Saturday, August 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சாம்சங் கேலக்ஸி எஸ் 2

உலகின் சில நாடுகளில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகப் படுத்தப் பட்ட சாம்சங் காலக்ஸி எஸ் 2 மொபைல் போன், அதன் விற்ப னையில் புதிய சாதனையைப் படைத்து வருகிறது. அறிமுகப் படுத்தப் பட்டு 55 நாட்களில் 30 லட்சம் போன்கள் விற்பனை செய்யப்பட்டு ள்ளன. அதாவது, சராசரியாக நாளொன்றுக்கு 55,000 போன்கள் விற்பனையா கியுள்ளன. இதுவரை தன்னு டைய போன்களிலேயே மிக வேகமாக விற்பனை செய்யப்படும் போன் இது என சாம்சங் அறிவி த்துள்ளது.

ஐரோப்பா மற்றும் ஆசிய நாடு களில் மட்டுமே இந்த போன் கி டைக்கிறது. இந்த அளவிற்கு விற்பனையானதும் அந்த நாடு களில் தான். அமெரிக்கா மற்றும் கனடாவில் இன்னும் இவை விற்பனை க்குக் கொண்டு வரப் படவில்லை. மற்ற நாடுகளிலும் இது அறிமுக ப்படுத் தப்படுகை யில் விற்பனை மிக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. தற்போது கொரியாவில் தான் இதற்கு அதிக எதிர்பார்ப்பு.

நம் நாட்டிலும் இது கிடைக்கிறது. இந்த அளவிற்கு விரும்பப்படும் வகையில் இதன் சிறப்புகளைப் பார்க்கலாமா! மல்ட்டி டெஸ் க்டாப் இடைமுகத்துடன் ஆண் ட்ராய்ட் வி2.3 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. இதில் 1.2எஏத் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் கார்டெக்ஸ் (Cor- tex) ப்ராசசர், 1 ஜிபி ராம் நினை வகத்துடன் தரப்பட்டுள் ளது. போன் மெமரி 16ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார் ட் மூலம் 32 ஜி.பி. வரை உயர்த்தலாம். கருப்பு வண்ணத்தில், பார் டைப்பில் ஒரு சிம் இயக்க போனாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வீடியோ அழைப்புக்கான கேமராவும், பி ன் பக்க கேமராவும் உள்ளன. வழக்கமான கேமரா 8 எம்பி திறன் கொண்டது. டிஜிட்டல் ஸூம் மற்றும் டிவி அவுட்புட் வசதிகளுடன் இது இயங்கு கிறது.

எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசஞ்சர், புஷ் மெயில் என தொடர்பு வசதிகள் கிடைக்கின்றன. எம்பி3 பிளேயர், ஆர்.டி. எஸ். ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ இசைப் பிரியர்களுக்கென உள்ளன. 3ஜி, வை-பி, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ். ஆகியவை நெட் வொர்க் இணைப்பி னைத் தருகின்றன.

4.3 அங்குல சூப்பர் AMOLED ஸ்கிரீன் திரை நம் விழிகளுக்கு விருந் தளிக்கிறது. 8.49 மிமீ மட்டுமே தடிமன் கொண்ட வகையில் மிக மிக ஸ்லிம்மான போனாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.29,000.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: