Tuesday, August 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பத்து நிமிட செக்ஸ் உறவில் . . .

சிலர் நீண்ட நேரம் செக்ஸ் உறவு கொண்டாலே திருப்தி கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால், ஒரு திருப்திகரமான செக்ஸ் உறவு என்பது பத்து நிமிடங்களுக்குள் முடிந்துவி டும் என்று ஒரு ஆய்வு கூறி யுள்ளது.

இது நிறைய பேருக்கு ஆச்சரி யமாக இருக்கலாம், சிலருக் கு அப்படி யெல்லாம் இல்லை என்ற எதிர்ப்பு எழலாம். ஆனால் உண்மையில் பத்து நிமிட செக்ஸ் உறவில் போதுமான திருப்தியும், மகிழ்ச்சியையும் எட்ட முடியும் என்கிறது இந்த ஆய்வு.

இதுதொடர்பாக செக்ஸ் தெரப்பி மற்றும் ஆய்வுக் கழகத்தைச் சேர் ந்த 50 பேர் சேர்ந்து ஒரு ஆய்வை மேற்கொண்டனர். செக்ஸ் பிரச்சினைகள் தொடர்பான அறி வுரை, சிகிச்சை முறைகளைக் கொடுக் கக் கூடியது இந்த அமைப்பு.

இந்த ஆய்வில் தெரிய வந்துள்ள சுவார ஸ்யமான விஷயங்கள்…

ஒன்று முதல் 2 நிமிடம் வரையிலான உறவு என்பது மிக மிக குறு கியது. இதில் இருவருக்குமே திருப்தி கிடைக்காது. 3 முதல் 7 நிமிடம் வரை என்பது நார்மலா னது. இதில் இருவருக்கும் முழு திருப்தி கிடைக்கும். 13 நிமிடங்கள் வரை நீடிப்பது என்பது மிகவும் நீளமானது. இதிலும் இருவருக்கும் திருப்தி இருக்கும், அதேசமயம், கூடவே சில அசவுகரியங்களை யும் சந்திக்க நேரிடும்.

எனவே 7 முதல் 13 நிமிடங்கள் வரை என்பது இரு தரப்புக்கும் ஏற்ற, பொ ருத்தமான, சரியான கால அளவா கும். அதிலும் 10 நிமிடம் என்பது மிகவும் பர்பக்ட் ஆன கால அளவு.

செக்ஸ் உறவில் திருப்தி, மகிழ்ச்சி என அனைத்தையும் அனுபவிக்க, உணர நீண்ட நேரம் தேவையில்லை, வெறும் பத்து நிமிடமே போதுமானது என்பதே இந்த ஆய்வின் முடிவு.

அதேசமயம், உறவுக்கு முந்தைய விளையாடல்கள், சீண்டல்கள் போன்றவற்றுக்கு இவ்வளவு நேரம்தான் என்று கணக்கில்லை. அது எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நீடிக்கலாம். ஆனால் உச்ச கட்ட உறவுக்கு பத்து நிமிட அவகா சம் என்பது சரியானது, பொருத் தமானது, போது மானது என்கிறது இந்த ஆய்வு.

இதுகுறித்து பென் ஸ்டேட் பல்கலைக்கழக உத விப் பேராசிரியர் எரிக் கார்ட்டி கூறுகையில், இரவு முழுவதும் உல்லாசமாக இருந் தால்தான் திருப் திகரமாக இருக்கும் என்று பலரும் நினைக்கிறார் கள். ஆனால் அது உண்மையல்ல. உண்மையில் உங்களுக்கு 7 முத ல் 13 நிமிடங்கள் அல்லது பத்து நிமிடங்கள் போதும்.

சிலருக்கு பெரும் எதிர்பார்ப்புகள் இருக் கும். நீண்ட உடலுறவைக் கொடுத்தால் தான் பார்ட்னருக்கு திருப்தி கிடைக்கும், மகிழ்ச்சி கிடைக்கும் என்று ஆண்களும், பெண்களும் எண்ணுவதால் பல அவுச கரியங்களே ஏற்படுகிறது. மேலும் அது போல நடப்பதும் இல்லை. இதனால் ஏமாற்றமும், விரக்தியும் ஏற்படுகிறது.

சில பலான படங்களில் நீண்ட நேரம் உறவு கொள்வது போல காட்டுகிறார் கள். ஆனால் பார்ப்பவர்களை குஷிப்படு த்துவதற்காக எடுக்கப்படும் செயற்கைப் படங்கள். அதில் உண்மையில்லை. அது நிறையப் பேருக்குப் புரிவ தில்லை. அதேபோல செய்ய வேண்டும் என்று இறங்கி ஏமாற்றத் திலும்,விரக்தியிலும் போய் நிற் பார்கள்.

இரவு நீண்டிருந்தாலும், நம் உற வுக்கு தேவை சில நிமிடங்கள் மட்டுமே. இதை புரிந்து கொண் டு உறவில் இறங்கினால் குழப்ப ங்கள், கவலைகள் ஏற்படுவ தைத் தவிர்க்கலாம்.

உண்மையைப் புரிந்து கொண்டு எதார்த்தமாக உறவுக்குள் நுழை வதே மனதுக்கும், நமது உடலுக் கும், செக்ஸ் வாழ்க்கைக்கும் சிறந்தது என்கிறார் கோர்ட்டி.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: