இறந்து போனதாகக் கருதப்பட்ட ஒரு நபர், 21 மணிநேரம் கழித்து, பிணவறை யிலிருந்து உயிருடன் எழுந்து வந்த சம்பவம், தென் ஆப்ரிக்கா வில் நடந் துள்ளது. தென் ஆப்ரிக்கத் தலை நகர் ஜோகன்ன ஸ்பர்க்கில் உள்ள ஒரு குடும்பத்தினர், ஆஸ்துமாவில் இற ந்து போன 80 வயதான தங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவரின் உடலைப் பெற் றுக் கொள்ளும்படி, அங்குள்ள குளிர் பதன பிணப் பாதுகாப்பு சேவை மைய த்துக்குத் தகவல் அனுப்பினர்.
அதன் பின், இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளைச் செய்யத் துவங்கினர்.பாதுகாப்பு மைய உரிமையாளர் மக்கோலா, தன் ஓட்டு னரை அனுப்பி அந்த சடலத்தை எடுத்து வரும்படி செய்தார்.
பிணப் பாதுகாப்பு மையத் தில், பிணங்கள், அடுக்கடுக் காக திறந்த பீரோ தட்டுக ளில் அடுக்கி வைக்கப் படும். அதேபோல், ஓட்டுனர் கொ ண்டு வந்த சடலமும் வைக் கப்பட்டது.
ஆனால், 21 மணி நேரம் கழித்து, திடீரென அந்த அறையில் இருந்து “உதவி, உதவி’ எனக் கத்தும் குரல் கேட்டது. அறைப் பணியாளர் கள் ஏதோ ஆவி தான் கத்துகிறது என்று அலறி அடித்துக் கொண்டு, உரிமையாளரிடம் தகவல் கொடுத்தனர். அவரும் அறைக்குள் போக பயந்து போய், போலீ சுக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் வந்து பார்த்த போது, இறந்து போனதா கக் கருதப்பட்ட அந்த நபர், உயிருடன் இருந்தது தெரி ந்தது. அதன்பின், பீரோ தட் டில் இருந்து வெளியில் அவர் இழுக்கப்பட்டார்.
சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சேர்க்கப்பட் டார். தகவல் அறி ந்த அவரது குடும்பத்தினர், இறுதிச் சடங்குகளை நிறுத்தி விட்டு சந்தோஷப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சிக்குள்ளான, பிண பாதுகாப்பு மைய உரி மையாளர், ஒரு நாள் முழுவதும் தூங்க முடியாமல் கிலியுடன் இருந் ததாகத் தெரிவித்தார்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்