Thursday, September 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வெள்ளாடு வளர்ப்பு

வெள்ளாடு “”ஏழைகளின் பசு” என்று அழைக்கப் படுகிறது. இது மானாவாரி நிலம் சார்ந்த பண்ணை யத் தொகுப்பின் முக்கிய அங்கம் ஆகும். மேட்டுப்பாங்கான நிலங்க ளில் பசுக்களையும், எருமைகளை யும் வளர்க்க இயலாது. எனவே இத்தகைய சூழலுக்கு உகந்தது. வள ர்ப்பில் குறைந்த முதலீட்டைக் கொ ண்டு நல்ல லாபம் பெறலாம்.

ஒரு ஆட்டுக்கு 15 சதுரடி: வளர்ந்த ஒரு ஆட்டுக்கு பதினைந்து சதுர அடி இடம் தேவைப்படும். நாம் வளர்க்க எண்ணும் ஆடுகளுக்கேற்ற அளவில் பட்டி அமைத்துக் கொள்ளலாம். செம்மறி ஆடாக இருந்தால், நைலான் வலையிலே யே பட்டி அமைக்கலாம். வெள்ளாடுகளுக்கு கம்பி வலை அல்லது சுவர் மூலமாகத்தான் அமைக்க வேண்டும். பட்டிக்குள் கிடாக்கள், குட்டிகள், சினை ஆடுகள், வளரும் ஆடுகள் என தனித்தனியாகப் பிரித்து அடைத்து வைப்பதற்காக தனித்தனிக் கொட்டகைகள் அமைக்க வேண்டும்.

தண்ணீர் கவனம்: காலை ஒன்பது மணி அளவில் ஆடுகளை மேய்ச் சலுக்கு அனுப்பிவிட்டு, கொட்டகைகளை சுத்தம் செய்துவிட வே ண்டும். பதினோரு மணி அள வில் ஆடுகளுக்கு அடர் தீவ னம் கொடுக்க வேண்டும். பின் கடலைப் பிண்ணாக்கு ஊற வைத்த தண்ணீர் கொடுக்க வேண்டும். தோட்டங்களில் தே ங்கி நிற்கும் தண்ணீரைக் குடிக் கவிட்டால் நோய்கள் தொற்ற வாய்ப்பு இருக்கிறது. அதனால் தண்ணீர் சுத்தமாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண் டியது அவசியம்.

வெயில் நேரத்தில் மேய்ச்சல் வேண்டாம்: வெயில் அதிகமாக அடிக்கும் மதிய நேரத்தில் ஆடுகளை மேயவிடும் போது சோர் ந்துவிடும். அந்த நேரங்களில் பட்டி யில் அடைத்துவிட்டு வேலி மசால், முயல் மசால், கோ-4 மாதிரி யான பசுந்தீவனங்களை நறுக் கிப்போட வேண் டும். தினமும் வேறு வேறு தீவனங்களை மாற்றி மாற்றிக் கொ டுப்பது நல்லது. பகல் மூன்று மணிக்குப் பிறகு ஐந்த ரை மணி வரை மேய்ச்சலுக்கு அனுப்ப லாம். மூன்று மாதங்க ளுக்கு ஒரு முறை ஆடுகளுக்கு குட ற்புழு நீக்கம் செய்ய வேண் டும். ஒவ் வொரு பருவத்து க்கும் போடவேண்டிய தடுப் பூசிகளைக் கட்டாயம் போட் டு வர வேண்டும்.

இரண்டு வருடத்தில் மூன்று ஈற்று எட்டு மாதத்தில் இருந்து ஒரு வருடத்திற்குள் பெட்டை ஆடுகள் பருவத்துக்கு வந்துவிடும். அந்த சமயத்தில் நல்ல தரமான கிடாக்களோடு சேர்த்துவிட வேண்டும். ஆட்டுக்கு சினைப்பருவம் ஐந்து மாதங்கள். குட்டி போட்ட இரண்டு மூன்று மாதங்களில் அடுத்த பருவத்திற்கு தயாராகிவிடும். எட்டு மாதத்திற்கு ஒரு முறை குட்டி ஈனுவதால், சராசரியாக இரண்டு வருடத்தில் மூன்று முறை குட்டி ஈனும். ஒரு ஈற்றுக்கு இரண்டு குட்டிகள் கிடைக்கும். நாற்பது நாட்கள் வரை குட்டிகளை தாய் ஆட்டிடம் பால் குடிக்கவிட்டு பிறகு பிரித்துவிட வேண்டும். அப் போதுதான் தாய் ஆடு சீக்கிரம் பருவத்திற்கு வரும். தொடர்புக்கு: ஆர். ஜி.ரீஹானா, அக்ரி கிளினிக், 268/77, பழைய ஹவுசிங் யூனிட், தாராபுரம்-638 657.
ஆர்.ஜி.ரீஹானா,
தாராபுரம்-638 657.
மொபைல்: 89037 57427.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply