Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நீண்ட ஆயுளுக்கு தாம்பத்தியமே சிறந்த மருந்து

ஆரோக்கியமான தாம்பத்ய வாழ்க்கை மூலம் நீடித்த ஆயுளை பெற முடியும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. நம்பிக்கைக்குரிய ஒருவருடன் மட்டும் தொடர்ந்து தாம்பத்ய உறவில் ஈடுபட்டு வருவோருக்கே இது பொருந்துமாம். அதே சமயம், பல்வேறு பெண்களுடன் சக ட்டு மேனிக்கு உறவு கொள்வோருக்கு இது சற்றும் பொருந்தாது என்று இத்தாலி யைச் சேர்ந்த ஆய்வாளர் இமானுவேல் ஜனினி தெரிவித்துள்ளார்.

வாழ்நாள் நீடிக்கும்

உறவு கொள்ளும் பெண் மீ்து மிகுந்த நம்பிக்கையும், பூரண திருப்தியும் வைத்திருக்கும் ஆண்களுக்கு செக்ஸ் வாழ்க் கை இனிதாக அமைகிறது. இப் படிப்பட்டோர் தொடர்ந்து செக் ஸ் வாழ்வில் ஆர்வத்துடன் ஈடு படுகின்றனர். இதனால் அவர் களுக்கு இதயக் கோளாறுகள் வருவது குறைகிறது, வாழ்நா ளும் நீடிக்க வாய்ப்பு ஏற்படு கிறது என்றும் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

முறையான செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபட்டிருப்போருக்கு இதய நோய்கள் ஏற்படுவதில்லை என்பதால் மாரடைப்பு எட்டிப் பார்ப்பதில்லை. இதன் மூலம் தான் அவர்களுக்கு ஆரோக்ய மான உடல் நலமும், நீடித்த ஆயுளும் சாத்தியமாகிறதாம்.

மன அழுத்தம் குறையும்

செக்ஸ் உறவில் தொடர்ந்து அதிக அளவில் ஈடுபடும்போது ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரான் உற்பத்தி அதிகரிக்கிறது. தொட ர்ந்து அதிகரித்த அளவிலும் உள்ளது. இதன் மூலம் மன அழுத்தம் அவர்களுக்குக் குறைகிறது. இது உடலின் மெட்ட பாலி சத்தை சிறப்பாக வைக்க உத வுகிறது என்கிறார் ஜனினி.

ஆண்களுக்கு செக்ஸ் உற வின்போது உற்பத்தியாகும் டெஸ்டோ ஸ்டிரான் மிகவும் நன்மை பயக்கக் கூடியது. தேவையில்லாத சர்க்கரை யை அது குறைக்கிறது. இது இருதயத்திற்கு மிகவும் நல்லது. குறிப்பாக சர்க்கரை வியாதி உள்ளவர்கள அதிகளவில் உடலுறவு களில் ஈடுபடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அது அவ ர்களது சர்க்கரை அளவை கட்டுப் பாட்டில் வைத்திருக்க உதவு கிறது என்கிறார் ஆய்வாளர்.

முறையற்ற உறவு

உடல் தேவைக்காக மட்டுமே பல் வேறு பெண்களுடன் செக்ஸ் உறவு கொள்வோருக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறதாம். குறிப்பாக கள்ளக் காதலில் ஈடுபடுவோருக்கு மன அழுத்தம் மிக அதிகமாக இருக்கு மாம். யாருக்காவது தெரிந்து விடு மோ என்ற பயத்திலும், பதட்டத்திலும் இருப்பதால் அவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிப்பதோடு, இருதயக் கோளாறுகளும் சீக்கி ரமே வந்து சேருகிறதாம்.

உடல் ஆரோக்கியம் கருதிதான் நமது முன்னோர்கள் பிறன் மனை நோக்குவதை பாவம் என்று தெரிவித்திருக்கின்றனர்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: