Friday, August 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நவீன தொழில்நுட்பம்: சின்ன வெங்காயம் -கோ.ஓ.என்.5

தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் காய்கறித் துறையின ரால் சமீபத்தில் வெளியிடப்பட்ட கோ.ஓ. என்.5 என்ற ரகம் விதை மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது.

நாற்றங்கால் தயாரிப்பு: ஒரு எக்டர் நடவு செய்ய 7 கிலோ விதை தேவைப்படும். மேட் டுப்பாத்தியில் நாற்றங்கால்விட நிலத்தை நன்கு உழவு செய்து 3 அடி அகலம், அரை அடி உயரம், 10 அடி நீளம் கொண்ட மேட்டுப் பாத்திகள் அமைத்து 2 கிலோ டி.ஏ.பி., மக்கிய தொழு உரம் இட்டு எறும்பு முதலான பூச்சிகளிடமிருந்து விதை களைக் காப்பாற்ற லின்டேன் பவுடரை பாத்திகளின் மேல் தூவ வேண்டும். விதைக ளை அசோஸ்பைரில்லம் நுண்ணு யிர் உரத்துடன் ஒரு கிலோ விதைக்கு 100 கிராம் அளவில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். பின் மேட்டுப் பாத்தி களில் 3 செ.மீ. இடைவெளியில் 2 செ.மீ. ஆழத்தில் கோடுகள் இழு த்து, அதில் விதைகளை வரிசையாக விதைத்து வைக் கோல் கொண்டு மூடி, பின் பூ வாளி கொண்டு காலை, மாலை இருவே ளையும் நீரை ப்பாய்ச்சி பராமரிக்க வேண்டும். விதைத்த 8-10 நாட்களில் விதை முளைத்தவுடன் புல் போர் வையை நீக்கி 40-45 நாட்கள் வரை பராமரித்து, பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த டை மெ த்தோயேட் (ரோகார்) மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு மிலி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண் டும்.

நடவு வயல் தயாரிப்பு: புழுதிபட உழு து, ஒரு ஏக்கருக்கு 2 மூடை டி.ஏ.பி., 10 டன் மக்கிய தொழு உரம், கடைசி உழவில் களை பறித்து, 10 செ.மீ. இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். நட்டவுடனும் பின் 5 நாட் களுக்கு ஒருமுறையும் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.
பெண்டிமெத்திலின் களைக்கொல்லியை ஒரு லிட்டர் தண்ணீரில் 5 மிலி என்ற அளவில் நாற்று நடுவதற்கு 2 நாட்களுக்கு முன்பே தெளிக்க வேண்டும். ஒரு மாத இடைவெளியில் பின்னர் 2 முறை கைக்களை எடுக்க வேண்டும்.

மேலுரமாக ஒரு மூடை யூரியா, 2 மூடை 10:26:26 காம்ப்ளக்ஸ் உரத் தை நடவுசெய்த 30வது நாளில் களை எடுத்தபின் இட வே ண்டும். 60வது நாள் மீண்டும் ஒரு முறை களை எடுத்து, ஒரு மூடை யூரியா, 2 மூடை பொட்டாஷ் இடவேண் டும். வெங்காயம் பருமனடையும் பருவத்தில் மண்ணின் ஈரம் குறை ந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நடவிலிருந்து அறு வடை வரை 18-20 முறை நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.

அறுவடை: அறுவடைக்கு ஒரு மாத த்திற்கு முன் நீர்ப்பாசனத்தை நிறு த்திவிட வேண்டும். பயிரின் 75 சதவீ தம் இலைகள் வாடியவு டன் வெங் காயத்தை தோண்டி எடுக்கலாம். பயிர் நடவு செய்த 90 நாட்களில் அறு வடைக்கு தயாராகிவிடும். ஏக்கருக்கு 7 டன் வெங்காயம் விளைச்சல் எடு த்துள்ளார் அனுபவ விவசாயி, சேல ம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஆர்.ராஜா. (தகவல்: பெ.ச.கவிதா, ம.அ.வெண்ணிலா, செ.மாணி க்கம், வேளாண்மை அறிவியல் நிலையம், அந்தியூர், சேலம். 90470 65335)
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: