Friday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்றும் இன்றும்- வைரஸ், வோர்ம், டீரோஜன்

கம்ப்யூட்டருக்கான பாதிப்பு குறித்துப் பேசுகையில், பிரச்னை எத்த கையது என்பதை வரையறை செய்வதுதான் கடினமான ஒரு சிக்கலாகும். பாதிப்பு வராமல் தடுக்கும் வழிமுறைகள் குறி த்தும் பல வேறுபாடான கருத் துக்களும் செயல்முறைகளும் இருந்து வருகி ன்றன. ஒரு சிலர் பெர்சனல் கம்ப்யூட்டரில் வை ரஸ் மற்றும் மால் வேர் தடுப்பு வழி முறைகள் மிகவும் பழமை யானவையாகவே இருக்கின்றன என்று குற்றம் சாட்டுகின்றனர். அப்படியானால், பெர் சனல் கம்ப் யூட்டர் களிலும், மேக் கம்ப்யூட்டர்களிலும், கெடுதல் விளைவிக் கும் சாப்ட்வேர் தொகுப்புகளை எப்படிக் கையாளலாம்?

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும் முன், மால்வேர் புரோகிராம் ஒன்று எப்படி கம்ப்யூட்டருக்குள் நு ழைகிறது என்பதனை அறிந்தி ருக்க வேண்டும். ஆனால், அங்குதான் வேறு பட்ட கருத்துக்களும் முடிவுகளும் உருவாகின்றன.

மேக் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர் கள், விண்டோஸ் சிஸ்டத்தின் கட்ட மைப்பே பாதுகாப்பற்றது என்று, தவ றாக, கூறுகின்றனர். ஒரு சில இணை யதளங்களுக்குச் செல்வதன் மூல மும், சில இமெயில் களைத் திறப் பதன் மூலமும், விண்டோஸ் பயன் படுத்துபவர்கள், மால்வேர் தொகுப்புகளைத் தங்கள் கம்ப்யூட்டரில் நுழைய விட்டு விடுவதாகச் சொல்கின்றனர். இது முற்றிலும் உண் மையானது இல்லை.

இரண்டு வகைக் கம்ப்யூட்டர்களைப் பொறுத்தவரை சில விஷயங் களை ஒத்துக் கொண்டாக வேண் டும். 1. வைரஸ், வோர்ம், ட்ரோ ஜன் மற்றும் பல பெயர்களில் நாம் பத்து ஆண்டுகளுக்கு முன் தந்த விளக்க வரையறைகள், இப் போது உள்ள கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களு க்குப் பொருந்தாது.

நீங்கள் அவ்வப்போது வெளியி டப்படும் செக்யூரிட்டி அப்டேட் பேட்ச் பைல்களை டவுண்லோட் செய்து இணைத்து இயக்கி விட்டால், டவுண்லோட் செய்வதன் மூலம் வைரஸ்கள் வருவ தற்கு இடமே இல்லை. கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களைப் பொறுத்த வரை, அவை பரவும் விதம், கெடுதல் விளைவிக்கும் தன்மை ஆகியவ ற்றின் அடிப்படையில், ஒரு சில குழுக்க ளாகப் பிரித்துவிட லாம்.

சமுதாய அடிப்படையில் வரும் செய் திகளின் அடிப்படையிலேயே, பெரும்பா லானவர்கள் தங்களின் கம்ப்யூட்டர்களில் வைரஸ் புரோகிராம்களை அனுமதித்து விடுகின்றனர். ஒரு சிலர் மேக் கம்ப்யூட் டர்களில் மால்வேர் மட்டுமே நுழையும். வைரஸ்கள் நுழைவ தில்லை என்று தவறாக முடிவு செய்கின்றனர்.

இன்றைய கால கட்டத்தில் வைரஸ்கள் என்று நாம் முன்பு பெயரிட் டது போல கெடுதல் விளை விக்கும் நாசகார புரோகிராம் கள் வருவ தில்லை. 1990 ஆம் ஆண்டு வாக்கில் வந்த மெலி ஸ்ஸா என்ற ழைக்கப்பட்ட வைரஸ் தான், உண்மையிலே யே வைரஸ் ஒன்றின் அனை த்து கெடுதல் முகங்களையும் கொண்டிருந்தது. அதன்பின் வைரஸ் என்று சொல்லப்பட்ட புரோகிராம்களின் கெடுதல் தன்மை அவ்வளவு தீவிரமாக இல்லை. பின் வந்த காலங்களில், மால்வேர் எனப்படும் கெடுதல் புரோகிராம் களே அதிகமான எண்ணிக்கையில் இரு ந்தன. சில இணைய தளங் களுக்குச் செல்கையில், அதில் உள்ள சில குறி யீடுகள் இயங்கி, கம்ப்யூட்டரின் பபர் நினைவகத்தினைக் காலி செய்து, நேரா க கம்ப் யூட்டரை இந்த மால்வேர் புரோ கிராம்கள் சென்றடைந்தன. இந்த தள ங்கள் பெரும்பாலும் சமுதாய இணைய தளங்களாகவோ, அல்லது அது போன்ற போர்வையில் தகவல்க ளைத் தந்து, மக்களை ஈர்ப்பனவாகவோ உள்ளன என்று ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

மிக அதிகமான சேதத்தை விளைவித்தது கான்பிக்கர் வோர்ம் தான். 2010 ல் இதன் விளைவு மிக அதிக மாக இருந்தது. இதில் என்ன வேடிக்கை என்றால், 2008 ஆம் ஆண்டிலேயே, இந்த வோர்ம் வந்த வழியில் இருந்த பிரச்னை களுக்கான தீர்வு ஒரு பேட்ச் பைலாகத் தரப்பட்டது. ஆனால், பலர் அதனைக் கொ ண்டு தங்கள் ஆப்ப ரேட்டிங் சிஸ்டத்தினை அப்டேட் செய்திடாமல் விட்டுவிட்டனர். இதனால் ஏற்பட்ட விளைவு மிக மோச மாகப் பின்னாளில் இருந் தது.

யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவ்களின் ஆட் டோ ரன் தன்மையை அடிப்படையாகக் கொண்டு பல ட்ரோஜன் வைரஸ்கள் உலவி வரு கின்றன. AutoRun, Rimecud Hamweq ஆகிய மூன்றும் இந்த தன் மை உடையவையே. ஆட்டோ ரன் தன்மையின் மூலம் மால்வேர் இன்ஸ்டால் செய்யப்படு வதில்லை. இதன் மூலம் டயலாக் பாக்ஸ் ஒன்றைக் காட்டி, அதன் மூலம் வைரஸ் புரோகிராமினை இன்ஸ் டால் செய்வதே இதன் வழிமுறையாகும்.

தற்போது பெர்சனல் கம்ப்யூட்டர், மேக் என்ற பாகுபாடு இன்றி, வைரஸ்கள் அனைத்து சிஸ்ட ங்களிலும் பரவும் வகையிலேயே உருவாக்கப்பட்டு அனுப்பப் படுகின்றன. இருப்பினும் அனைத்து வைரஸ் பரவும் வழிகளுக்கும் உடனுடக்குடன் தீர்வுக்கான பேட்ச் பைல்கள் உருவாக்கப்பட்டு வழங்கப் படுகி ன்றன. இவற்றைக் கொண்டு நம் சிஸ்ட த்தினை அப்டேட் செய்வது ஒன்றே நாம் நம் கம்ப்யூட்டரைப் பாதுகாத்திடும் வழி யாகும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply