Wednesday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மு.க. ஸ்டாலின் கைது

தி.மு.க.  பொருளாளர் மு.க.ஸ்டாலின் மன்னார் குடியில் இன்று இர வு நடக்க இருந்த தி.மு.க. பொதுக்குழு விளக்க கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தஞ்சை சென்றார். அங்கிருந்து அவர் திருவாரூக்கு காரில் சென்றார். திரு வாரூர் மாவட்ட எல்லையான திருத் துறைப்பூண்டி அருகே கோவில்வன்னி என்னுமிடத்தில் அவருக்கு வரவேற்பு கொடுக்க திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன் மற்றும் ஏராளமான தி.மு.க. வி னர் திரண்டிருந்தனர்.
மு.க.ஸ்டாலின் வந்ததும் அந்த பகுதிக்கு போலீசார் விரைந்து வந்தனர். நேற்று சமச்சீர் கல்வியை எதிர்த்து தி.மு.க.வினர் போரா ட்டம் நடத்தியபோது பள்ளியில் இருந்து மாணவர்கள் பஸ்சில் திரும்பியபோது கொரடச்சேரி அருகே பஸ் கவிழ்ந்து விஜய் என்ற மாணவர் பலியானார்.
இதற்கு பூண்டி கலைவாணன்தான் கார ணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. அந் த வழக்கில் அவரை கைது செய்ய போலீ சார் வந்திருந்தனர். இதற்கு மு.க. ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பூண்டி கலைவாணனை ஒப்படைக்க இயலாது என்று கூறி சாலை மறிய லில் ஈடுபட்டார். இதனால் அவரை போலீ சார் கைது செய்தனர். அவருடன் முன் னாள் அமைச்சர்கள் அழகு திருநாவுக் கரசு, மதி வாணன் மற்றும் விஜயன் எம்.பி. உள்பட 300 பேர் கைது செய்ய ப்பட்டனர்.
NEWS IN MALAIMALRA MAGAZINE

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply