Saturday, June 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்னை என்றால் என்ன?

டாக்டர் ஷிராஜ் கரீம் அவர்கள் ஓர் இணைய்த்தில் எழுதிய கட்டுரை

கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்னை ஆண்களுக்குத்தான் அதிக ம் வரும் என்பார்கள். இது பெண்க ளுக்கும் ஏற்பட வாய்ப்புண்டா?

நீங்க வேற… ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிகம் வரு வதற்கு வாய்ப்புள்ளது. பெண்க ளுக்கு சுரக்கும் ஹார்மோன் கள்தான் இந்தப் பிரச்னை ஏற்படு வதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது. 30 வயதுக்கு மேல் 70 வயது வரையான பெண்களு க்குத்தான் அதிகம் வருகிறது.

கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்னை என்றால் என்ன?

கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்னை என்பது, கால்களில் உள்ள நரம்புகள் புடைத்துக் கொள்வது தான். ஆரோக்கியமான கால் களில் உள்ள நரம்புகள் இருதய த்திலிருந்து செலுத்தப்படும் ரத்தத்தை ஒரே சீராகச் செல்ல அனுமதிக்கும். அதே போல கால்களிலிருந்து இதயத்திற்கு ரத்த ஓட்டம் சீராக நடைபெற வழி வகுக்கும். இதற்கு கால் நர ம்புகளில் உள்ள வால் வுகள் முக்கியப் பங்கு வகிக் கின்றன. இவை பழுதடைந்தால், நரம்புகளில் அடைப்பு ஏற்பட்டு, அவை கால்களிலேயே தங்கிவிடும். இதனால் கால்கள் பாதிக்கப்படும். அல்லது கடுமையான வலி ஏற்படுத்தும். கால் நரம்புகளில் இருந்து ரத்தம் மீண்டும் இருதயத்திற்கு செல்லாத நிலையில் கால்கள் வீக்கமடையும்.

இவ்விதம் கால் நரம்புகளில் ரத்தம் தேங்குவதால் நரம்பு கள் சுருண்டு கொள்ளும். இதைத்தான் “வெரிகோஸ் வெயின் (Varicose Veins)” என்று ஆங்கிலத்தில் அழைப் பார்கள். இவர்களது கால்கள் வீக்கமடைவதுடன், நரம்புகள் சுருண்டு

கொண்டிருப்பதையும் காண முடியும். ரத்தம் தேங்கி விடுவதால் நரம்புகள் கருநீல நிறத்தில் காட்சி அளிக்கும். ஆரம்ப நிலை என் றால், சிறிய அளவில் மாறுபட்ட நிறத்திலான கோடுகள் சிலந்தி வலை போன்று காட்சியளிக்கும்.

பெரும்பாலோர் இது வெறும் தோல் சம்பந்தப்பட்ட பிரச்னை என்று நினைக் கிறார்கள். ஆனால் இது மருத்துவ ரீதி யில் தீர்க்கப்பட வேண்டிய ஒரு நோய். நரம்புகள் சுற்றிக் கொள்ளும் பிரச்னை ஏற்பட்டால் கடுமையான வலி தோன் றும். சில சமயங்களில் உடலில் மிகுந்த களைப்பு ஏற்படும். இந்நோய் மிகவும் முற்றிய நிலையில் தோலின் நிறமே மாறும். தோலின் மீது கொப்புளங்கள் தோன்றும். கால்களிலும், கணுக்கால் களிலும் கொப்புளங்கள் தோன்றும். கொப்புளங்களிலிருந்து சில சமயம் ரத்தம் வெளி யேறும். சில சமயங்களில் ரத்தக் கட்டிகள் நரம்புகளில் ஏற்படக்கூட வாய் ப்புண்டு.

எத்தகைய பெண்களுக்கு கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்னை ஏற்படும்?

உடல் பருமனான பெண்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள், அதிலும் குறிப்பாக அதிக குழந்தைகள் பெறும் தாய்மார்களுக்கு இப்பிரச் னை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

சில பெண்களுக்கு கருவுற்ற கா லத்திலேயே கால்களில் நரம்புகள் சுற்றிக் கொள்ளும் பிரச்னை ஏற்ப டும். குழந்தை பிறந்தவுடன் இந்த நரம்புகள் மறைந்துவிடும். ஆனால் குழந்தை பெற்ற பின்னரும் தொடரும். பெற்றோர்களில் யாரேனும் ஒருவருக்கு இப்பிரச்னை இருந்தால் குழந்தைகளுக்கு இந்நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம்.

கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்னை ஏற்படாமல் தடுப்பது எப்படி?

தைத் தடுப்பது மிகவும் கடின மானது. காரணம், மனிதர்கள் கால் களில் தானே நடக்கிறோம்? இருப்பினும் இந்நோய் ஏற்ப டுவதற்கான வாய்ப்புள்ள சிலர் முன் கூட்டியே நடவடிக்கை எடுப் பதன் மூலம் அதைத் தடுக்க முடியும்.

உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வை த்திருத்தல்.

நீண்ட நேரம் நின்றபடியே பணிபுரி வதைத் தவிர்ப்பது.

நார்ச் சத்து நிறைந்த உணவு வகைகளை அதிகம் உண்பது.

கால்களில் எப்போதும் காலு றை அணிவது என இப்பிரச் னை வராமல் தடுக்க முடி யும்!

கால் நரம்பு சுற்றிக் கொள் ளும் பிரச்னை ஏற்பட்டால் அதற்கு அறுவை சிகிச்சை ஒன்றுதான் தீர்வா? வேறு மாற்று வழிகள் ஏதேனும் உண்டா?

இந்தப் பிரச்னைக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு இல்லை. நோயின் தீவிரத் தன்மையைப் பொறுத்து பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன.

காலுறை அணிதல்: நோய் ஆரம்ப நிலையில் இருப்பின், பிரத் யேகமாக தயாரிக்கப்பட்ட காலுறைகளை அணிந்து இந்நோயைக் குணப்ப டுத்தலாம்.

மருந்து மூலம் குணப்படுத்துதல்: மருந்து அளித்து குணப்படுத்தும் நிலையில் சில ருக்கு இருக்கும். அத்தகையோருக்கு மருந்து களுடன் பிரத்யேக காலுறை அணிந்து கொள் ளுமாறு அறிவுறுத்த ப்படும். இது உரிய பல னை அளிக்கும். இருப்பினும் கால்களில் முதலில் சுருண்ட நரம்புகளை முற்றிலுமாக பழைய நிலைக்குக் கொண்டு செல்லவோ, குண ப்படுத்தவோ இயலாது.

ஊசி மூலம் குணப்படுத்துதல்: இந்த சிகிச் சைக்கு ஸ்கெலரோதெரபி என்று பெயர். ஆனால் இந்த சிகிச்சை நீண்ட காலம் மேற்கொள்ள வேண்டியவை. இத்தகைய சிகிச்சை முறைகளை முழு அளவில் மேற்கொள்ளாவிடில் முழு அளவில் பயன் கிடைக் காது. மேலும் இத்தகைய சிகிச்சை முறைகளில் நரம்புகளில் ரத்தக்கட்டிகள் தோன்றும். சில சமயங்களில் இந்த ரத்தக் கட்டிகள் இருதயத்தை நோக்கி நகர்வதற்கான வாய் ப்புகளும் உண்டு. அல்லது நுரையீரல் போன்ற பகுதி சிக்கலை ஏற்படுத்தலாம்.

அறுவை சிகிச்சை: நோயுற்ற காலில் உள்ள பழுதடைந்த நரம்புப் பகுதிகளை வெ ட் டியெடுத்து நீக்கும் அறுவை சிகிச்சை முறை மிகவும் சிக்கலானது. மேலும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருந்துகள் சாப்பிட வேண்டியிருக்கும். மருத்துவ மனையில் இரண்டு வாரம் முதல் நான்கு வாரம் வரை தங்க வேண்டியிருக்கும்.

லேசர் சிகிச்சை: பழுதடைந்த நரம்புகளில் லேசர் ஃபிளமென்ட் மூலம் அடைப்பது நவீன முறையாகும். இந்த சிகிச்சை முறையிலும் சில பாதக அம்சங்கள் உள்ளன. லேசர் சிகிச்சையின் போது வெளியாகும் அதிகபட்ச வெப்பம், கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். அத்துடன் அருகிலுள்ள திசுக்களையும் இது சேதப்படுத்துவதற்கான வாய்ப்பு உண்டு.

ரேடியோ அலை சிகிச்சை (Radio Frequency Ablation (RFA – ஆர்.எஃப்ஏ.): இப்புதிய முறை பரவ லான வரவேற்பைப் பெற்றுள்ளது. கார ணம், இந்த சிகிச்சை முறையில் வலி மிகக் குறைந்த அளவில் இருக்கும். தவிர, மருத்துவமனையில் உள் நோயாளியாக தங்கி சிகிச்சை பெறா மல், புற நோயாளிகளைப் போல சிகி ச்சை பெற்றாலே போதும். பாதிக்கப்பட்ட பகுதியில் மட்டும் மறத்துப் போவதற்கான ஊசி செலுத்தப்படும். இந்த சிகிச்சை முறையால் ரத்த அடைப்பு ஏற்படுவதில்லை. மேலும் அருகிலுள்ள திசுக்களும் பாதிக்கப் படாது. அதிக வெப்பமும் வெளியேறுவ தில்லை. பாதிக்கப்பட்ட நரம்புகள் மூடப்பட்டவுடன், அருகிலுள்ள ஆரோக்கியமான நரம்புகளில் ரத் தம் பாயத் தொடங்கும். இதனால் கால் கள் பழைய நிலைக்குத் திரும்பும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Comment

  • Nandhini gunasekaran

    My dad feels pain from right hip to below the leg . What would be the reason and what would be the remedy? No problem in bone as doctor said.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: