Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நமது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் மூக்கின் வகைகள் 14

நமது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் மூக்கின் பங்கு முக்கிய மானது. கோபமோ, நாணமோ முத லில் சிவப்பது மூக்கின் நுனிதான். மூக்கு என் பது நம் முகத்தில் வெறும் அலங்காரத் துக்ககாக மட்டுமே என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் மனிதர்களின் முக்கிய உறு ப்புகளில் மூக்கும் ஒன்று.

இஸ்ரேலில் உள்ள பென்-குரியன் பல் கலைக்கழகத்தைச் சேர்ந்த பேரா சிரியர் ஆப்ரகாம் தமிர் என்பவர் மனிதர்களுக்கு 14 விதமான மூக்கு கள் உள்ளன என்று கண்டறிந்துள் ளார். தனது மாணவர்கள் துணையுடன் மனித மூக்குகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட ஆப்ரகாம் தமிர், பிறைவடிவிலான மெல்லிய மூக்கு, சதைப் பிடிப்பு மூக்கு, உரு ண்டை மூக்கு, ரோமன் மூக்கு என மொத்தம் 14 விதமான மூக்குகள் இருப்பதாக பட்டிய லிட்டுள்ளார்.

மனிதர்களுக்கு எத்தனை வகை மூக்குகள் உள் ளன? என்பதை கண்டறியவே இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. மூக்கின் வடிவத்திற்கு தகுந்து மனிதர்களின் இயல் பினையும், உணர்வுகளையும் வெளிப்படுத் துவதாக அவர் தனது ஆய்வில் தெரிவித் துள்ளார்.

ரோமன் மூக்கு

நடிகர் டாம்குரூஸின் ரோமன் மூக் கிற்கு 9 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த வகை மூக்கு உடையவர்கள் தெளிவான சிந்தனையும், உயர்ந்த லட்சியமும் கொண்டவர்கள் என்பது கண்டறி யப்பட்டு ள்ளது.

வளைந்த மூக்கு
ஹாரி பார்டர் கதாநாயகன் டேனியல் ராட் கிளிப் மூக்கிற்கு 9 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். சற்றே வளைந்து காணப்படும் இந்த வகை மூக்கை உடைய வர்கள் அமைதியான மனதுடன் கூடிய வர்த்தக ரீதியாக சிந் தனை உடையவர்கள் என்பது ஆய்வில் கண்டறியப்பபட்டுள் ளது.

சப்பை மூக்கிற்கு 5 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது வெய் னே ரூனியின் சப்பை மூக்கு அநேகம் பேரை கவர் ந்துள்ளது.

ஓவியர்களை கவர்ந்த மூக்கு

இங்கிலாந்தின் இளவரசி கேட் மிடில்டனின் மூக்கு அனைவரை யும் கவரக்கூடியதாக உள்ளது. ஓவியக் கலைஞர்கள் அனைவ ரும் விரும்புவது இந்த வகை மூக்கினைத்தான். சதைப் பிடிப்பி டிப்புள்ள மூக்குகள் ஆண்களிடம் தான் அதிகமாக காணப்படுகி ன்றன. இந்த மூக்குக்கு உதாரணம் கூற வேண்டுமானால், இளவரசர் பிலிப்பை சொல்லாம்.

மூக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதில் வல்லுநராக திகழும் சைமன் வித் தே என்பவர் அநேக பெண்கள் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலீனா ஜூலியின் மூக்கினைத்தான் அதிகம் விரும்பு வதாக தெரிவித்துள்ளார். ஏஞ்சலீனா வின் மூக்கு பிரத்யேக வடிவமைப்பு கொண்டதாக உள்ளதே இதற்கு கார ணம்.

அதிகம் விரும்பப்படும் மூக்கு

எந்த வகையான மூக்கை விரும்புகிறீர்கள் என்று பொதுமக்களிடம் நடத் தப்பட்ட கருத்துக்கணிப்பில் லேசாக வளைந்த பிறை வடிவ மூக்கை விரும் புவதாக 13 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். நீண்ட மூக்கை பெரும்பாலானோர் விரும்பவில்லை. தடிமனான மூக்குக்கு 5 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்தள்ளனர்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply