Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தூக்கத்தில் சிலர் நடப்பது ஏன் ?

சிலர் ஏன் தூக்கத்தில் நடக்கிறார்கள்? இந்தக் கேள்விக்கு பதில் சொல்றதுக்கு முன்னாடி, அடிப் படையில தூக்கத்தில் எத்தனை வகை இருக்கு, தூக்கத்தில் நட ப்பதுன்னா என்னங்கிற ரெண்டு முக்கியமான விஷயங்கள நாம தெரிஞ்சிக்கிறது அவசியம்னு நான் நெனக்கிறேன்.

தூக்கத்தில் எத்தனை வகை இருக்கிறது?

தூக்கம் பற்றிய ஆய்வுலகில் மொத்தம் மூன்று நிலைகள் இருக் கிறது.

1. விழிப்பு நிலை (wakefulness)

2. அதிவேக விழி அசைவுகளில்லாத தூக்க நிலை {(non-REM (rapid eye movement)}

3. அதிவேக விழி அசைவு தூக்க நிலை (REM sleep)- இது பெரும் பாலும் கனவுகளுடன் தொடர்புடைய நிலை!

தூக்கத்தில் நடப்பது என்றால் என்ன?

தூக்கத்தில் நடப்பது அப்படீங்கிறது, “மனிதர்களின் ஒருவகையான தூண் டப்பட்ட, குழப்பமான மனநிலை”ன்னு சொல் றாரு இதுபற்றிய ஆய்வு செய்த முனை வர் விசேஷ் கபூர். அதாவது, (அறிவியல் பூர்வமா சொல்லனும் னா) தூக்கத்தில் நடப்பது விழிப்பு நிலை மற்றும் அதிவேக விழி அசைகளில்லாத தூக்க நிலை அப் படீன்னு அர்த்தம்!

சிலர் ஏன் தூக்கத்தில் நடக்கிறார்கள்?

உண்மையச் சொல்லனும்னா, சிலர் மட்டும் ஏன் தூக்கத்தில் நடக்கிறாங்க மத்தவங்க ஏன் நடக்கி றதில்லைங்கிற இந்த கேள்விக்கு இன் னும் திட்ட வட்டமான / தெளிவான பதில் தெரியலைங்கிறது தான் நிதர்சன உண்மை!  இருந்தாலும், மாங்கு மா ங்கு ஆராய்ச்சி செஞ் சிட்டு, இப்படித் தெரியலை ன்னு, கூச்சப் படாம உதட்டப் பிதுக்கினா இந்த உலகம் நம்மள கொஞ்சங்கூட மதிக்காதுங்கிறது னால, செஞ்ச ஆய்வைப்ப த்தின ஆய்வறிக்கையில திரு. விசேஷ் கபூர் என்ன சொல்லியிருக் காரு ன்னா…….

பொதுவா தூக்கத்தில் நடப் பதற்க்கு, குடும்ப மரபனு வியல் சம்பந்தமான காரண ங்கள்கூட இருக்கலாமாம்?!  ஆனா,  பெரியவங்கள விட, குழந் தைங்கதான் பெரும் பாலும் தூக்கத்துல நடப்பா ங்களாம். அதுக்கு கார ணம், குழந்தைங்க தூங்கும்போ து, மெதுவான அலை தூக் கம் (low -wave sleep), அதாவது “ஆழமான அதிவேக விழி அசைவுக ளில்லாத தூக்க நிலை” அப்படீங்கிற நிலையில்தான் இருப்பாங் களாம். இந்த நிலையிலதான் தூக்கத்துல நடக்கிற செயலே தொட ங்குகிறது என்கிறது ஆய்வு?!

இது தவிர்த்த வேறு சில காரண ங்களாக ஆய்வுகளில் சொல்லப்படு வது……

1. சரியான தூக்கமின்மை

2. ஜூரம்

3. மன உளைச்சல்

4. சில மருந்துகள் (ஊக்க மருந்து கள், sedatives, hypnotics, antipsychotics)

தூக்கத்தில் நடப்பதால் வரும் பாதிப்பு களும், தவிர்க்கும் வழி முறைகளும்!

தூக்கத்தில நடப்பதால், விபத்துகள் ஏற் பட்டு நடப்பவருக்கும் பிறருக்கும் உடல் கா யங்கள் எற்படலாம். இது தவிர, விவரிக்க முடியாத வித்தியாசமான செயல்களுடன் கூடிய தூக்கத்தில் நட ப்பவர்களுக்கு, பெரிய பாதிப்புகள் ஏற் பட நிறைய வாய்ப்பு உண்டு என்பதால், அத்தகையவர்களை குணப்படுத்த வே ண்டும் என்கிறார் கபூர்!

தூக்கத்தில் நடக்கும் குறைபாட்டிற் க்கான சில சிகிச்சை முறைகள:

1. ஆரோக்கியமான தூங்கும் பழக்கம். அ தாவது, சரியான நேரத்தில் உறங்கு வது, அதிக நேரம் தொலைக்காட்சி பார்க் காமல் இருப் பது இப்படி பல

2. தினமும் குறிப்பிட்ட நேரத்தில் உறங் கு வது (தூக்கத்தினால் கிடைக்கும் ஓய் வை இழக்காமல் இருக்க)

3. இரவில் மது அருந்தும் பழக்கமுள்ள வர்கள், அதை அறவே அருந்தாமல் இரு ப்பது அல்லது குறைத்துக்கொள்வது

4. இது தவிர்த்த, மிகவும் மோசமான நிலையில் உள்ளவர்களுக்கு மருந்துக ளும் கொடுக்கப்படுகிறது!

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply