சூரியனில் 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் மாற் ற
ம் நிகழ்வதை ஆராய்ச்சியாளர் கள் கண்டுபிடித்துள்ளனர். லண் டன் இம்பீரியல் கல்லூரியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு ஜோவன்னா ஹெய்க் தலைமையில் இது குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டது. 2004 முதல் 2007ம் ஆண்டு வரை செயற்கைக் கோள்கள் மூலம் சூரியனின் செயல்பாட் டை தொடர்ச்சியாக கண்காணி த்தும் எடுக்கப்பட்ட போட்டோக்கள் மூலமாகவும் இது தெரிய வந்துள்ளது.
சுழற்சி முடிவில் வெப்பம் அதிக வீரியத்துடன் எழுகிறது. 11 ஆண்டு
களுக்கு ஒருமுறை இந்த மாற்றம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இதில் சில குழப்பங்களும் இருக்கின் றன. இந்த 11 ஆண்டு சுழற்சி ப்படி சூரிய மண்டலம் தற்போது பூமியை குளிர்விக்கும் காலக் கட்டத்தில் உள்ளது. ஆனாலும், புவி வெப்பம் அதிகரித்து வருகி றது.
சூரியனின் இயக்கம் தொடர்பாக முழுமையாக புரிந்துகொள்ள முடிய வில்லை. இதுகுறித்த ஆராய்ச்சி நடந்து வருகிறது. பூமி வெப்பம டைய சூரியக் கதிர்கள் மட்டும் காரணமல்ல. இயல்பாகவே பூமி வெப்பமடையும் தன்மையும், குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு தானே குளிரும் தன்மையையும் கொண்டது. இந்த கால இடைவெளி அவ்வப்போது மாறுபடுகிறது.