Sunday, August 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எச்.ஐ.வி. எப்படி எய்ட்ஸாக மாறுகிறது?

எச்.ஐ.வி. கிருமி மனிதனின் உடலில் நுழைந்த உடனே சிடி-4 மற் றும் மேக்ரோபாஜ், நரம்பு செல் போன்ற அணுக்களை அணுகி அவ ற்றினுள் சென்றுவிடுகிறது. இந்த வகை செல்கள்தான் நோய் கிருமி களை அழிக்கும் செல்கள்.

அவற்றினுள் நுழைந்த எச்.ஐ.வி. கிருமி அவற்றினுள் பல்கிப் பெரு குகின்றது. இத்தகைய பெருக்கம் அதிகமாகும் போது அந்த செல் (நோய் தடுப்புச் செல்) வெடித்து அதிலிருந்து இலட்சக்கணக்கான வைரஸ் கிருமிகள் வெளிவருகின்றன. அப்படி வெளிவரும் வை ரஸ் கொல்லப்பட்டாலும் சில வைரஸ் கிருமிகள் புதிய செல்களு க்குள் ஊடுருவி விடுகின்றன. இப்படியாக சிடி-4 செல்களின் எண் ணிக்கை உடம்பில் படிப்படியா கக் குறைந்துவிடுகிறது.

தற்போதைய கணக்குப்படி ஒரு நாளைக்கு எச்.ஐ.வி. பாதிக்கப் பட்டவரின் உடலில் நூறு கோடி வைரஸ் கிருமிகள் உருவாகிக் கொல்லப்படுகின்றன. மற்றும் ஒரு நாளைக்கு ஐந்து முதல் ஆறு விழுக்காடு சிடி-4 லிம்போ சைட்டும் உற்பத்தியாகி அழிகி றது. இவை இரண்டின் அளவை வைத்தும்தான் எச்.ஐ.வி. நோயின் தீவி ரத்தை நாம் கண்டறிய முடியும்.

சிடி-4 செல் அளவு உடலில் குறைந்தால் பல நோய்கள் வர வாய்ப்பு உண்டு. அதாவது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதால் பல் வேறு நோய்கள் உண்டாகின்றன. இந்த நிலையே எய்ட்ஸ் எனப் படுகிறது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: