Friday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தமிழக பட்ஜெட் (2011-12)-ன் முக்கிய அம்சங்கள்

தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் 2011-12-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்க ளாவன:

  * சென்னை மாநகர குடிநீர் சேமிப்பு கொள்ளளவு 4.20 டி.எம்.சியாக உயர்த்தப்படும்.

* ஓசூரில் சர்வதேச தரத்துடன் கோழி வளர்ப்பு மேலாண்மை மையம் அமைக்கப்படும்.

* சூரிய சக்தி தெருவிளக்கு திட் டத்துக்கு ரூ.248 கோடி ஒதுக் கீடு. ஆண்டுக்கு 20 ஆயிரம் கிராமங்கள் வீதம் அமல்படு த்தப்படும்.

* நுண்ணுயிர் பாசன திட்டம் அமைக்க விவசாயிகளுக்கு நூறு சதவீத முன்னுரிமை அளிக் கப்படும்.

* உணவு தானிய சேமிப்புக் கிடங்குகளுக்கு ரூ.237 கோடியில் திட்டம் அமல்படுத்தப்படும்.

* மானிய விலையில் 5 ஆயி ரம் புல்வெட்டிகள் விவசாயி களுக்கு வழங்க ஏற்பாடு செய் யப்படும்.

* சேலம் மற்றும் திருநெல் வேலியில் சைபர் க்ரைம் குற்றப்பிரிவு நிறுவப்படும்.

* ஆழ்கடல் மீன் பிடிப்பு ஊக் குவிக்க நடவடிக்கை.

* விசைப்படகுகள் எண்ணிக்கை உயர்த்த திட்டம். அதன்படி, நடப்பு ஆண்டில் புதிதாக 500 விசைப் படகுகள் வழங்க மானிய விலையில் கடன் ஏற்பாடு செய்யப்படும்.

* 13 மீன் பிடி நகரங்களில் மீன் பதப் படுத்தும் மையம் அமைக்கப்படும்.

* ரூ.74 கோடியில் புதிய மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்படும்.

* நாகை, பழையாறில் நவீன மீன் பிடித் துறைமுகம் அமைக்கப்படும்.

* ஏரி, அணை, கால்வாய்கள் ரூ.367 கோடி செலவில் சிரமைக்கப்படும்.

* நெல்லை, ஒரத்தநாடு பகுதிகளில் புதிதாக கால்நடை மருத்துவ கல் லூரிகள்.

* கூட்டுறவுத் துறை மூலம் கடன்பெற்று உரிய முறையில் திருப்பி செலுத்துவோருக்கு சலுகை.

* வட்டியில்லா பயிர்க்கடனாக ரூ.3 ஆயிரம் கோடி வழங்க இலக்கு.

* காய்கறி, தோட்டக்கலைப் பயிர் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை.

* கூட்டுறவு விற்பனை இணையத்துக்கான வட்டியில்லா முன்பணம் ரூ.150 கோடியாக உயர்வு.

* 4 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் பசுமைக்குடில் அமைக்கப்படும்.

* காவ‌ல்துறையை ந‌வீன‌ப் படு‌ த்த ரூ.51 கோடி ஒது‌க்‌கீடு.

* சென்னை மாநகர காவல் துறையுடன் புறநகர் காவல் துறை இணைக்கப்படும்.

* சிறைச்சாலை மேம்பாட்டுக் காக ரு.117 கோடி ஒதுக்கீடு.

* ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு.

* சென்னை அருகே கடல்நீரை குடிநீராக்கும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

* காவிரி ஆற்றின் குறுக்கே முத் தரச நல்லூரில் தடுப்பணை கட்டப் படும். இதற்கான ஒதுக்கீடு ரூ.32 கோடி.

* ரூ.130 கோடியில் நீதிமன்ற ங்களுக்கு சொந்த கட்டடம் கட்டித் தரப்  படும்.

* ஸ்ரீர‌ங்க‌ம் தொகு‌தி‌யி‌ல் தே‌சிய ச‌ட்ட‌ப்ப‌ள்‌ளி அமை‌க்க‌ வழி வகை செய்யப்படும்.

* நடப்பு நிதி ஆண்டில் 111 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி.

* நடப்பு நிதியாண்டில் கலப்பின மாடுகள் வழங்க ரூ.56 கோடி ஒதுக்கீடு.

* 5 ஆண்டுகளில் 60 ஆயிரம் கறவை மாடுகள் வழங்கப்படும்

* ஏழை குடும்பங்களுக்காக தலா 4 ஆடுகள் வீதம் வழங்க ரூ.135 கோடி ஒதுக் கீடு.

* தீயணப்புத்துறை புதிய கருவிகள் வாங்க நவீனப்படுத்த புதிதாக 10 கட்டடங்கள் கட்டத் திட்டம். இதற்கு ரூ.170 கோடி ஒதுக்கீடு.

* போடிநாயக்கனூரில் புதிய அரசு பொறியியல் கல்லூரி தொடங்க ஏற்பாடு.

Thanks Vikatan

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply