Saturday, August 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கணவரின் அரவனைப்பில் கிடைக்கும் தாம்பத்திய சுகமே ஒரு பெண்ணுக்கு கிடைக்கும் உண்மையான மன அமைதியாம்!

வீட்டு வேலைகளை முடித்துவிட்டு படுக்கைக்கு வரும் பெண்களு க்கு கிடைக்கும் மன அமைதி யே கணவரின் அணைப்பில் கிடைக்கும் தாம்பத்ய சுகம் தா ன். அதிலும் அவசரத்துடன் செயல்பட்டால் ஆண்கள் மீது கோபம் ஏற்பட வாய்ப்பு உள்ள தாக ஒரு ஆய்வு முடிவில் தெரி விக்கப்பட்டுள்ளது.

காரியம் முடிந்ததென்று கால் நீட்டி படுத்துவிடும் கணவர்கள் மீது நாளுக்கு நாள் வெறுப்புதான் அதிகமாகும் என்றும் அந்த ஆய் வில் கண்டறியப்பட்டுள்ளது. ‘தி ஜர்னல் ஆப் செக்ஸூவல் மெடி சின்’ என்ற இதழில் இந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

சுயநலம் மிக்க ஆண்கள்
5600 ஜப்பானிய பெண்களிடம் இதுதொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 50 சதவீதம் பேர், செக்ஸ் உறவுக்குப் பின்ன ரும் கூட நீண்ட நேரம் தங்களது பார்ட்னர் தங்களுடன் சேர்ந்திரு ப்பதை விரும்புவதாக தெரிவித் துள்ளனர்.

44 சதவீதம் பேர் ‘முன் விளை யாட்டை’ அதிகம் விரும்புவதாக கூறியுள்ளனர். அதாவது கிளைமேக்ஸை விட முன் விளையாட் டுதான் தங்களுக்கு அதிகம் பிடித்திருப்பதாக அவர்கள் கூறியுள் ளனர்.

38 சதவீதம் பேர் நீண்ட நேர உடலுறவே தங்களுக்குப் பிடித்திரு ப்பதாக தெரிவித் துள்ளனர். 38.8 சதவீதம் பேர் செக்ஸ் வி ளையாட்டுக்கள், முறைகள் குறித்து தங் களது பார்ட்னர்களுடன் விவாதிப் பதில் லை என்று கருத்து தெரிவித்துள்ளனர். அதேசமயம், தங்களது பார்ட்னர்கள், செக்ஸ் விஷயத்தில் ‘எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக’ இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெண்களிடம் பொதுவாக உள் ளதாம். கருத்துக் கணிப்பி்ல கலந்து கொண்டவர் களில் 30 சதவீதம் பேரில், 25.5 சதவீதம் பேர் தங்களது பார்ட்னர் கள், சுய நலம் மிக்கவர்கள் என கருத்து தெரி வித்துள்ளனர். 6.9 சதவீதம் பேர் அதிக சுயநலம் என்கிறார்கள்.

கணவர் மீது கோபம்

காதல் கனிந்து உறவைத் தொடங்கும் போது நடத்தப்படும் முன் விளையாட்டு க்கள் ஒரு ஆரம்பம்தான். ஆனால் விளை யாட்டு முடிந்த பின்னர்தான் பெண்களின் உணர்வுகள் பொங்கிப் பெருகு மாம்.

அந்தசமயத்தில், அதை பொருட்படுத்தா மல் அல்லது கவனிக்காமல், அரவணை த்து அமைதிப்படுத்தாமல், தூங்கப் போகு ம்போது தான் ஆண்கள் மீது பெண்களுக்கு கோபம் கோபமாக வருமாம்.

அன்பும் அரவணைப்பும்

முன் விளையாட்டு மட்டுமல்ல, உறவு க்குப் பிந்தைய நெருக்க மும், அன்யோ ன்யமும், அரவணைப்பும் கூட ரொம்ப முக்கியமாம். அப்போது தான் அவர்களுக்கு முழுமையான திருப்தி ஏற்படு கிறதாம்.

ஆண்களுக்கு உடலுறவு மட்டுமே முக்கிய நோக்கம். அந்த ‘டார் கெட்’ டை முடித்த வுடன் ‘ரிடயர்ட்’ ஆகி விடுகிறார்கள் என் ற பொது வான கருத்து உள்ளது.

அதேசமயம், உடலுறவை முடித்த பின்ன ரும் கூட நீண்ட நேரம் தலையைக் கோதி யபடியோ அல்லது அரவணைத்தபடியோ இருக்கும் ஆண்களைத்தான் பெண்களு க்கு மிகவும் பிடிக்குமாம்.

இப்படிப்பட்ட உறவுதான் நீண்ட காலத் திற்கு நீடிக்கும் என்றும் பெண்கள் கருதுகி றார்கள். அப்படிச் செய்யும் ஆண்கள் மீதுதான் பெண்களுக்கு காதல் உணர்வு பொங்கி வழியுமாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: