Saturday, June 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எக்ஸெல் டிப்ஸ் (28/07)

புதியவர்களுக்கு எக்ஸெல்
பல சிறிய அலுவலகங்களில், கடைகளில் பணி புரிவோர் திடீ ரென கம்ப்யூட்டர் பயன்பாட்டி ற்க்கு மாறிக் கொள்ள வேண்டிய சூழ் நிலைக்கு மாறிக் கொள்ள வே ண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கடைகளுக்கேற்ற பணிகளு க்கு புரோகிராம் செய்யப்பட்ட வேர்ட் டாகுமெண்ட்டு க ள், எக் ஸெல் ஒர்க் ஷீட்டுகள் தரப்படு கின்றன. சில நாள் பயிற்சி க்குப் பின்னர் இவர்கள் இவற் றைப் பயன்படுத்தத் தொ டங்கி, பின்னர் தாங்களாகவே கூடுதல் வேலைகளையும் மேற்கொள்ளக் கற்றுக் கொள்கின்றனர்.

தொடக்கத்தில் எக்ஸெல் ஒர்க்புக் ஒன்றை அறிமுகம் செய்து கொள் பவருக்கு அது என்ன என்று இங்கு விளக்கப்படுகிறது.

– ஒரு லெட்ஜரில் எப்படி பல பக் கங்கள் இருக்கின்றனவோ அது போல எக்ஸெல் ஒர்க் புக்கில் ஒர்க் ஷீட்கள் அமைக்கப்படுகி ன்றன.

– ஒர்க் ஷீட் என்பது நெட்டுவகை யிலு படுக்கை வகையிலுமாக அமைக்கப்பட்ட செல்களின் தள மாகும்.

– ஒரு செல்லில் கர்சரை அமைக்க மவுஸ், கீ போர்ட், அல்லது எணி கூணி கட்டளை உதவுகின்றன.

– ஒரு ஒர்க்புக்கிலிருந்து ஒரு ஒர்க் ஷீட்டை இணைக்கலாம் மற்றும் நீக்கலாம்.

– ஒர்க் ஷீட்களை வேறு ஒரு ஒர்க்புக்கிற்கு மாற்றலாம்; நக லெடுத்து இணைக்கலாம்.

– ஒர்க் ஷீட்டின் பெயரை எப் போது வேண்டும் என்றாலும் மாற்றலாம்.

– ரேஞ்ச் என்பது செல்களை ஒரு குழுவாக அமைப்பது. இந்த ரேஞ்ச்களை செலக்ட் செய்வத ற்கும் பல்வேறு வழிகள் உள்ளன.

– செல்களையும் ரேஞ்ச்களையும் அதன் தொடர்புகளை வைத்துச் சுட்டிக் காட்டலாம்

– ஒர்க் ஷீட்களை எக்ஸெல் பார் மட் மட்டுமின்றி வேறு வகையான பைல் பார்மட்டுகளிலும் சேவ் செய்திடலாம்

– ஒர்க் ஷீட்களை இணைய பக்கங் களாகவும் சேவ் செய்திடலாம்.

– ஒர்க் புக்குகளைத் தேட பல்வேறு வகையான தேடல் வழிகளை மேற் கொள்ளலாம்.

ஏரியா பிரிண்ட்
எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றைப் பெரிய அளவில் அமைக்கிறீர்கள். சில நேரங்களில் ஒரு குறிப் பிட்ட சில செல்களை மட்டு ம், அச்செடுத்து அதில் தவறு கள் உள்ளனவா, அல்லது வே று மாதிரி மாற்றி அமைக்க லாமா என்று திட்டமிட எண் ணுகிறீர்கள். அப்போது அந்த குறிப்பிட்ட செல்களை மட்டும் பிரிண்ட் எடுக்க வேண்டும் அல்ல வா? இதற்கான வழி என்ன? அதுதான் ஏரியா பிரிண்ட்.

எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் நீங்கள் அச்சிட விரும்பும் செல்களை ம ட்டும் ஓர் ஏரியாவாகப் பிரித்து வைத்து பிரிண்ட் எடுக்கலாம். எந்த செல்களை பிரிண்ட் எடுக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ, அவ ற்றைத் தேர்ந்தெடுத்து விட்டு பைல் மெனு அழுத்தி அதில் Print Area என்பதைக் கிளிக் செய்தால், இரண்டு ஆப்ஷன்ஸ் காட்டப் படும். Set Print Area, Clear Print Area என அவை அமைந்திருக்கும். இதில் Set Print Areaவை அழுத்தி அமைத் திடலாம். இது எப்போதும் அமை க்கப்பட்ட நிலையிலேயே அமை யும். அடுத்து இன்னொரு பிரிவு செல்களை அமைத்து பிரிண்ட் ஏரியா அமைத்தால், முதலில் அமைத்தது தானாக எடுக்கப்பட்டுவிடும். ஆனால் அடுத்து அமை க்கப்பட்டது, செலக்ட் செய்யப்பட்ட ஏரியாவாகவே இருக்கும். இதனையும் நீக்க வேண்டும் என்றால், முன்பு போல பைல் மெனு வில் செட் பிரிண்ட் ஏரியா ஆப்ஷன்ஸ் பெற்று, Clear Print Area வை அழுத்த வேண்டும்.

உங்கள் தொகுப்பு எக்ஸெல் 2007 ஆக இருந்தால், கீழ்க்காணும் வகையில் பிரிண்ட் ஏரியாவை கிளியர் செய்திடலாம்.

1. ரிப்பனில் Page Setup டேப்பைத் தேர்ந் தெடுக்கவும்.

2. இந்த பேஜ் செட் அப் குரூப்பில், Print Area என்பதைக் கிளிக் செய்திடவும். இங்கு காட்டப்படும் ஆப்ஷ ன்களில் Clear Print Areaவைக் கிளிக் செய்திடவும்.

எக்ஸெல் பார்முலா பிரிண்ட்
எந்த வேலையை கம்ப்யூட் டரில் மேற்கொண்டாலும் (வேர்ட் டாகுமெண்ட், எக் ஸெல் ஒர்க் ஷீட் போன்ற வை) அதனை பிரிண்ட் எடு த்து புரூப் பார்ப்பவரா நீங்கள்! அப்படியானால் எக்ஸெல் ஒர்க் ஷீட் டில் பார்முலாக்களை எப்படி பார்ப்பீர்கள்? பார்முலாவின் முடிந்த வேல்யூ தானே பிரிண்ட்டில் கிடைக்கும். பார்முலாவை பிரி ண்ட் செய்திட எப்படி செட் செய் யலாம் என்பதனைப் பார்ப் போம். முதலில் Tools மெனு சென்று அதில் Options என்ற பிரிவில் கிளிக் செய் திடவும். பின் கிடைக்கும் விண்டோவில் View என்ற டேபில் என்டர் தட் டவும். இந்த விண்டோவில் விண்டோ ஆப்ஷன்ஸ் என்ற பிரி வில் பார்முலாஸ் என்று கொடுக்கப் பட்டிருப்பதற்கு எதிராக கிளிக் செய்திடவும். இங்கு ஓகே கிளிக் செய்தவுடன் நீங்கள் உங்கள் ஒர்க் ஷீட்டிற்குத் திரும்புவீர்கள். அங்கே பார்த்தால் உங்கள் பார்முலா விற்கான வேல்யூ இருந்த இடத்தில் பார்முலா இருக்கும். இனி பிரி ண்ட் செய்தால் பார்முலா மட்டும் கிடைக்கும். நீங்கள் அதன் தவறு களைத் திருத்திவிட்டுப் பின் மீண்டும் பார்முலாவில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்து விட்டால் மீண்டும் வேல்யூக்களோடு பிரி ண்ட் எடுக்கலாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: