Friday, August 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (24/07)

அன்புச் சகோதரிக்கு —
அடிப்படையில் நான் பெண்ணுரிமைப் போராளி. “கற்பு நிலை என் று வந்தால் இருவருக்கும் பொதுவில் வைப்போம்…’ என்ற கவி பாரதி, எனக்குப் பிடித்த மகா கவிஞன்.

பிறருக்கு உதவுவது, முடிந்த அளவு தியாகம் செய்வது, நம்மால் மு டிந்த நன்மை செய்து மகிழ்ச்சி அடைவோம் என நம்புபவன் நான். வாழப்போகிற குறை வான வாழ்க்கையில், வாழ்விழந்த பெண்ணு க்கு, வாழ்வு கொடுத்து, மனம் மகிழ்வோம் என தீர்மா னித்து, குடும்பத்தாரை, சொந்த பந்தங்களை, நண்பர்களை எதிர்த்து – இழ ந்து, ஒரு விதவைப் பெண்ணை சட்டப்படி, சம்பிரதாயப்படி, விருப் பப்பட்டு வந்த உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திரும ணம் செய்து கொண்டேன். திருமணச் செலவு முழுவதையும் ஏற் றுக் கொண்டேன். ஒரு பைசா கூட மணப்பெண் வீட்டாரை செய்ய விடவில்லை.

பத்து ஆண்டுகள் வாழ்ந்து, விதவையாகி, ஐந்து ஆண்டுகள் கண வன் இல்லாமல், தனிமை வாழ்வு வாழ்ந்தவள் என் மனைவி. என க்கும், அவளுக்கும் இடையேயான தாம்பத்யத்தில் குழந்தை பிற ந்தது. அது, பத்து மாத குழந்தையாக இருக்கும் போது, “என் காதலி யைத்தான் நீ திருமணம் செய்திருக்கிறாய்…’ எனக் கூறி, என் மனை வி எழுதிய, இரண்டு காதல் கடிதங்களையும் அனுப்பி இருந் தான் ஒருவன். இந்தக் கடிதங்க ளை என் மனைவியிடமே கொ டுத்து விட்டேன். விதவைப் பெண்கள், திருமணம் செய்து கொள்வதற்கு வரன்களை தேட மாட்டார்களா? அப்படித் தேடும் போது, அறிமுகம் ஆகிய அவ னை, மணம் முடிக்க என் மனை வி சம்மதிக்கவில்லை போலும். அதனால், கோபமுற்று இப்படி காதல் கடிதங்களை அனுப்பி, பழி வாங்க பார்க்கிறான் என சமாதானப்பட்டுக் கொண்டேன். இதில் வேடிக்கை என்னவென்றால், என் மனைவியை விட, ஐந்து வயது குறைந்தவன் அவன்.

இரண்டாவது மகன் பிறந்து, நான்கு ஆண்டுகளுக்குப் பின், ஓர் இரவு, மூன்று மணிக்கு, அவசரமாக என் இரண்டாவது மகன் என்று நினைத்து, மூத்த மகனை தூக்கிக் கொண்டு போய் விட்டாள் என் மனைவி. ஏன் இப்படி சொல்லாமல், மூத்த மகனை தூக்கிக் கொண்டு போய் விட்டாள் என பலமாக யோசித்துப் பார்த்தேன். என் மனைவி கூடப் பிறந்த அக்காவிடம் விசாரித்த போது, அக்கா கணவர் தன் அம்மாவைப் பார்க்க வரும் நாளைத் தெரிந்து, உங் களிடம் சொல்லாமல் போயிருக்கிறாள் எனச் சொன்ன பிறகும், தாய்ப்பாசம் என்று தான் நினைத்தேன். இப்படி, அடிக்கடி அம்மா வை பார்க்கப் போகிறேன் என்று சொல்லி, அக்கா கணவரைப் போய் பார்த்து, பாசத்தை பகிர்ந்து கொள்கின்றனர் எனப் பின்னர்தான் புரிந்து கொண்டேன். ஆனால், தாய் மீது, அக்கா தங்கைகள் மீது பாசம் என இருக்குமோ என நானாக நினைத்துக் கொள்கிறேன்.

தற்போது, என் மூத்த மகனுக்கு வயது 26; இளைய மகனுக்கு 25. என்னை வீட்டை விட்டு துரத்த எல்லாவித முயற்சியும் செய்கி றாள் என் மனைவி. “தினசரி, 200 ரூபாய் கொண்டு வந்து கொடு அல்லது மாதம், 6,000 ரூபாய் கொடு. இல்லாவிட்டால் வீட்டை விட்டு எங்காவது போய் பிழைத்துக் கொள். நல்ல படிப்பு படித்திரு ப்பதால் எங்கும் வேலை கிடைக்கும்…’ என விரட்டுகிறாள்.

வீடு, வாசல், சொத்து எல்லாவற்றையும் விற்று, கடுமையாக கஷ்ட ப்பட்டு, மூவரையும் காப்பாற்றி, நன்கு படிக்க வைத்து விட்டேன். இரண்டு பையன்களும் நம்மைக் காப்பாற்றி விடுவர். இனி, 62 வயது கணவர் எதற்கு என நினைக்கிறாளா என் மனைவி என, ஒரு சில நேரம் சிந்தித்துப் பார்க்கிறேன். பிள்ளைப் பாசத்தில் எல்லாவ ற்றையும் மறந்து, எப்படியும் பிள்ளைகள் நல்லா இருந்தால் போதும் என நினைத்து, வாழ்ந்து வருகிறேன்.

விதவைக்கு வாழ்வு கொடுத்து, விதவையாகி விட்டேன்!

என் இளைய மகன், முதுகலைப் படிப்பு முடிக்க, ஒரு ஆண்டு உள் ளது. அவன் படித்து முடிக்கும் வரைக்கும் நான் உயிருடன் இருக்க விரும்புகிறேன். படிப்புக்கும், வயதுக்கும் ஏற்ற ஒரு வேலை வாங்கி தந்து, இந்த ஏமாளிச் சகோதரனைக் காப்பாற்றி, இனி, வாழ்க் கையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று வழிகாட்டினால், என்னைப் போன்ற லட்சக்கணக்கானவர்களுக்கு மிகவும் உதவி யாக இருக்கும் என நம்புகிறேன்.
— இப்படிக்கு அன்பு சகோதரன்.

அன்புள்ள சகோதரருக்கு —
உங்களுக்கு வயது 62. முதுகலைப் பொருளாதாரமும், முதுகலைத் தத்துவமும் படித்த இரட்டை பட்டதாரி நீங்கள். அடிப்படையில் ஒரு பெண்ணுரிமைப் போராளி. கற்பு நிலையை, இரு பாலாருக்கும் பொதுவில் வைக்க விரும்புபவர்.

பத்து ஆண்டுகள் கணவனுடன் வாழ்ந்து, அவன் இறந்தபின், ஐந்து ஆண்டுகள் விதவை வாழ்க்கை வாழ்ந்த பெண்ணை வேண்டி விரு ம்பி, சொந்த பந்தங்களை எதிர்த்து, உங்களது, 35வது வயதில் திருமணம் செய்து கொண்டீர்கள். உங்களுக்கு இரு மகன்கள். மூத் தவனுக்கு வயது 26. படிக்கிறானா, பணி செய்கிறானா என்ற விவரம் உங்கள் கடிதத்தில் இல்லை. உங்களது இளைய மகனுக்கு வயது 25. முதுகலை இரண்டாம் ஆண்டு படிக்கிறான்.

விதவைப் பெண்ணுடனான திருமணம் தான் உங்களின் முதல் திரு மணமா? அப்படியென்றால், 35 வயது வரை நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை? விதவைப் பெண்ணை தான் மணந்து கொள்ள வேண்டும் என்ற குறிக்கோளுக்கு என்ன காரணம்? என்ன பணி செய்து வந்தீர்கள்? உங்களது வயது, 62 என்பதால் பார்த்து வந்த பணியிலிருந்து ஓய்வு பெற்று வீட்டீர்களா, ஓய்வூதியம் பெறுகிறீர்களா? நாற்பது வயது வரை பணிக்கு செல்லாது, ஒரு சுயமரியாதை கட்சியில் உறுப்பினராக இருந்தீர்களா? தற்சமயம், தற்காலிக ஆசிரியர் பணி ஏதாவதில் இருக்கிறீர்களா போன்ற விவரங்கள் உங்கள் கடிதத்தில் இல்லை.

திருமணத்தின் போது உங்களது மனைவிக்கும், உங்கள் வயதிரு க்கும். உங்களது மனைவியின் குடும்பப் பின்னணி பற்றியும் விரி வான தகவல்கள் கடிதத்தில் இல்லை. ஐந்து வருட விதவை வாழ்க் கையில், உங்களது மனைவியின் நடத்தை எப்படி அமைந்திரு ந்தது என்பதை தெளிவாக விசாரிக்க மறந்து விட்டீர்கள். வித வைப் பெண்களுக்கும் ஆசாபாசம் உண்டு. ஐந்து வருட விதவன் வாழ்க்கையில், ஓர் ஆண், நூறு தவறான தொடர்புகளை வைத்துக் கொள்கிறான்; விதவைப் பெண்களும் வழி தவற வாய்ப்புகள் உண்டு. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பர். உங்கள் மனைவியின் கல்மனம், இருமுறை, மும்முறை கரைக்கப் பட்டிருக்கலாம்.

உங்களின் முதல் மகனை, மனைவி கருவுற்றிருந்த போது, “என் காதலியைத்தான் மணந்திருக்கிறாய்…’ என்ற குறிப்புடன் ஒருவன், உங்கள் மனைவி அவனுக்கு எழுதிய, இரு காதல் கடிதங்களை உங் களுக்கு அனுப்பி இருக்கிறான்; அதை, நீங்கள் தீர விசாரிக்கவில் லை. அடிக்கடி தன் தாயை பார்க்க போவது போல போய், தன் அக்கா கணவருடன் தகாத உறவு வைத்திருந்திருக்கிறாள் உங்கள் மனை வி. அதையும் தாய்பாசம், சகோதரிகள் பாசம் என எடுத்துக் கொண் டீர்கள்.

உங்களது மனைவியின் தகாத உறவுகள், திருமணமான புதி திலேயே தெரிய வந்தும், ஏன், இருபதாண்டு காலம் மவுனம் காத் தீர்கள்? உங்கள் பக்கமிருந்த பலவீனம் என்ன? உங்களிடம் குடிப் பழக்கம் உண்டா?

திருமணமான முதல், 15 வருடங்கள் பணிக்கு செல்லாது இல்ல த்தரசியாக இருந்த உங்கள் மனைவி, பத்து வருடங்களாக ஏதோ ஒரு பணிக்கு சென்று வருகிறார் என யூகிக்கிறேன். மாதம், 6,000 ரூபாய் கூட சம்பாதிக்காத ஆணை, எந்தப் பெண் மதிப்பாள்? பல வேலைகளுக்கு போய், போய் சொற்ப நாட்கள் வேலை பார்த் துவிட்டு, நீங்கள் ஓடிவந்து விடுவதாக உணர்கிறேன். உங்களது மகன்களுக்கு உங்களின் மேல் அன்போ, மரியாதையோ இல்லை என தெரிகிறது. இது எதனால்? வீடு, வாசல், சொத்தை விற்று படி க்க வைத்தேன் என்றிருக்கிறீர்கள். அப்படியென்றால், சம்பாதித்து அவர்களை படிக்க வைக்கவில்லையா?

மூத்த மகனுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. உங்களின் மீது எவ்வித தவறும் இல்லையென்றால், கீழ்க்கண்ட தீர்வே உங் களது பிரச்னைக்கு பொருத்தமாய் இருக்கும்.

1.நீங்கள் சென்னையின் துணை நகரத்தில் இருக்கிறீர்கள். முய ற்சித்தால், டுடோரியல் காலேஜ்களில் ஆசிரியர் பணி கிடைக்கும். மாதச் சம்பளம், 15 ஆயிரம் ரூபாய்க்கும் குறையாது.

2.மனைவியிடமிருந்து, இரண்டு வருடங்கள் பிரிந்து வாழுங்கள். உங்களது மனைவியின் நடத்தை சரியில்லை என்பது உண்மையெ ன்றால், உங்களது, இரு மகன்கள் உங்களிடமே வந்து விடுவர். மக ன்களுக்கு திருமணம் செய்து வைத்து, மகன் குடும்பங்களுடன் வாழுங்கள்.

3.டியூஷன் சென்டர் நடத்தலாம்; நல்ல வருமானம் கிடைக்கும்.

4.உங்களது கடிதம் முழுமையானதாக இல்லை. வேட்பாளரின் சொத்து விவரம் போல, காட்ட வேண்டியதை காட்டி, மறைக்க வே ண்டியதை மறைத்துள்ளீர்கள். தனிமையில், தெளிவான மனநிலை யில் அமர்ந்து, உங்கள் மனைவி பக்க நியாயங்களையும், உங்கள் பக்க நியாயங்களையும் நியாயத் தராசில் நிறுத்தி எடை போடுங் கள். மனைவி ஒழுக்கமானவர் என்றால், உங்களது தவறுகளை அவ ரிடம் ஒப்புக் கொண்டு, மன்னிப்பு பெறுங்கள். குடும்பத்தோடு சேர் ந்து வாழுங்கள்.

5.சின்ன மகன் படிப்பு முடிக்கும் வரை உயி ரோடு இருக்க வேண்டும் என எழுதியுள்ளீர்கள். இன்னும், 15 ஆண்டுகள் உயிரோடு இருப்பீர் கள். மீதி வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

6.உங்கள் கடிதத்தின் உள்ளடக்கத்தை ஆராய்ந்துதான் இங்கு மன நல ஆலோசனை தரப்படுகிறது. எனக்கும் விருப்பு, வெறுப்பு உண் டு. என் யூகங்களும், கணிப்புகளும் சறுக்கலாம். இது, உங்கள் மீதான தீர்ப்பல்ல; ஒரு பார்வை. பயன் என்றால் எடுத்துக் கொள்ளுங்கள்; வீண் என்றால் விட்டுத் தள்ளுங்கள் சகோதரரே!

—என்றென்றும்
 தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
 (தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)

 தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Comment

  • venkatajalapathi

    என்னை விட பத்து வயது குறைவான பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாமா?

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: