Friday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அதிஷ்டவசமாக உயிர் தப்பிய சிறுமி! மண்டை ஓட்டினுள் பாய்ந்த வாள்!

மண்டை ஓட்டினுள் பாய் ந்த வாளினால் சிறுமியொ ருவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் ஒன்று சீனாவில் இடம் பெற்றுள் ளது. Zhang Bin என்ற 15 வயதான சிறுமி யின் நெற்றிப் பகுதியில் 5 cm ஆழத்துக்கு மேற்படி வாள் சென்றுள்ளது.

சம்பவம் நடந்த உடன் குறித்த சிறுமி பக்கத்தில் உள்ள உள்ளூர் மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனா ல் அங்கு நவீன வசதிகள் இல்லாத காரணத்தினால் அங்கிருந்த மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க முடியாதென கை விரித்து விட்ட னர்.

தொடர்ந்து அச்சிறுமி 250 மைல் தூரத்திலுள்ள சீனாவின் Hunan மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு நான்கு மணித் தியா லங்கள் பிரயாணம் செய்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் பரிசோதனை யின் போது எடுக்கப்பட்ட X-ray பட த்தில் வாள் குத்தியுள்ள காட்சிகள் தெளிவாகத் தெரிகின்றன.

வாள் நெத்தியைப் பதம் பார்த்தது தொடர்பாக உயிர் பிழைத்த சிறுமி கூறுகையில்,

மூன்று பாடசாலைத் தோழிகள் என் னைப் பார்க்க வீட்டுக்கு வந்தனர். அவர்களில் ஒருத்தி கையில் வாள் வைத்திருந்தாள்.

வாள் வைத்திருந்த சிறுமி என்னிடமிருந்து 3 அல்லது 4 மீற்றர்கள் தூரம் விலகியே இருந்தார்.

ஆனால் அந்த வாள் எப்படி வந்து எனது நெத்தியைப் பதம் பார்த்தது என்று இன்னும் தெரியவில்லை.

அந்த நேரம் நான் கடுமையான வலியை உணர்ந்தேன்.. ஏராளமான இரத்தமும் கொட்டியது.

நான்கு மணி நேரம் நடந்த அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் சிறுமி யின் நெத்தியிலிருந்து வாள் நீக்கப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பாக தலைமை அறுவைச் சிகிச்சை நிபுணர் கருத்து தெரிவிக்கையில்,

அதிஷ்டவசமாக நெத்தியில் பாய்ந்த வாள் நாளங்கள், தலையின் முக்கிய நரம்புகளைப் பாதிக்கவில்லை. அவ்வாறு நிகழ்ந்திருந் தால் வேறு கதையாக இருந்திருக்கும்.

சிறுமி தற்போது பழைய நிலைக்கு மீண்டு வருகின்றார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply