Saturday, September 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குசும்பா சாகுபடி

மானாவாரி (நவம்பர்) கே 1, கோ 2. நிலம் தயாரித்தல்: நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை டிராக்டர் கலப்பை யால் (அ) ஐந்து முறை நாட்டு கலப்பையால் உழ வேண்டும். பின் மண்ணி ல் உள்ள கட்டிகளை உ டைத்து நுண்மைப் படுத்த வேண்டும்.

தொழு உரமிடுதல்: நிலம் தயாரித்த பிறகு 12.5 டன் தொழு உரம் (அ) மக்கிய தென்னை கழிவு இடவேண்டும். தொழு உரமானது உழுவதற்கு முன் இடப் பட வில்லையெனில், கடைசி உழவுக்கு முன் தொழு உரத்தை இட்டு மூடவேண்டும்.

விதையும் விதைப்பும்: விதை அளவு எக்டேருக்கு 10 கிலோ.

விதை நேர்த்தி: ஒரு கிலோ விதையுடன் 4 கிராம் திரம் அல்லது கார்பன்டசிம் மருந் தைக் கலந்து 24 மணி நேரம் கழித்து விதைக்க வேண்டும். இவ்வாறு விதைநேர்த்தி செய் வது வேர் அழுகல் நோயிலி ருந்து பயிரினைப் பாதுகாக்கும்.

விதைக்கும் முறை: விதைகளை 2 முதல் 3 செ.மீ. ஆழத்தில் வரிசையாக நடவு செய்ய வேண்டும். விதைகளை கொரு அல்லது நாட்டுக் கலப்பை மூலமாக வரிசையில் நடவு செய்யலாம்.

டைவெளி: நடவு செய்யும் போது வரிசைகளுக்கு இடை யே உள்ள இடைவெளியானது 45 செ.மீ. ஆகவும், வரிசையில் உள்ள செடிகளுக்கிடையே உள் ள இடைவெளியானது 15 செ.மீ. இருக் குமாறும் விதைக்க வே ண்டும். விதைத்த 15ம் நாள் செடிக்குச் செடி 15 செ.மீ. இடை வெளி விட்டு செடிகளை களை த்துவிட வேண்டும்.

உரமிடுதல்: பயிருக்குத் தேவையான தழைச்சத்தான 20 கி/எக்டர் அடியுரமாக இடவேண்டும். களைக்கட்டுப்பாடு விதைத்த 25 நாள் மற்றும் 40 நாள் ஆகிய இருமுறை களைளை, களைக்கொத்தி மூலமாகவோ கைக் களையாகவோ எடுக்க வேண்டும்.

அறுவடை: முதிர்ந்த இலைகள் மற்றும் முழுச்செடியும் பழுப்பு நிற மாக மாறுவது முதிர்ச்சியைக் குறிக்கும். அறுவடை செய்யப்பட்ட பயிரினை களத்தில் வைத்து, கொண்டைகளைப் பறித்து உலர்த் திய பின் விதைகளைத் தனியே பிரித்தெடுத்து வெயிலில் உலர்த்தி சுத்தம் செய்ய வேண்டும். அறுவடைக்குப் பின் விதைக ளை நன்கு உலர்த்திய பின்பே கோணிகளில் சேமிக்க வேண்டும்.

எம்.அகமது கபீர்,
தாராபுரம்-638 656.
மொபைல்: 93607 48542.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply