Monday, June 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நோய்களை உண்டாக்கும் கொசு விரட்டிகள்

நகர்புறங்களில் கொசுத் தொல்லைகளுக்கு ஆளாகாதவர்களே கிடையாது. பெடரும் முதல் பாத்ரும்வரை ஏ.சி. பயன்படுத்துபவ ர்கள் மட்டுமே இதில் இருந்து தப்பிக்கின்றனர். மற்றவர்கள், கொ சுக்களிடம் தினமும் கடி வாங்கிக் கொள் கின்றனர்.

நகர்புறங்களில் கொசுத் தொல்லைகளுக்கு ஆளாகாதவர் களே கிடையாது. பெடரும் முதல் பாத்ரும்வரை ஏ.சி. பயன் படுத் துபவர்கள் மட்டுமே இதில் இருந்து தப்பிக்கின்றனர். மற்றவர்கள், கொசுக்களிடம் தினமும் கடி வாங்கிக் கொள்கின் றனர்.

அப்படி கடி வாங்கப்போய், சில நோய்களும் இலவசமாக வந்து விடுவதால், அதில் இருந்து தப்பி க்க கொசு வர்த்திச் சுருள், கிரீம் மற் றும் மேட்களை பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாகி விடு கிறது. இப்படி பயன்படுத்துவது ஆபத்தில் போய்தான் முடியும் என்று எச்சரிக் கிறார்கள் டாக்டர்களும், விஞ்ஞானிகளும்!

கொசுவர்த்திச் சுருள்களிலும், மேட்களிலும் செயற்கையாக த் தயா ரிக்கப்பட்ட பல்வேறு ரசாயனக் கலவைகள் பயன்படுத்தப்படுகின்ற ன. இந்த ரசாயனங்களின் அட ர்த்தி, நாம் இக்காற்றை சுவா சிக்கும் கால அளவு, அறையி னுள் வரும் புதிய காற்றின் அளவு ஆகிய வற்றைப் பொறு த்து இதனால் நமக்கு ஏற்படும் தீங்குகளின் அளவு நிர்ணயிக் கப்படுகிறது.

பொதுவாக மாலைநேரங்களி ல்தான் கொசுக்கள் வீடுகளு க்குள் படையெடுக்கும். அந்தநேரத்தில் கதவு, ஜன்னல்களை பூட்டி விடுவது வழக்கம். அப்படிச் செய்வதால், வீட்டிற்குள் புதிய காற்று வருவது தடை செய்யப்பட்டு விடுகிறது.

காற்று வர வழியில்லாமல் முற்றிலும் அடைபட்ட நிலை யில் உள்ள வீட்டின் அறைகளுக்குள் விளக்குகளை எரிய விடுவது, சமைப்பது, அவைகளுக்கு மத்தியிலேயே வீட்டில் உள்ள அனை வரும் சுவாசிப்பது… போன்றவற்றால் பிராண வாயுவான ஆக்ஸிஜ னின் அளவு குறைந்துபோய் விடுகிறது.

இந்த சூழ்நிலையிலும், வீட்டிற்குள் புகு ந்து விடும் கொசுக் களிடம் இருந்து தப்பிக்க கொசுவர்த்திச் சுருள், மேட் ஆகி யவற்றை பயன்படுத்துகிறோம். இப்படிச் செய்வ தால், அவற் றில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையும், தீங்கு ஏற்ப டுத்தும் வாயுக்களும் மட்டுமே வீட்டிற் குள் அதிகம் உள்ள சூழ் நிலை ஏற்படு கிறது. ஆக்ஸிஜனின் அளவு மிகவும் குறைந்து போய் விடுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் வீட்டில் உள் ளவர்கள் சுவாசிக்கும் போது, அவர்களின் உடலுக்குள்ளும் காற்றின் வழியாக நச்சுத் தன்மை புகுந்து விடு கிறது.

முன்னறிவிப்பு இன்றி உடலுக்குள் புகு ந்த இந்த நச்சுத் தன் மையை விரட்ட உடலானது எதிர்வினை புரிகிறது. அத ன் தொடர்ச்சியாக, ஜலதோஷம், சளி பிடித்தல், காய்ச்சல் போன்ற வை ஏற்படுகிறது. சிலருக்கு அலர்ஜி என்கிற ஒவ்வாமையும் இத னால் ஏற்பட்டு விடுகிறது. அத்துடன், மேலும் பல பாதிப்புகளையும் நம் உடல் ஏற்க வேண்டிய நிலை உருவாகிவிடுகிறது.

கொசுவை விரட்டுவதற்காக ஒருவர் தொடர்ந்து கொசுவர்த்திச் சுருள், மேட் ஆகியவற்றை பயன் படுத்தி வந்தால், அவருக்கு நுரையீரலில் ஒருவித ஒவ் வாமை ஏற்படுகிறது. இதனால் நுரை யீரல் முழுமையாக விரிவடையாம லும், அதன் கொள்ளளவுக்கு உரிய காற்றை எடுத்துக்கொள்ள இயலா மலும் போய் விட வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வுகளில் நிரு பித்துள்ளனர்.

கொசு மேட்டில் இருந்து வெளி வரும் புகையை அப்போது பிற ந்த அல்லது பிறந்து சில மாத ங்களே ஆன பிஞ்சுக் குழந்தை கள் சுவாசித்தால், அவர்க ளுக்கு வலிப்பு நோய் ஏற்படு வதற்கான வாய் ப்புகள் இருப் பதாக கூறி எச்சரிக்கிறது லக் னோ பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு.

மும்பையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கொசு விரட்டிக ளில் பயன்படுத்தப்படும் ரசாயனம் சிலருக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்தக்கூடியது என்பதும் உறுதி செய்யப் பட்டுள்ளது.

இதுதவிர, கொசு விரட்டியில் உள்ள டயேக்சின் புற்று நோயை உரு வாக்கக்கூடியது. அலெத்ரின் மனிதர்களின் உடல் எடையை மெல் ல மெல்ல இழக்கச் செய்யும் தன்மை கொண்டது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: