Tuesday, November 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ந‌லமுடன் வாழ, நடை பழுகு!

டாக்டர் ந.ஆறுமுகம் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை

“யாதும் ஊரே, யாவரும் கேளிர்!” என்ற கணியன் பூங்குன்றன் வரிக ளை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போ ம். இதற்கு அடுத்த வரி, “நன்றும் தீதும் பிறர் தரவாரா!” இதன்பொருள் “நன்மையும் தீமை யும் அடுத்தவர்களால் வராது. நமக்கு நாமே காரணம்! நமது உடலுக்கு வரும் நோய்க்குக் காரணம் நாம்தான். சரிவிகித உணவு முறை, தேவையான அளவு தண்ணீர், முறையான உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, உண்ணா நோ ன்பு ஆகிய ஆரோக்கிய வழிமுறைகளைப் பின்பற்றினால் நோயி ன்றி நலமுடன் வாழ முடியும்.

மேற்கண்டவற்றில் உடற்பயிற்சி பற்றி சற்று விரிவாகப் பார்ப் போம். தற்போதைய விஞ்ஞான யுகத்தில், பரபரப்பான வாழ்க்கை முறையில் எல்லா வயதினரும் முறை யான உடற்பயிற்சி செய்வது கடினம்.

இதற்கு சரியான மாற்று வழி என்ன?

நடைப்பயிற்சி ஒன்றுதான்! ஆண், பெண், சிறு வர் சிறுமியர் வயது முதிர்ந்தவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது நடைப் பயிற்சிதான்!

நடைப்பயிற்சியில் சாதாரண நடை, வேக நடை, நடை ஓட்டம், ஓட்டம் இப்படி பல வகை உண்டு. அவரவர் வயது, உடல்நிலை, சூழ் நிலை, மனநிலைக்கேற்ப நடைப்பயிற்சியில் ஈடுபடலாம்!

நடைப்பயிற்சிக்கு முன்:

* முதல்நாள் இரவு உணவை நீங் கள் தூங்கப்போவதற்கு மூன்று மணி நேரம் முன்னதாகவே உண் ண   வேண்டும்.

*தூங்குவதற்கு முன்பாக பல் துல க்க வேண்டும்.

* இரவு 10 மணிக்குப் பிறகு அவ சியம் தூங்கிவிட வேண்டும்.

* காலை 4 மணி முதல் 5 மணிக்குள்ளாக படுக்கையிலிருந்து எழுந் துவிடவேண்டும்.

* எழுந்தவுடன் வாய் கொப்பளித்துவிட்டு 6 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

* மலச்சிக்கல் இல்லாமல் காலைக் கடனை முடிக்க வேண்டும்.

* மலச்சிக்கல் இருப்பின் “இயற்கை எனி மா” கருவி மூலம் குடலைக் கழுவ வேண்டும்.

* நடைப்பயிற்சிக்கு முன் எதுவும் சாப்பிடக்கூடாது.

நடைப்பயிற்சி:

* போக்குவரத்து இல்லாத, சுற்றுப்புறக் காற்று மாசுபடாத நிலை யில் உள்ள இடத்தில் நடக்க வேண்டும்.

* வயல் வெளிகளில் நடக்கலாம்.

* வீட்டு மொட்டை மாடி, வீட்டுத் தாழ்வாரம் ஆகிய இடங்களில் நடக் க லாம்.

* வீட்டுக்கு வெளியில் போக முடி யாத சூழ்நிலையில் உள்ள பெண் கள் 10 x 10 உள்ள தாழ்வாரம், கூடம், அறையில் “8” என்ற எண்களை வரைந்து அதன் மேலேயே நடந்து பழகலாம்.

* கடற்கரை ஓரம், ஏரிக்கரை, குளக் கரை, கண்மாய்க்கரை ஆகிய இட ங்களில் நடக்கலாம்.

* நடக்கும்போது தலைநிமிர்ந்து, நெஞ்சு நிமிர்த்தி, இரு கைக ளையும் நன்றாக வீசி பட்டாள நடை நடக்க வேண்டும்.

* உடல் முழுதும், வியர் த்துக் கொட்டினாலும் கவ லைப்படாமல் நடக்க வேண்டும்.

* தினமும் காலை குறை ந்தது மூன்று கிலோ மீட் டர் தூரம் நடக்க வேண் டும். தூரத்தை விட நேர ம் தான் முக்கியம்.

* மாலையில் உடலில் வெய்யில்படுமாறு நடந்தால் மிக நல்லது!

நடப்பதால் என்ன நன்மை?

* உச்சி முதல் உள்ளங்கால் வரை இரத்த ஓட்டம் ஒரே சீராக இயங்கும்.

* உடலும், மனமும் இளமையாகவு ம், நாள் முழுவதும் புத்துணர்ச்சியு டனும் இருக்கும்.

* நரம்பு மண்டலங்கள் சுறுசுறுப்பாக இய ங்கும்.

* நுரையீரல் வலுவடையும், மார்புச் சளி குணமாகும்.

* இதயம் சீராக இயங்கும். நாளமில்லாச் சுரப்பிகள் புத்துணர்ச்சி யடையும்.

* குண்டான உடல் மெலியும், தொப் பை மறையும்.

* மன அழுத்தம் குறையும். மனதில் உற்சாகம் பிறக்கும்.

* ஆஸ்துமா, நீரிழிவு, இரத்த அழுத் தம் ஆகிய நோய்கள் குணமாகும்.

* கண் பார்வை தெளிவாகும். இர வில் நன்றாகத் தூக்கம் வரும்.

* முதுகு கூன் விழாமல் நிமிர்ந்து நிற்கும்.

* இடுப்பு சதைகள் மறையும். உடலில் உள்ள அசுத்தம் முழுவதும் வியர்வை மூலம் வெளியேறும்.

* உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு குறைந்து உடல் உறுதி யடையும்.

* நாள் முழுவதும் எவ்வளவு உழைத்தாலும் சோர்வு இருக் காது.

* நோயின்றி நீண்ட நாட்கள் வாழ முடியும்.

* முதுகு வலி, மூட்டு வலி குண மாகும். உடலிலுள்ள திசுக்களு க்கு உயர்க்காற்று நிறைய கிடைக்கிறது.

* கால்களின் தசைகளுக்கு தாங்கும் சக்தி கிடைக்கும்.

* மன இறுக்கம் (டென்ஷன்) குறைந்து தன்னம்பிக்கை பிறக்கும்.

* சிந்திக்கும் ஆற்றல் பெருகும்.

* உடல் முழுவதும் மின்சாரம் பாய் வது போல் அற்புத உணர்வு பரவும்.

* மாலை வெய்யிலில் தினமும் நடந் தால் தோல் நோய்கள் வராது.

மற்ற எல்லா உடற்பயிற்சிகளையும் விட, நடைப்பயிற்சியே மிகவும் எளிமையானது. சிறந்தது. டாக்டர், மருந்து, மாத்திரை, காசு செலவில் லாதது நடைப்பயிற்சி. நடைப் பயி ற்சி முடிந்து வியர்வை அடங்கியபிறகு சுமார் பதினைந்து நிமிடங் களுக்கு ப்பின், தண்ணீர், பழச்சாறு, அருகம்புல் சாறு குடிக்கலாம். நடை ப்பயிற்சி முடிந்து அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் தலைக்கு ஊற்றிக் குளிக்க வேண் டும். இதனால் தலை யில் உள்ள சூடு குறைந்து மறையும். தலைக்குத் தண்ணீர், ஊற்றிக் குளிக்காமல், உட ம்பில் மட்டும் படுமாறு குளித்தால் உடலின் சூடு முழுவதும் தலைக்குச் சென்று ஏதேனும் நோய் வரலாம். நடைப்பயிற்சியின் போது உடலி லுள்ள 72,000 நாடி நரம்புக ளுக்கும் இரத்தம் பாய்ந்து சுறுசுறுப்பு அடை கிறது.

“நடைப்பயிற்சி செய்யாதவர்களுக் கெல்லாம் மரணம் ஒவ்வொரு இரவும் படுக்கையைத் தட்டிப் போடு கிறது” என்பதை மறவாதீர்கள். “சூரிய ஒளி, தண்ணீர், காற்று, சரி விகித உணவு, நடைப்பயிற்சி, சரியான ஓய்வு இவை ஆறும் உங்க ளிடம் காசு வாங்காத டாக்டர்கள்!” என்பதை நினைவில் கொள்ளு ங்கள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply