுள்ளது. இதன் நினைவகம் 10 எம்பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்த லாம். இதன் சிறப்பு அம்ச மாக டச் ஸ்கிரீனைச் சொல்லலாம். அத்துடன் இதன் ஸ்லை டிங் தன்மை இளைஞர்களைக் கவர்வதாக உள்ளது.
2 மெகா பிக்ஸெல் திற னுடன் போட்டோ மற் றும் வீடியோ இயக்கம் கொண்ட கேமரா தரப்பட் டுள்ளது. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்ட ண்ட் மெசேஜிங், புஷ் மெயில் ஆகிய தொடர்பு வசதிகள் உள்ளன. எம்பி 3 பிளேயர், எப்.எம். ரேடியோ இயங்குகின்றன. A2DP இணைந்த புளுடூத் மற்றும் வை-பி நெட்வொர்க்கிங் இணைப்பு களுக்குக் கை கொடுக்கின்றன. விரைவில் இந்த போன் சந்தையில் கிடைக்கும்.