Friday, March 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இன்டெக்ஸ் அறிமுகப்படுத்திய மூன்று சிம் போன்

இரண்டு சிம் என்பது இன்று கட்டாயத் தேவையாய் மாறிவிட்ட நிலையில், இன்டெக் ஸ் நிறுவனம் அண்மை யில் மூன்று சிம்களை இயக்கக் கூடிய மொ பைல் போன் ஒன்றை வடிவமைத்து விற்ப னைக்கு அறிமுகப்படு த்தியுள்ளது. இது In 5030 E Trio என அழை க்கப்படுகிறது. இதில் இரண்டு ஜி.எஸ்.எம். மற்றும் ஒரு சி.டி.எம். ஏ. சிம்களைப் பயன்படு த்தலாம். இதன் பேட் டரி நீண்ட நாள் உழைக் கும் தன்மை உடையது என்பது இதன் இன்னொ ரு சிறப்பு.

2.2 அங்குல வண்ணத் திரை, 16 மிமீ தடிமன், 110 கிராம் எடை, ஆயிரம் முகவரிகள் கொ ள்ளக்கூடிய அட்ரஸ் புக், 600 எஸ்.எம். எஸ்.களைத்தேக்கி வைக்கக் கூடிய இடம் கொண்ட நினைவகம், ரெகார்டிங் வசதியுடன் கூ டிய வயர்லெஸ் எப்.எம். ரேடியோ, 1.3 எம்.பி. திறன் கொண்ட கேமரா, 16+16 ஜிபி என இரண்டு மைக்ரோ எஸ்.டி. கார் ட் மூலம் நினைவகத்திறன் அதிகப் படுத்தல், எம் பி3 ஆடியோ பிளேயர், A2 DP இணைந்த புளுடூத் ஆகிய வசதிகள் தரப்பட்டுள் ளன. 1800mAh திறன் கொ ண்ட பேட்டரி 7 மணி நேரம் தொடர்ந்து பேசும் திற னை அளிக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய் தால், 300 மணி நேரம் தாக்குப் பிடிக்கி றது.

மூன்று சிம்களில், ஒரே நேரத்தில் ஒரு சி.டி.எம்.ஏ. மற்றும் ஒரு ஜி.எஸ்.எம். இய ங்க முடியும். டார்ச் லைட், மொபைல் ட்ரேக்கர், ஆட்டோ கால் ரெ கார்ட், அழைப்புகளுக்குத் தானாகப் பதில் அளிக்க ஆன்ஸரிங் மெ ஷின், இன்ஸ்டன்ட் மெசேஜ் கிளையன்ட் ஆகிய சிறப்பு வசதிக ளூம் உள்ளன. சில கேம்ஸ் லோட் செய்து தரப்பட்டுள்ளன. இந்தி மற்றும் ஆங்கில மொழிகளை சப்போர்ட் செய்திடும் வகையில் கீ போர்ட் தரப் பட்டுள்ளது.

இதன் அதிக பட்ச விலை ரூ.3,750. இந்தியாவில் இயங்கும் இன் டெக்ஸ் ஷோரூம்களிலும், மொபைல் சில்லரை விற்பனையாளர் களிடமும் இது கிடைக்கிறது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: