Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிரித்துப்பார், நோய் தெரித்து ஓடும்

மருத்துவர் ஜி. வரதராசன் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை

பிறரை வசீகரிக்கச் செய்வது சிரிப்பு. சில குறிப்பிட்ட சமயங் களில் இது தானாக எழுவதே தவிர, நாமாக யோசித்து வரு வது அல்ல. மூளையின் செயல்பாட்டால் உண்டாகக் கூடிய தாக இருந்தாலும் உணர்வுகளால், நினைவு களால் தூண்டப் படக்கூடியது. சிரிக்கும் போது வாய் மட்டுமல்ல, கை-கால் களின் தசைகளும் இயக்கப்படுகிறது.

முதல் சிரிப்பு சுமார் மூனறை முதல் நான்கு மாத வாக்கில் ஆரம்பிக்கிறது. அழுகையைப் போலவே தாய் மற்றும் பிறரது கவனத்தை ஈர்க்க குழந்தை சிரிப்பையும் கை யாளுகிறது.

பெரும்பாலான சிரிப்புகள் ஜோக் அடிப் பதால் வருவதாக நாம் நினைக்கிறோ ம். அப்படியல்ல என்கிறார்கள் ஆய்வா ளர்கள். ஒருவரை ஒருவர் பார்க்கும் போதும், பேசும்போதும் இயல்பாக சிரிப்பு வருகிறது. இது சமூகப் பிணைப் பின் அடை யாளம் என்கிறார்கள் அந்த ஆய்வாளர்கள்.

சிரிப்பினால் பேச்சு தடைபடுவதில் லை… அதே சமயம், ஒரு நிறுத்தற்குறி மாதிரி சிரிப்பு பயன்படுகிறது.

சிரிப்பின் முன்னோடி

மனித சிரிப்பின் முன்னோடி நமது மூதாதையரான குரங்குகள் பல் லை விரித்துக்காட்டுமே.. அதுதான் என்கிறார்கள். எல்லா விலங்கு களுமே விளையாடும் போது வித்தியா சமான ஒலி எழுப்பத் தான் செய்கின்றன. அதாவது சிரிக்கத்தான் செய்கின்றன. ஆனால் அந்தச் சிரிப்புகள் அ னைத்தும் மனித சிரிப்பிலிரு ந்து முற்றிலும் மாறுபட்டவை. இதனால் அவற்றை சிரிப்பாக நாம் எடுத்துக் கொள்வதில் லை.

சிரிப்பு விளையாட்டோடு தொடர்புடையது. நாம் குஷி மூடில் இருந்தால் தான் சிரிப்போம்… இல்லாவிட்டால் உம்மென்றுதான் இருப்போம். நமக்கும் விளையாட் டுக்கும் இடையில் தூரம் அதிகம் என்பதால் தான், பெரியவர்களை விட சிறுவர்களே அதிக மாக சிரி க்கிறார்கள். இதுதான் உண்மை என்கின்றன ஆய்வுகள்.

சிரிப்பை பற்றி இன்னும் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்தால், சிரிப்பைக் கூட பிரித்துப் பார்க்கலாம்.. யாரை ப் பார்த்து சிரிக் கிறோம்.. யாருடன் சிரிக்கிறோம் என்பதிலிருந்து நமது சிரிப்பின் தன்மை தெரியவரும்.

அசட்டுச்சிரிப்பு என்பது, இக்கட்டான நிலையில் நாமாக வலிய சிரிப்பது, நாம் பிறரை தவிர்க்க முனைதல். ஏளனச் சிரிப்பு இருக் கிறது, அடுத்தவர்களை மட்டம் தட்டு வதற்கு இதை பயன்படுத் துகிறோம். கர்வச்சிரிப்பு இருக்கிறது,

தன்னைத்தானே உயர்வாக நினைப் பதைக் குறிக்கிறது. இதை போல் இளநகை, குரு நகை, குரூர நகை என சிரிப்பை நாமாக வேறுபடுத்திக் கொ ள்ளலாம்.

இயல்பான சிரிப்பில் இரண்டு வகை கள் உள்ளன. தானாக வருவது, நகை ச்சுவையால் வருவது, அதாவது உடல் ரீதியான சிரிப்பு, உளம்சார்ந்த சிரிப்பு.

நாம் எதையாவது நகைச்சுவையான ஒன்றைப் பார்த்தால் சிரிக்கி றோம். நமக்கு வித்தியாசமாகத் தெரிவதைப் பார்த்து சிரிக்கிறோ ம். ஒவ்வொரு பொருளும் ஒவ் வொரு வயதினருக்கு வித்தி யாசமாகப்படும். சராசரியாக ஒவ்வொரு மனிதரும் தினமும் பதினேழு முறை சிரிக்கிறார் கள்.

மருத்துவப் பலன்கள்

வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பார்கள். மன இறுக்கத்திற்குக் காரணமான ஹார்மோனைக் கட்டுப்படுத்தி மனத்தை தளர்த்துகிறது. கடுமையான நோய்களையும் எளிமை யாக மாற்றுவது சிரிப்பு.

மரம் அறுக்கும் வேலையில் ஈடு படும் பத்து நிமிட உழைப்பிற்கு ஈடா னது நூறு முறை சிரிப்பது என்கி றார்கள். சிரிப்பதால் உதர விதானம், நுரையீரல், வயிறு, கால்கள், முகம், முதுகு போன்ற அனைத்து உறுப்பு களுக்கும் பலன் கிட்டுகிறது. நமது மன நலனை மேன்மையுறச் செய் கிறது. பயம், கோபம் போன்ற எதி ரிடை எண்ணங்களை மாற்றுகிறது.

சிரித்தே நோயைப் போக்கலாம் என் பதற்காக மும்பையில் சிரிப்பு கிளப் ஆரம்பிக்கப்பட்டு பல கிளைகளுடன் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

சிரிக்கத் தெரியாதவனை மிருகம் என இகழும் உலகம் சிரிக்கத் தெரிந்தவன், வாழ்க்கையை ஜெயிக்கப் பிறந்தவன் எனப் போற் றுகிறது. நீங்கள் எப்படி?

5 Comments

 • செண்பகநாகேஸ்வரன்

  கடவுள் மனிதனுக்கு கொடுத்த அற்புத பரிசு சிரிப்பு .நன்றி!

 • செண்பகநாகேஸ்வரன்

  கடவுள் மனிதனுக்கு கொடுத்த அற்புத பரிசு சிரிப்பு நன்றி

 • செண்பகநாகேஸ்வரன்

  கடவுள் மனிதனுக்கு கொடுத்த அற்புத பரிசு சிரிப்பு

 • Selvam

  கடவுள் மனிதனுக்கு கொடுத்த அற்புத பரிசு சிரிப்பு

Leave a Reply