Tuesday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திட்டமிட்டப்படி 1-ந்தேதி போராட்டம் நடைபெறும் : தி.மு.க. தலைவர் கருணாநிதி

தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று நிருபர்களுக்கு பேட்டியளி த்தார். அதன் விவரம் வரு மாறு:-
கேள்வி:- தி.மு.க. பொரு ளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. வினரை கைது செய்யப்பட்டு இருக் கிறார்களே?
பதில்:- இப்போதுதான் செ ய்தி வந்திருக்கிறது. தி. மு.க. ஆட்சியில் எதிர்க் கட்சியினர் போராட்டம் நடத்தினால் அவர்களை எப்படி நட த்தினோம் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் இப்போது ஜெய லலிதா ஆட்சியில் போலீசார் அத்துமீறி செயல்படுகிறார்கள்.
கேள்வி:- தி.மு.க. அறிவித்தபடி வருகிற 1-ந்தேதி போராட்டம் நடை பெறுமா?
பதில்:- திட்டமிட்டப்படி 1-ந்தேதி போராட்டம் நடைபெறும். போலீ ஸ் அராஜகத்தை கண்டித்தும், சொ த்து அபகரிப்பு என்ற பெயரில் பொய் வழக்கு போடுவதையும் கண்டித்தும் அமைதியான முறையில் அறவழி யில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
கேள்வி:- தொடர்ந்து பொய் வழக்கு போடப்பட்டால் உங்கள் தலைமை யில் போராட்டம் நடைபெறுமா?
பதில்:- அவசியப்பட்டால் எப்படி எதிர்கொள்வது என்பதை சிந்தித்து செயல்படுவோம்.
கேள்வி:- சொத்து குவிப்பு வழக்கை மறுவிசாரணை செய்யக் கூடாது என்று பெங்களூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால் கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா?
பதில்:- ஜெயலலிதாவுக்கு காரணம் தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply