Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நெஞ்சு எரிச்சலிலிருந்து விடுபட …

நெஞ்சு எரிச்சல்… வயிற்றின் மேல் பகுதியில் இருந்து தொண் டை வரை எரிச்சல்… காரசார மான சாப்பாடு சாப்பிட்டாலும் எரிச்சல்… காலி வயிறாக இருக் கும் போது எரிச்சல்… சாப்பாடே சங்கடமா போச்சு அசிடிட்டி…. அமிலத்தால் உள்ளுக்குள்ள வெந்திருக்குமோ… இதிலிருந்து விடுபட வழி. இதனை உடனடியாக கவனிக்க வேண்டும் என் கிறார் டாக்டர் ராஜ்குமார்.

அவர் மேலும் கூறியாதவது:-

திருமண விருந்தில் சாப்பாட்டை ஒரு பிடி பிடிப்பவர்களுக்கும், விதவிதமா ன மசாலாப் பொடி, எண்ணெய், இதை யெல்லாம் எதிர் கொள்ளும் சக்தி எல் லாருடைய வால்வுகளுக்கும் இருப்ப தில்லை. வால்வு என்பது இரைப்பை க்கும் உணவுக்குழாய்க்கும் நடுவே இரு க்கிற வால்வு.

அமிலம் சுரப்பது இயற்கை. அமில த்தின் வீரியத்தை சமப்படுத்த ஜீரணி க்க சாப்பாட்டையும் தண்ணீரையும் சாப்பிடுவது அவசியம். ஆனால் எதுவு மே சாப்பிடாமல் காலி வயிற்றில் அமி லம் மட்டும் பொங்கி உணவுக்குழாயின் உள் உறையில் பட்டால் எரிச்சல்கள் உருவாகு ம். இது தொடரத் தொடர உணவுக்குழாயின் உள் உறை செல்களில் மாற்றம் ஏற் படுகிறது.

இதை உடனடியாக கவனித்து சிகிச்சை அளிக்க வேண்டியது மிக அவசியம். கவனிக்கா விட் டால் புற்று நோய்க்கு இடம் கொடுத்தாற்போல ஆகும். புற்று நோயின் ஆரம்பத்திற்கு நெஞ்செரிச்ச ல் அறிகுறியாக இருக்கும். இதய பாதிப் புள்ளவர்களுக்கும் நெஞ்சு எரிச்சல் வரும். இதை ஹார்ட்பர்ன் என்று சொல் வார்கள். எரிச்சல் எதனால் என்று எண் டோ ஸ்கோபி மூலம் கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பது மிக மிக அவ சியம்.

நெஞ்செரிச்சலுக்கு 6 மாதத்திலி ருந்து ஒரு வருடம் வரை மாத் திரை மருந்துகளை கொடுத்து அமிலம் சுரக்கும் அளவை குறை த்து மாத்திரைகளாலேயே வால் வை இறுகச் செய்ய முயற்சி செய் வதுதான் உலகளவில் மருத்துவ தீர்வு. ஆனால் சில பேருக்கு அதற்கு பின்பும் சரியாகாது. நெஞ்செரி ச்சலோடு வால்வு பலவீனமாக இருப்பதால் குனியும் போது சாப்பி ட்ட சாப்பாடும் தண்ணீரும் உமிழ் நீர் மாதிரி வெளியில் வரும். இந்த அறிகுறிகள் இருக்கும் நோயாளிகளு க்கு அமில அளவை, நெஞ்செரிச்சலை மாத்திரை மருந்துகளால் கட்டுப்ப டுத்த முடி யாது.

வால்வு பலஹீனமாக இருக்கும். இரு ந்தாலும் மாத்திரைகள் மூலம் குண ப்படுத்த முயல்வோம். அப்படி சரி யாகிவிட்டால் அதோடு சிகிச்சை முடி ந்து விடும். ஆனால் மாத்திரை சாப்பி ட்டும் எந்த பலனும் இல்லை என்று ஒரு மாதத்திலேயே வருவார்கள்.

அவர்களுக்கு எல்லாம் லாப்ராஸ் கோபிக், லேன்டோபளைகேஷன், டுபேபண்டோ ப்ளைகேஷன், எண்டோசின்ச் சிமெண்ட் இன்ஜெக் ஷன் என பல முறை களில் தீர்வு கண்டு விட லாம். நெஞ்செரிச் சலை சரிப்படுத்திக் கொள்ளா மல் அலட்சியபடுத்தி னால் பேரட் ஓசோபா கஸ் என உணவுக் குழாயின் உறையின் சிகப்பு பகுதி வழியாக உள்ளே அமிலம் சென்று கட்டிவர புற்று நோய் வர வாய்ப் பிருக்கிறது.

இன்று அடினோ காஸி னோமா என்ற புற்று நோய், நெஞ்செரிச்சலி னால் வரக்கூடிய புற்று நோய், இந்தியாவில் அதிகமாக வருகிறது. நிறையபேர் பேரட் ஓ சோ பாக்ஸ் என்னும் நிலை வரும் போது தள் ளிப் போடலா மென்று நினைக்கின்றனர். இது கூடவே கூடாது.

இந்த நிலை புற்று நோய் வர நிறைய வாய்ப்பை கொடுக்கி றது. உணவுக்குழாயின் உறை யில் அமிலம் பட்டு இரைப்பை போல உண வுக்குழாயின் உறை தடித்து விடும். அதில் கட்டிகளும் வரும். இந்த நிலை யிலும் லேஸர் மூலம் உணவு க் குழாயின் உறையை சுட்டு விட்டால் பொசுங்கிப் போய் புற்று நோய் வராமல் தடுக்க முடியும். இப்படி நெஞ்செரிச்சலி லிருந்து விடுபட மட்டுமில்லாமல் மேலும் பாதிப்பை உணர்ந்து புற்றுநோய்க்கு ஆளாகாமல் காப்பாற்றிக் கொள்ள மருத்துவ உல கில் உருவாகியுள்ள நவீன சிகிச் சை முறைகள் கை கொடுக் கின்ற ன.

எந்த பாதிப்பையும் ஆரம்ப நிலை யில் முளையிலேயே கிள்ளி எறி வது போல் நீக்குவதும், பாதிப்பி லிருந்து விடுபடுவதும் சுலபம். அதில்லாமல் பிரச்சினையை வள ரவிட்டால் தள்ளிப் போய் முற்ற விட்டால் போராடுவது நோயாளி மட்டுமல்ல. காப்பாற்றத் துடிக்கும் மருத்துவரும் அவர் குழு வினரும்தான் என்பதை ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வே ண்டும் என்கிறார் மருத்துவர் ராஜ்குமார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: