Monday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திசுவளர்ப்பில் இரண்டாவது பேரீச்சை

திருப்பூர் மாவட்டம், முருகம் பாளையத்தில் வசிக்கும் விவசாயி முருகவேல். தமிழகத்தில் பேரீச்சையை திசு வளர்ப்பு முறையில் வெற்றிகரமாக இரண் டாவது விவசாயியாக உரு வெடுத்துள்ளார். அவர் கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்டுள்ள கட்டுரையில் திண் டுக்கல் மாவட்ட விவசாயி அன்பழகன் தோட்டத்திற்கு சென்று அவரது அனுபவம் மூலம் பேரீச்சை சாகுபடி செய்துள்ளார்.

2.5 ஏக்கரில் 200 திசுவளர்ப்பு பேரீச்சை கன் றுகளை, 2009 பிப்ர வரியில் முருகவேல் நட வு செய்தார். இஸ்ரேல் தொழில்நுட்ப முறை யில் வளர்த்தார். ஒரு பேரீச்சை மரம் பழங் களை கொடுக்க குறைந்தது மூன்றாண்டா கும். ஆனால் இவரது பண்ணையில் 28 மாதங்களிலேயே பழங்களை கொடுத்துள்ளது.

ஒரு ஏக்கரில் சுமார் 60 கன்றுகளை நடலாம். குறைந்தது எட்டு மீட்டர் இடைவெளி இரு க்க வேண்டும். 30 டிகிரி செல்சியஸ் வெப் பமே போதுமானது. வடிகால் வசதி உள்ள இடங்களில் மட்டுமே பேரீச்சை வள ரும். பேரீச்சையில் டேனின் என்னும் வேதிப் பொருள் அதிகமாக இரு ப்பதால் அதை அப்படியே சாப்பிட முடிவ தில்லை. எனவே, பதப்படுத்தப்பட்ட பழங்களே சந்தைக்கு வருகி ன்றன. ஆனால் திசு வளர்ப்பு முறையில் உருவாக்கப்படும் பர்ரி ரக பேரீ ச்சைகளை அப்படியே சாப்பிட லாம். ஜூலை, ஆகஸ்ட், செப்ட ம்பரில் மட்டும்தான் இவை காய் க்கும்.

ஒரு கன்று நட ரூ.3,500 வரை செலவு செய்தேன். மரமாக வள ர்வ தற்கு 10 ஆயிரம் ரூபாய் வரை செலவழித்துள்ளேன். மு தலாண்டில் ஒரு மரத்தில் 40 முதல் 50 கிலோ வரை பழங்கள் காய்க்கும். மரம் 75 ஆண்டுகளுக்கு மேல் வாழும். மரம் வளர வளர காய்க்கும் பழங்க ளின் எடை அதி கரிக்கும். இந்த பழங்கள் கிலோ 350 ரூபாய்க்கு விற்கப்படுகி ன்றன.

பேரீச்சை உண்பதன் நன்மை கள்: பர்ரி பேரீச்சையில் எளி தில் செரிமாணம் ஆகக்கூடிய நார்ச்சத்து மற்றும் கார்போ ஹைட்ரேட் இயற்கையாக வே அதிகமாக உள்ளது. ஆழ் ந்த உறக்கத்திற்கு துணை புரிகிறது. சோர்வை களைகிறது.

ஒரு வேளைக்கு 2 பழம் வீதம் 30 நாட்கள் வரை தொடர்ந்து உண் பதால் மாதவிடாய் குறைபாடுகள் நீங்கும். நல்ல கண்பார்வை கிடைக்கும்.

தொடர்புக்கு: முருகவேல், முருகம்பாளையம், மங்கலம்-641 663. போன்: 0421-234 6055,
மொபைல்: 98651 50040, 98651 50060.
கே.சத்யபிரபா, உடுமலை.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply