Saturday, September 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாகிஸ்தான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுத்த அமெரிக்கா, பிரிட்டன்

“கடந்த 1970களில், பாகிஸ்தான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, அதை தடுக்கும் முயற்சியில், அமெரிக்கா வும், பிரிட்டனும் ஈடுபட்டன’ என, தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக் காவின் தேசிய பாதுகாப்பு ஆவண காப்பகத்திலிருந்து, சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. குறி ப்பாக, கடந்த 1970ம் ஆண்டு களில், பாகிஸ்தான், அணு ஆயுதம் தயா ரிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, அதை தடுப்பதற்கு, அமெரிக்கா மேற் கொண்ட முயற்சிகள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி யுள்ளன.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கடந்த 1978 – 81 வரையிலான காலகட்டத்தில், ஆணு ஆயுதம் தயாரிப்பதற்கான முயற்சியில் பாகிஸ்தான் ஈடு பட்டு இருந்தது. பஞ் சாப் மாகாணத்தில் உள்ள சாஸ்மா என்ற இடத்தில், அணு உலை அமைக்கும் நடவடிக்கை களில், பாகிஸ்தான் ஈடு பட் டது. இதற்கு தேவையான செறிவூட்டப் பட்ட யூரேனியம் மற் றும் தொழில்நுட்ப உதவிகளை, அணுசக்தி அளிக்கும் நாடுக ளிடமி ருந்து பெறுவதற்கு, பாகிஸ்தான் முயற்சித் தது. இதுகுறித்து தக வல் அறிந்த, அமெரிக்கா வும், பிரிட்டனும், இந்த முய ற்சிக்கு முட் டுக்கட்டை போட் டன. அணுசக்தி தொடர் பான வசதிகளை அளிக் கும் நாடுக ளுக்கு, அமெரிக்காவும், பிரிட்ட னும், உத்தர வுகளை பிறப்பித்தன. பாகிஸ்தானுக்கு அணுசக்தி தொடர்பான உதவி களை அளிக்கக்கூடாது என்ற உத்தரவும், அதில் முக்கி யமானது. இதையடுத்து, சாஸ்மாவில் அணு உலை அமைப் பதற்கான உத விகளைச் செய்ய முன்வந்த பிரான்ஸ் அரசு, தன் திட்டத்தை கைவிட்டது. இது, பாகிஸ்தான் ஆட்சியாளர்களிடையே கோபத் தை ஏற்படுத்தியது. பாகிஸ்தானின் அணு ஆயுத முயற் சிக்கு, பிரி ட்டனும், அமெரிக்காவும், தொடர்ந்து முட்டுக் கட்டை போட்டு வந்தாலும், இந்த முயற்சி பெரிய அளவில் வெற்றி பெற வில்லை. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பாகிஸ்தான் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்சியில் ஈடுபடுவது குறி த்து, இந்திய உளவு அமைப்புகள் நன்கு தெரிந்து வைத்திருந் தன. தன்னை விட, இரண்டு அல்லது மூன்றாண்டு களுக்கு முன்பே, அணு ஆயுதம் தயாரிக்கும் தொழில் நுட்பத்தை, பாகிஸ்தான் பெற் று விடும் என்பதை, இந்திய உளவு அமைப்புகள் தெரிந்து வைத் திருந்தன. ஆனாலும், அமெரிக்காவும், பிரிட்டனும், இந்தியாவை பொருட்படுத்தவில்லை என்பதும், அமெரிக்க ஆவ ணங்களின் மூலம் தற்போது தெரியவந்துள்ளது. மேலும், இந்த ஆவ ணங் களில், பாகிஸ்தான் அணு ஆயுத விஞ்ஞானி ஏ.க்யூ.கான் பற்றிய எந்த தகவலும் இடம் பெறவில்லை.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply