Friday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நான் என்ன என்கவுன்டர் குற்றவாளியா…? – வடிவேலு

நிலமோசடி தொடர்பாக நடிகர் வடிவேலு தலைமறைவாகி விட்டதாக வந்த செய் தியை அடுத்து, வடிவேலு தான் எங் கும் ஓடவில்லை என் றும், தலைமறைவாக இருப்பதற் கு நான் என்ன என் கவுன்டர் குற்றவாளியா என்று கூறி யுள்ளார். தாம்பரம் அரு கேயு ள்ள இரும்புலியூர் பகுதி யில், தமிழ்நாடு தொ ழில் முதலீட்டு நிறுவனம் ஏலத் தில் விட்ட நிலத்தை ரூ.20 லட்சத்திற்கு வாங்கி யதாக வும், அதை போலி ஆவணம் தயாரித்து நடிகர் வடி வேலு வாங்கியுள்ளதா க, சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி பழனியப்பன் என்பவர் புகார் கொடுத் திருந் தார். இந்தவழக்கு குறி த்து போலீசார் விசா ரித்து வருகின்றனர். இந் நிலையில் நடிகர் வடி வேலு தலைறைவாகி விட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் வடிவேலோ நான் எங்கும் ஓட வில்லை, போலீசார் எப்போது கூப்பிட் டாலும் விசாரணைக்கு வரு வேன் என்று கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியி ல், நிலமோசடி செய்ததாக என் மீது புகார் கொடுத்துள்ளனர். மேலும் நான் தலை மறைவாகிவிட்டதாவும் செய்திகள் வெளியாகியுள்ளன. உண்மையை சொல் லணும்னா, இதில் ஏமாந்தவனே நான் தான். வாங்கிய இடத்தை பறிகொடுத்து போய் நிற்கிறேன். 2002-ல் அந்த நிலத் தை எனக்கு விற்றார்கள். 2006-ல் அங்கு காம்பவுண்டு சுவர் போட்டேன். 2009-ல் பழனியப்பன் வாங்கியதாக உரிமை கொ ண்டாடிட்டு வந்து நின்னார். நான் பதறி போனேன். அவர் 2006-ல் அந்த இடத்தை வாங்கியதாக சொன்னார்கள். இ.சி. பார் த்து இருந்தால் என் பெயர் வந்து இரு க்கும். அதை எப்படி வாங்கினார் என்று புரியவில்லை. ஒரிஜி னல் பத்திரம் காணாமல் போச்சு என்று விற்றவர் மே ல் கோர்ட்டில் வழக்கு போட்டு இருக்கிறேன். அந்த நபர் யார் என்று மக்களுக்கு தெரியும். பழனியப்பன் செங்கல்பட்டு கோர்ட்டில் 2009-ல் என் மேல் வழக்கு போட் டார். 2011 வரை அவர் கோர் ட்டுக்கே வரவில் லை. முக் கியமான ஒருத்தர் மூலமா ரூ.1கோடி தந்தால் விலகிக்கி றேன் என்றார். நான் மறுத்து விட்டேன். இர ண்டு வழக்குகள் மீதும் விசா ரணை நடந்துட்டு இருக்கு.

உலகம் பூரா குழந்தைகள், பெண்கள், வயசானவங்க, இளைஞர்கள் என எல்லாரை யும் சிரிக்க வைச்சு சம்பாதித் த பணத்தில்தான் இந்த சொத் துக்களை வாங்கினேன். ஆனால் மோசடி பத்திரம் மூலம் இதை வாங்கியதாக சொல்றாங்க. நான், என் பொண்டாட்டி, குழந்தை எல்லோரும் போலி பத்திரம், தயாரிக்கிறத குடிசை தொழிலாவா செய்துட்டு இருக்கோம். எனக்கு படிப் பறிவு குறைவு, பத்திரங்க ளில் உள்ள விஷயங்கள் தெரியாது. அதனால் ஏமாற் றப்பட்டேன்.   என் குல தெய்வமான அய்யனார்சா மி முன்னால் நின்று பண த்தை கொடுத்தேன். எல் லாத்தையும் வாங்கிட்டு, மோசடி சொத்தை வாங்கி கொடு த்து என்னை ஏமாற்றி விட்டனர். என் மீதான புகாரை சட்ட ரீதியா சந்திப்பேன்.

நிலமோசடி புகாரில் போலீஸ் தேடுது, நான் தலைமறை வா யிட்டேன் என்றெல்லாம் செய்தி வருது. நான் எங்கும் ஓடல, அப்படியே போனாலும் ஒண்ணு சென்னைக்கு போவேன்,  இல்லேன்னா மதுரைக்கு போவேன். போலீஸ் தேடலுக்கு பயந்து போய் ஒளிய, நான் என்ன எனகவுன்டர் குற்றவாளி யா…? நான் எங்கும் ஓட மாட்டேன். போலீஸ் எப்ப கூப்பி ட்டாலும் விசாரணைக்கு போவேன் என்றார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: