Saturday, December 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தற்கொலை எண்ணத்தை மாற்றுவது எப்படி?

மருத்துவர் எஸ்.எம்.பதூர் மொய்தீன் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை

மனித குலத்திற்கே மாபெரும் சவாலாக அமைந்திருப்பது மனித மனங்களில் உதித்து வரும் தற்கொலை எண்ணம்தான்.

உலகில் வருடந்தோறும் நடக்கும் இய ற்கை சீற்றங்களை விட… நடை பெறும் வன்முறை மற்றும் கொலைகளை விட… பல்வேறு நாடுகளுக்கிடையே நடைபெறும் போர்களால் ஏற்படும் இழப்பினை விட இன்று உலகை யே பயமுறுத்திக் கொண்டிருக்கும் எய்ட்ஸ் என்னும் கொடுமையா ன நோயால் இறப்பவர்களைவிட தற்கொலை செய்து கொண்டு இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதே உண்மை என்கிறார் தமிழ்நாடு மாநில மனநலசங்கத்தின் முன்னாள் செயலாளர் எஸ். எம். பதூர்மொய்தீன்.

உலகம் முழுவதும் வருடத்திற்கு குறை ந்தது பத்து லட்சம் பேர் தற்கொலை செய் து கொள்கிறார்கள் என்ற புள்ளி விவரம் நம்மை திகைக்க வைக்கிறது. எதிர்காலத்தில் இதன் எண்ணிக்கை இன்னும் கூடிக்கொண்டே போகும் நிலைதான் உள்ளது.

இந்தியாவில் வருடத்திற்கு ஒரு லட்சத்துபத்தாயிரம் பேர்களுக்கு அதிகமாக தற்கொலை செய்து கொள்கின்றனர் உலகில் தற்கொ லை செய்து கொள்ப வர்களில் பத்து சதவீதத்திற்கும் மேல் இந்தி யர்கள் என்பது அதிர்ச்சியாகதான் உள்ளது.

இன்று நாம் மருத்துவ உலகில் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி சாத னை படைத்து வருகிறோம். உடல் சம்மந்தப்பட்ட மற்றும் மனம் சம்மந்தப்பட்ட ஆய்வுகளில் வெற்றி பெற்றுள்ளோம்.

அந்த வகையில் மனநோயாக கருதப்படும் தற்கொலை, அல்லது தற்கொலைபடை என்று கூறிக் கொ ள்பவராகட்டும், இவர்களுக்கு எல்லாம் உளவியல் ரீதியிலான சிகிச்சைகள் வெற்றிகரமாக நட ந்து வருகின்றன. தற்கொலை எண் ணம் மனதில் உதிப்பது என்பதே ஒரு மனநோய் என்பதும் இதற்கு மனநல மருத்துவர்களை கட்டா யம் அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது நிறைய பேர்களுக்கு தெரிவதில்லை.

இன்றைய நம் வாழ்க்கை முறையில் பல்வேறு பிரச்சினைகள், சிக்கல்கள், குளறுபடிகள் ஏற்ப ட்டு வருகின்றன. நாகரீகம் வளர வளர நமக்குள் பல்வேறு விதமான சிக்கல்களும் உரு வாகி வருகின்றன. அத்தகைய சிக்கல்களைத் தீர்க்க வழி தெரி யாத பட்சத்தில், அதற்கு ஒரே தீர்வு தற்கொலை செய்து கொ ள்வதுதான் என்ற தவறான முடி வுக்கு வருகின்றனர்.

நாம் யார், எதற்காக பிறந்திருக்கிறோம், இந்த பூமியில் பிறந்து என்ன செய்திருக்கிறோம், பிறருக்கு என்ன பயன் என்ற கேள்வி களை நமக்குள்ளே கேட்டிருக் கிறோமா.

அதனை மேம்போக்காக உண ர்ந்தவர்கள் அல்லது பிறர் மூலமாக உணர்ந்து கொண் டவர்களே வாழவேண்டும் எப்படியும் வாழ வேண்டும், வாழ்க்கையில் சாவதற்குள் எதையாவது சாதித்து விட் டுச் சாகவேண்டும் என்ற மனபக்குவத்திற்கு வருகின்றனர். பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் கடமை இருக்கிறது. கடமை இல்லை யென்று எந்த மனிதனும் மறு த்துவிட முடியாது. கடமைகள் வேறுபடலாம்.

மனிதனுக்கு பிரச்சினைகள் என்றும் ஒழியப்போவதில்லை. அது சாகும் வரையில் வெவ் வெறு வடிவங்களில் இருந்து கொண்டே தான் இருக்கும். நம் மைச்சுற்றி வலம் வந்து கொ ண்டேதான் இருக்கும். அந்த பிரச்சினைகளை எதிர் கொள்பவனே மனிதனா கிறான்.

பிரச்சினைகளை கண்டு பயப்படு கிறவன் கோழையாகிறான். அந்த கோ ழைத்தன எண்ணமே அவனை தற்கொ லை எண்ணத்திற்கு அழைத்துச் செல் கிறது.

சிலர் தற்கொலை செய்து கொள்வத னை வீரதீரச் செயலாக நினைக்கின் றனர். தற்கொலை செய்து கொள்வதற்கு மிகுந்த துணிவு வேண்டும் என்பார்கள். இதெல்லாம் அபத்தம்.

அப்படி துணிவு மிகுந்தவர்களாய் இரு ந்தால் பிரச்சினைகளை எதி ர்த்து வாழ் ந்துகாட்ட வேண்டுமே தவிர, கோழைத் தனமாக தற்கொலை செய்து கொள்ளு தல் கூடாது.

தற்கொலையோ அல்லது தற்கொலைப டையோ என்பது மகா கோழைத்தனம் என்பதனை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்கிறார் மருத்துவர் எஸ்.எம்.பதூர் மொய்தீன்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply