Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கூகுள் பிளஸ், பேஸ்புக்கை வீழ்த்துமா?!

இணையத்தில் ஜாம்பவானான கூகுளையே ஆட வாய்த்த தளம் என்றால் அது பேஸ்புக் தான். பேஸ்புக் தளம் ஆரம்பித்த சில நாட் களிலேயே அசுர வளர் ச்சியை நோக்கி பயணித்து. பல கிளை இணைய தளங்களை வைத்துள்ள கூகுளால் பேஸ் புக் எனும் ஒரே தளத்தின் வளர் ச்சிக்கு முன் ஈடு கொடுக்க முடி யவில்லை. இதனை சமாளிக்க Buzz வசதியை புகுத்தியது. அது எதிர்பார்த்த அளவு வெற் றி பெற வில்லை. அதனால் பேஸ்புக்கின் வளர்ச்சியை கட்டு படுத்த முடியவில்லை. கடந்த ஆண்டு எடுத்த ஆய்வின் படி பேஸ் புக் தளம் கூகுள் தேடியந்திரத்தை விட ரேங்கில் உயர்ந்தது. ஆனால் பல கிளை (youtube, blogger, Gmail) தளங்க ளை கூகுள் வைத் திருந் ததால் அவைகளின் து ணையோடு முதலிடத்தை தக்கவைத்தது.

இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் பேஸ்புக் முதலிடத்திற்கு வந்து விடும் என்று இணைய நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். இது மேலும் கூகுளின் வயிற்றில் புளியை கரைத் தது. நிலைமை யை புரிந்து கொண்ட கூகுள் சுதார்த்து கொண்டு கூகுள்+ எனும் சமூக இணையதளத்தை வெளியிட்டுள்ளனர். இந்த தளம் வெளியிட்ட அடுத்த மணி நேரத்தில் இந்த வச தியை பெற வாசகர்கள் குவிந்தனர். கூகுள் சர்வர் கள் ஸ்தம்பித்தது. இந்த அளவு ஆதரவை எதிர்பார்க்காத கூகுள் மகிழ்ச்சி வெள்ளத்தில் துள்ளி குதித்தது. சர்வர்கள் பிரச்சினை யால் புதிய வாசகர்களுக்கு வசதி கொடுப்பதை நிறுத்தினர்.  இன்ற ளவும் இந்த தளம் சோதனை பதிப்பிலேயே தான் உள்ளது. ஆனால் சோத னை பதிப்பிலேயே இந்த தளத்தை மில்லியன் கணக்கான வாசகர்கள் பயன்படுத்தி கொண்டு உள்ளனர்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply