Tuesday, August 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கண்களை எப்படிப் பாதுகாப்பது?

உங்களுடைய இரண்டு கண் களையும் மூடிக் கொண்டு அப்படியே தெரு முனையில் உள்ள கடைக்குப் போய் உங் களால் பால் பாக் கெட் ஒன்று வாங்கி வர முடியுமா? ஏன் இந்த வீண் வேலை என்று கேட்கலாம். கண்களை மூடி னால் தானே பார்வையின் அருமை தெரிகிறது. உலகினைப் பார்க்க உதவும் அந்தக் கண்களை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்று என்றைக்காவது சிந்தித்தி ருப்போமா? கண்ணில் வரும் நோய்களை அலட்சியப்படுத்துகி றோம் .

முறையாக மருத்துவம் செய்து கொள்வதில்லை. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வதுதானே நமது வழக்கம் ! அதனால் தானே உலகில் இன்று 4.5 கோடிப் பேர் பார்வையில்லாமலும், 13.5 கோடி பேர் பார்வைக் குறைவாலும் துன் பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதையெல்லாம் கவனத்தில் கொ ண்டு தான் உலக சுகாதார நிறு வனம், பார்வையிழப்பைக் கட்டுப் படுத்துவதற்கான உலகளாவிய அமைப்பு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து 2020 – ம் ஆண்டுக்குள் பார் வையிழப்பைக் கட்டுப் படுத்த வேண்டி “பார்வைக்கு உரிமை” என் ற திட்டத்தைச் செயல்படு த்தி வருகிறது.

பார்வையிழப்புக்கான முக் கிய காரணங்களைப் பொது மக்களுக்கு எடுத்துச் சொல் லி, பார்வையை எப்படிப் பாதுகாக்கலாம் என்று அவ ர்களிடையே விழிப்புணர் வை ஏற்படுத்துவதற்காக இன்று (அக்.10) உலகம் முழுவதும் உலக பார்வை நாள் (World Sight Day) கடைப் பிடிக்கப்படுகிறது.

கண் புரை

கண்புரையைச் சொட்டு மருந்தால் கரைக்க இயலா து. இன்றளவில் அறுவை மருத்துவம் ஒன்றே வழி. மருத்துவர் கூறும் உரிய நே ரத்தில் அறுவை மருத்து வம் செய்து கண்ணில் விழி உள் ஆடி (Intra Ocular Lens) பொருத்திக் கொண்டு நன்றாகப் பார்க்கலாம். முன்பெல்லாம் கண்புரைக்கு மருத்துவ மனையில் ஒரு வாரம் தங்க வேண்டியிருக்கும். அதன் பின் 45 நாள்கள் வரை ஓய்வெடுக்க வேண் டியிருந்தது. ஆனால் தற்போது காலை 8 மணிக்கு மருத்துவ மனைக்குச் சென்று 8-30 க்கு அறுவை மருத்துவம் செய்து கொண்டு 9 மணிக்கு இல்லம் திரும்பி விடலாம். அந்த அளவுக்கு கண்புரை அறுவை மருத்துவம் நவீனமாகி விட் டது.

கண்ணில் பார்வைக் குறை வோடு பலர் கஷ்டப்படுவதை காண லாம். சாதாரணமாக கண்ணாடி போட்டு சரி செய்யக் கூடியதாக இருக்கலாம்.

பார்வைக் குறைவுக்கு கண்ணாடி நல்ல தீர்வு எனும் போது கண் ணாடி அணிவதற்கு வெட்கப் படக் கூடாது. உரிய நேரத்தி ல் கண் ணாடி போடாமல் வி ட்டு விட்டால், “பவர்” அதிக மாகி ஒரு நிலையில், கண் ணாடி போட்டாலும் பார்வை இருக்காது என்ற நிலை ஏற் பட்டு விடும். எனவே கண் ணில் ஏற்படும் பிரச்சினைக ளுக்கு ஆரம்ப நிலையிலே யே கண் ஆய்வு செய்து கொள்வது நல்லது.

குழந்தைக்கு அடிக்கடி கண்ணில் இமைக் கட்டி ஏற்பட்டாலோ, படிக்கும் போதும் எழுதும் போதும் கண்ணில் நீர் வடிந்தாலோ ஒரு வேளை

பார்வைக் குறைவாக இருக்க லாம். கண் மருத்துவரிடம் சென் று ஆய்வு செய்து கண்ணாடி போட வேண்டும். அடிக்கடி தலை வலி, மின்சார பல்பைச் சுற்றி ஒளி வட்டம், பக்கப் பார் வையில் குறை பாடு இருந்தால் ஒரு வேளை கண் நீர் அழுத்த உயர்வாக (Glaucoma) இருக்க லாம். இதை உரிய நேரத்தில் மருத்துவம் செய்து கட்டுப் படுத்த வேண்டும். இல்லையேல் பார்வை நரம்புகள் நசிந்து போய் விடும்.

நீரிழிவு நோயினால் கண்ணில் ஏற்படும் பாதிப்பான டயாபடிக் ரெட்டினோபதி (Diabetic Retinopathy) குறித்த விழிப் புணர்வு பொது மக்களிடையே அவ்வள வாக இல்லை. நீரிழிவு நோயினால் கண் ணின் விழித் திரை பாதிக்கப் பட்டு, அத ன் ரத்தக் குழய்களில் ரத்தக்கசிவு ஏற் படலாம். இந்நிலையில் லேசர் மருத் துவத்தால் மேற் கொண்டு பாதிப்பு ஏற்ப டாமல் கட்டுப் படுத்த முடியுமே ஒழிய, ஏற்பட்ட பாதிப்பைச் சரி செய்ய முடியாது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதற்குரிய மருத்துவம் செய்து கொள்வதோடு , 6 மாதத்திற்கொரு முறை கட்டாயமாகக் கண்களை ஆய்வு செய்து கொள்ள வேண்டும்.

கண்ணில் ஏற்படும் எல்லா சிவ ப்புகளுமே “மெட்ராஸ்-ஐ”-யி னால் ஏற்படுவதல்ல. பலவித கண் நோய்களின் வெளிப்பாடா கவும் இருக்கலாம். எனவே நீங் களாகக் கடைக்குப் போய் சொ ட்டு மருந்து வாங்கி போட்டு கண்களைக் கெடுத்துக் கொள் ளாதீர்கள். கண்ணில் ஏற்பட்ட சிவப்பு எதனால் ஏற்பட்டது என் பதை ஒரு கண் மருத்து வரால் மட்டுமே கண்டறிந்து மருத்து வம் செய்ய இயலும். சுய மரு த்துவம் செய்து கொண்டால், ஆரம்ப நிலையில் முறையான மருத்துவம் செய்து கொள்ளும் வாய்ப்பினை இழந்து போகிறீர்கள் என்பதை நினைவில் கொள் ளவும். தாமதமான நிலையில் மருத்துவரிடம் செல்லும் போது ஒரு வேளை பார்வை இழப்பு ஏற்பட்டிருக்கலாம்.

(மு. வீராசாமி – கட்டுரையாளர், கண்மருத்துவ உதவியாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர்) நன்றி தினமணி (2008)

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: