Tuesday, August 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பரபரப்புடன் கூடிய தி.மு.க., செயற்குழுவில் . . .

பரபரப்புடன் கூடிய தி.மு.க., செயற்குழுவில், தேர்தல் தோல்விக் கான காரணங்கள் காரசாரமாக விவாதிக்கப்பட்டன. தேர்தல் தோல்விக்கு, கூட்டணிக் கட் சிகளே காரணம் என, பெரு வாரியான உறுப்பினர்கள் குற் றம் சாட்டினர். கூட்டணிக் கட் சிகளை குற்றம் சாட்டிய அதே அளவுக்கு, குடும்ப ஆட்சியை யும் சுட்டிக் காட்டினர். “2ஜி’ விவகாரத்தாலும், செயற்குழு சூடுபிடித்தது.கோவையில், தி.மு.க., செயற்குழு நேற்று மாலை துவங்கியது. தி.மு.க., தலைவர் கருணாநிதி, செயற்குழுவை துவ க்கி வைத்து பேசினார். அவரைத் தொடர்ந்து, பொதுச் செயலர் அன்பழகன் பேசினார். இவர்களு க்குப் பின், செயற்குழு உறுப்பினர் கள் பேசினர். ஸ்டாலின், அழகிரி கோஷ்டிகளுக்கு இடையேயான மோதல் உச்சகட்டத்தில் இருக் கும் நிலையில், பதட்டத்துடனே செயற்குழு காணப்பட்டது. பொது வான விஷயங்களை விட, கட்சித் தலைமையில் மாற்றம் வேண் டும் என, ஸ்டாலின் தரப்பினர் உறுதியாக உள்ளனர். தலைமை மாற்றம் ஸ்டாலினுக்கு சாதகமாக இருந்துவிடும் என்பதால், “கரு ணாநிதியே தலைவராகத் தொடர வேண்டும்; தொடருவார்’ என, அழகிரி பகிரங்கமாக அறிவி த்து விட்டார்.இதனால், தலை மை மாற்றத்துக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டதாக அழ கிரி கோஷ்டி யினர் நினைக்கி ன்றனர். ஆனால், செயற் குழு விலும், பொதுக் குழு விலும் ஸ்டாலினுக்கு உள்ள ஆதர வைக் கொண்டு, மாற்றங்க ளைக் கொண்டு வந்துவிடலா ம் என்ற அச்சமும் அழகிரி கோஷ்டியினருக்கு இருக்கிறது. இத னால், செயற்குழுவுக்கு முன்னதாக, கருணாநிதியை அழகிரி சந்தித்தார். அப்போது, செயற்குழு மற்றும் பொதுக்குழு தீர்மான ங்கள் பற்றி அவர்கள் விவாதித்ததாகக் கூறப்படுகிறது. கட ந்த இரண்டு நாட்களாக, கோவையில் முகாமிட்டுள்ள ஸ்டாலின், இறுக்கமாகவே காண ப்பட்டார். கருணாநிதியுடன் கோ பித்துக் கொண்டு வெளிநாடு சென் றதாகக் கூறப்பட்ட முன்னாள் அமைச்சர் துரை முருகன், செயற் குழுவுக்கு வந்திருந்தார். செயற் குழுவில், அழகிரி ஆதரவாளர் களுக்கு எதிராக சிலர் பேசியதால் பரபரப் பானது. அழகிரியின் ஆதரவாளர்கள் 117 பேரின் பட்டியலை வாசித்து, அவர்களை கட்சியிலிருந்து நீக்குமாறு தலைமையை வலியுறுத்தியதாகத் தெரிகிறது. இதற்கு, அழகிரி கோஷ்டி யினர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக் கின்றன. கூட்டணிக்கட்சியாக இருந்துகொண்டு, ஸ்பெக்ட்ரம் விவ காரத்தில் நடப்பதை எல்லாம் காங்கி ரஸ் வேடிக் கை பார்த்துக் கொண்டு இருக்கிறது என் றும் செயற்குழு உறுப்பினர்கள் குற்றம் சாட்டிப் பேசினர். கட்சிக்கு எந்த பயனும் இல்லாமல், கட்சி மூலம் கிடைத்த அமைச்சர் பதவியை, தங்கள து நிறுவ னத்துக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்டார் என தயாநிதி மீது கடும் தாக் குதலை, செயற்குழுவில் பேசி யவர்கள் முன்வைத்ததாகவும் கூறப்படுகிறது. உடன்பிறப்புகளின் ஆவேச பேச்சுக்கள், செயற்குழுவை பரபரப்பாக் கியதாக தி.மு.க.,வினர் தெரிவிக்கின் றனர்.

தி.மு.க., செயற்குழு கூட்ட துளிகள்…..

செயற்குழு கூட்ட அரங்கிற்கு மொத்தம் நான்கு நுழைவாயில்கள் அமைக்கப்பட்டிருந்தன. தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு ஒரு பாதையும், வி.ஐ.பி.,களுக்கு ஒரு பாதையும், பிரதிநிதிகளுக்கு ஒரு பாதையும், பத்திரிகையாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சென்று வரவும் ஒரு பாதை என, தனி த்தனியாக அமைக்கப்பட்டிருந் தன. கூட்ட அரங்கில் உள்ளே நுழைந்த முன்னாள் அமைச்சர் கள், எம்.பி., க்கள் ஆகியோ ரிடம் கையெழுத்து பெறப்பட்டு, கடிதம் காட்டப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், வி.ஐ.பி., நுழைவாயிலில் கையெழுத்து போடாமல் உள்ளே சென் றார். தென் மண்டல அமைப்பு செயலர் அழகிரி, ஆற்காடு வீராசாமி, அன்பழன், டி.ஆர்.பாலுவும், பரிதி இள ம் வழுதி ஆகியோர் கையெ ழுத்து போடாமல், தி.மு.க., தலைவர் வரும் பாதையில் உள்ளே நுழை ந்தனர். தி.மு.க., தலைவர் கரு ணாநிதியை, பொருளாளர் ஸ் டாலின் வாசல் வரை வந்து அழைத்துச் சென்றார்.தென் மண் டல அமைப்பு செயலர் அழகிரி க்கு முதல் வரிசையும், பல முன் னாள் அமைச்சர்களுக்கு கடைசி இருக்கைகளும் வழங்கப்பட்டிரு ந்தன. அழகிரி வந்த காரின் சிவ ப்பு விளக்கு, துணியால் மறைக் கப்பட்டிருந்தது. செயற்குழு அர ங்கில் பத்திரிகை புகைப்படக் காரர்கள் அனுமதிக்கப்பட்டவு டன், முதலில் அழகிரியை படம் எடுத்த பின்பு தான், மேடை நோக்கி திரும்பினர். செயற்குழு கூட்டத்திற்கு தி.மு. க., தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி வந்திருந் தார். தனியார் தொலைக்காட்சி வீடியோகிராபர் ஒருவர், தி.மு.க., தொண்டர்களால் வாசலில் தாக்க ப்பட்டார். கரு ப்பு, சிவப்பு சீருடை அணிந்த தொண்டர், அவரை காப்பாற்றினார். அவினாடு ரோடு, திருச்சி ரோட்டில் வைக்கப்பட்டிருந்த பேனர்க ளில் அழகிரியின் படம் எங்கும் இடம் பெறவில்லை. அவரது அனுதாபிகள் அடித்த போஸ்டர் மட்டும் ஒரு சில இடங்களில் காணப்பட்டன.

NEWS IN DINAMALAR

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: