Wednesday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வேர்ட் டிப்ஸ் (29/07)

எளிதில் பைல் பெற்றுத் திறக்க
வேர்ட் தொகுப்பில் பைல் ஒன்றைத் திற க்க Open மெனுவில் கிளிக் செய்கி றோம். அந்த விண் டோவில் கிடைக்கும் பட்டி யலில் அனைத்து டாகுமெண்ட் பைல்க ளும் கிடைக்கி ன்றன. ஆனால் நாம் விரும் பும் பைலை, இந்தக் குவியலில் தேடி எடு க்க நேரமாகிறது. இதனைத் தவிர்க்க என் ன செய்யலாம்? இதற் கான சுருக்கு வழி ஒன்று உள்ளது.

வேர்ட் Open டயலாக் பாக்ஸைத் திறந்து காட்டி, அதன் கர்சர் , File Name என்ற கட்டத்தில் நிற்கிறது. நீங்கள் N என்ற எழுத்தில் தொட ங்கும் டாகுமெண்ட் பைல்களின் பட்டியலை மட்டும் பெற விரும் பினால், N*.doc என டைப் செய்து என்டர் தட்டவும். உடன், அந்த ட்ரைவில் உள்ள டைரக்டரிகள், அல்லது போல்டர்கள் முதலாவ தாகவும், பின்னர் N என்ற எழுத்தில் தொடங்கும் பைல்கள் அடுத் ததாகவும் கிடைக்கும். இனி இதில் நீங்கள் விரும்பும் பைலைத் தேர்ந்தெடுத்து திறக்க லாம். அதிக பைல்களை ஒரு போல்டரில் வைத்திருக் கையில் இந்த கட்டளை உங் களுக்குப் பயன் தரும். டாகுமெண்ட் பைல் கள் மட்டுமின்றி, வேறு எக்ஸ்டன்ஷகள் கொ ண்ட பைல்களையும் பட்டியலிட்டுக் கேட்கலாம். எடுத்துக்காட் டாக, டெக்ஸ்ட் பைல் ஒன்றைத் திறக்க வேண்டும் எனில் பொதுவாக *.txt எனக் கொடு த்துப் பெறலாம். இந்த வகைப் பைல் களில் S என்ற எழுத்தில் தொட ங்கும் பைல் மட்டும் வேண்டும் எனில், S*.txt என டைப் செய்து பட்டியலைப் பெற லாம்.

வேர்ட் 2010ல் கூடுதல் வசதி
வேர்ட் 2010ல் தரப்பட்டுள்ள புதிய வசதியான Backstage வியூ, நம் பைலுடன் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் பெற உதவிடுகிறது. உங்களுடைய குழுவில் உள்ள மற்றவர்கள், இந்த டாகுமெண்ட்டைப் பார்த்திருந்தால், எடிட் செய்திருந்தால், அதனை அறிந்து கொள்ள முடிகிறது. File டேப் கிளிக் செய்து, அதில் Info தேர்ந்தெடுத்தால், இந்த தகவல்களைப் பெறலாம். வலது புறம் உள்ள பிரிவில் இவை காட்டப்படுகின்றன. இந்த ப்ராப்பர்ட்டீஸ் தகவல்களை, ஒரு டாகுமெண்ட் பேனலில் (Document Panel) இணைத்துக் கொள்ளவும் இங்கு வசதி தரப்பட்டுள்ளது.

டெக்ஸ்ட் அடிக்கோடிடுதல்
வேர்ட் டாகுமெண்ட்டில் சொற்களை மற்ற வற்றிலிருந்து வேறு படுத்திக் காட்ட அவற் றிற்கு அடிக்கோடு இடப்படும் வசதி தரப் பட்டுள்ளது. இதில் இரண்டு வகை உள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து சொற்களின் அடியிலும் முழு மையான கோடு வேண்டும் என்றால் கண்ட்ரோல் + யு (Ctrl +U) கீகளை அழுத்த வேண்டும். சொற்களுக்கு இடையே உள்ள இடை வெளியிலும் கோடு வரை யப்படும்.

ஆனால் சொற்களின் அடியில் மட்டும் கோடு வேண்டும் என விரும்புபவர்கள் வேறு கீகளைக் கையாள வேண்டும். அவை (Ctrl+Shft+W) கண்ட்ரோல்+ ஷிப்ட்+டபிள்யு.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: